-

Loading latest news...

*In A Kingdom Built By Women, Keerthy Suresh And Radhika Apte Collide In A Gangster Saga Netflix and YRF Entertainment’s 'Akka' Premieres October 30, 2026*.

 *In A Kingdom Built By Women, Keerthy Suresh And Radhika Apte Collide In A Gangster Saga Netflix and YRF Entertainment’s 'Akka' Premieres October 30, 2026*. 



*Marking Keerthy Suresh’s birthday, the Akka teaser introduces Bhavani, Rudra and the kingdom of Pernuru*


Netflix unveils the teaser for Akka, released today as a special birthday treat for Keerthy Suresh and her fans, the teaser introduces Keerthy as Bhavani and Radhika Apte as Rudra, two formidable women at the heart of Pernuru, a kingdom shaped by deep-rooted traditions, shifting power dynamics and simmering rivalries. 


Produced by YRF Entertainment, Akka is an epic gangster saga where women take centerstage, the show marks the directorial debut of Dharmaraj Shetty, who has also written the series. Set in the 1980s, Akka unfolds in a richly imagined kingdom shaped by generations of women who built, governed and protected Pernuru. Celebrating her birthday alongside the special announcement of Akka, 


Keerthy Suresh said, “The love I receive from the audience every year makes this day incredibly meaningful, and being able to celebrate it by unveiling the teaser of Akka, a project so close to my heart, feels truly special. Bhavani is one of the most unique and memorable characters I have had the opportunity to play. It was lovely working with Radhika. Our characters bring such compelling dynamics to the story and the interplay between them adds an intriguing edge to the narrative.Akka marks my first series with Netflix and YRF Entertainment and what drew me to this project was the distinctiveness of its story and the world it inhabits. I am looking forward to audiences immersing themselves in this world and discovering the many facets of Bhavani as her story unfolds.”


Radhika Apte adds, “It's wonderful that the date announcement and the teaser drop of Akka has coincided with Keerthy's birthday. I am sure it is going to be lucky for us. Rudra is a fascinating character, driven by her own convictions and an instinct to challenge the world around her. What drew me to the series was the complexity of its characters and the tensions that emerge from their differing perspectives. Having been associated with Netflix across several projects over the years, I’ve had the opportunity to be part of some distinctive storytelling journeys, and Akka is another intriguing addition to that association. Collaborating with YRF Entertainment on a story with such layered characters has been a rewarding experience, and I look forward to audiences discovering Rudra and the many dimensions of her journey.”


Filled with compelling characters, intense rivalries and a world shaped by its own rules, Akka premieres October 30, only on Netflix.


Title Information


DIRECTOR: Dharmaraj Shetty       

WRITER: Dharmaraj Shetty

PRODUCER: YRF Entertainment  

EXECUTIVE PRODUCER: Aditya Chopra, Yogendra Mogre, Akshaye Widhani                                                                         

KEY CAST: Keerthy Suresh, Radhika Apte, Tanvi Azmi 



About Netflix:

Netflix is one of the world’s leading entertainment services offering TV series, films, games and live programming across a wide variety of genres and languages. Members can play, pause and resume watching as much as they want, anytime, anywher on e, and can change their plans at any time.


About Yash Raj Films (YRF):

Founded in 1970 by the late Yash Chopra, Yash Raj Films (YRF) is India's leading privately owned film studio and one of the country's most respected entertainment companies. Headquartered in Mumbai, for over five decades, YRF has been producing acclaimed films, launching new talents, collaborating with some of the industry's biggest stars, and expanding the global reach of Indian cinema.

As a fully integrated entertainment studio, YRF operates across the entire filmmaking and content ecosystem, including production, post-production, domestic and international distribution, music, digital content, marketing, talent management, licensing, merchandising, brand partnerships, and studio operations. India's premier state-of-the-art filmmaking facilities, YRF continues to drive creative excellence and industry innovation while shaping the future of Indian entertainment.

*சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு

 *சுஹாஸ் (Suhas) நடிக்கும் ‘ஹைட் & சில்க்’ (‘Hide & Silk’ ) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு! 



*ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ (Stone Bench Studio ) –மிஸ்ரிலால் பிக்சர்ஸ் (Misrilall Pictures) நிறுவனங்கள் இணைந்து புதிய திரைப்படத்தைத் தயாரிக்கின்றன!*


ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஹைட் & சில்க்’ (Hide & Silk). சுஹாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்களுக்காக நடிகர் வருண் தேஜும், தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் சூரியும் இப்படத்தின் டைட்டில் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். படத்தின் வித்தியாசமான கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை இந்தப் புரோமோ ஏற்படுத்தியுள்ளது.


ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இதுவரை 18 திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது தெலுங்குத் திரையுலகிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தும் அவர், நான்கு திரைப்படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார். அந்த வரிசையில் உருவாகும் முதல் திரைப்படம் ‘ஹைட் & சில்க்’. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. இந்தப் புதிய முயற்சியில் கார்த்திகேயன் சந்தானத்தின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் வர்திகா ஜெயினின் மிஸ்ரிலால் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.


‘மண்டாடி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுஹாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். ‘லப்பர் பந்து’, ‘DC’ ஆகிய படங்களில் நடித்துள்ள சஞ்சனா, மூத்த நடிகர் தனிகெல்லா பரணி, நந்து மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேந்திர பாலா, இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இது அவர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமாகும்.


வெளியாகியுள்ள டைட்டில் ப்ரோமோ, படத்தின் தனித்துவமான உலகத்தை அறிமுகப்படுத்துகிறது. அதில், பட்டுப் புடவைகளை நெய்யும் நெசவாளரின் வாழ்க்கையும், நவீன காலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையும் ஒன்றோடொன்று சந்திக்கும் தருணம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


ஒவ்வொரு பட்டுப் புடவைக்கும் அதை அணிய வேண்டிய ஒரு பெண் விதிக்கப்பட்டிருக்கிறாள்; அந்தப் புடவையின் உண்மையான அழகு அதை நெய்யும் செயல்முறையைத் தாண்டியும் இருக்கிறது என்ற கவித்துவமான சிந்தனையை நெசவாளரின் குரல் வெளிப்படுத்துகிறது. நெசவாளர் புடவையை உருவாக்கிக் கொண்டிருக்கும்போதே, அந்தப் புடவை தனக்குரிய பெண்ணைத் தேர்ந்தெடுக்கிறது என்ற சுவாரசியமான கருத்தும் புரோமோவில் இடம்பெற்றுள்ளது. முற்றிலும் மாறுபட்ட இரு உலகங்களைச் சேர்ந்தவர்களின் சந்திப்பு, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.


தொழில்நுட்பக் குழுவிலும் குறிப்பிடத்தக்க கலைஞர்கள் இணைந்துள்ளனர். ஒளிப்பதிவை கார்த்திக் பழனி மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை ஷஃபீக் முகமது அலி கவனிக்கிறார். ‘3 BHK’ படத்தின் மூலம் கவனம் பெற்ற அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார்.


‘அனிமல்’, ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சுரேஷ் செல்வராஜன் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றுகிறார். ஜஷுவா சண்டைக் காட்சிகளையும், பிரவீன் ராஜா ஆடை வடிவமைப்பையும் கவனிக்கின்றனர். ஷெரீப் நடன இயக்குநராகவும், மோகன் ராஜன் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றனர். ஒலி வடிவமைப்புப் பணிகளை சுரேன் ஜி மற்றும் அழகிய கூத்தன் மேற்கொள்ள, ஒலி கலவைப் பணிகளை சுரேன் ஜி கவனிக்கிறார். அமோல் போடகே கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார்.


கார்த்திகேயன் சந்தானம் மற்றும் வர்திகா ஜெயின் இணைந்து தயாரிக்கும் ‘ஹைட் & சில்க்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீடு மற்றும் இதர விவரங்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


நடிகர்கள்: சுஹாஸ், சஞ்சனா, தனிகெல்லா பரணி, நந்து, கருணாகரன்.


தொழில்நுட்பக் குழு


* எழுத்து, இயக்கம்: ராஜேந்திர பாலா

* தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், வர்திகா ஜெயின்

* ஒளிப்பதிவு: கார்த்திக் பழனி

* படத்தொகுப்பு: ஷஃபீக் முகமது அலி

* இசை: அம்ரித் ராம்நாத்

* தயாரிப்பு வடிவமைப்பு: சுரேஷ் செல்வராஜன்

* சண்டைப் பயிற்சி: ஜஷுவா

* ஆடை வடிவமைப்பு: பிரவீன் ராஜா

* நடன இயக்கம்: ஷெரீப்

* பாடலாசிரியர்: மோகன் ராஜன்

* கலை இயக்கம்: அமோல் போடகே

* ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி, அழகிய கூத்தன்

* ஒலி கலவை: சுரேன் ஜி

* தயாரிப்பு நிறுவனங்கள்: ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, மிஸ்ரிலால் பிக்சர்ஸ்


*Suhas’ ‘Hide & Silk’ Title Glimpse Unveiled; Kaarthikeyan Santhanam’s Stone Bench Studio marks new collaboration with Vartika Jain of Misrilall Pictures*


Stone Bench Studio and Misrilall Pictures have unveiled the title promo of Hide and Silk, starring Suhas in the lead role. The promo was released by actor Varun Tej for the Telugu audience and actor Soori for the Tamil audience, generating curiosity around the film’s intriguing premise.


Producer Karthikeyan Santhanam of Stone Bench Studio is known for his immaculate body of work, producing 18 films across Tamil and Malayalam. And now, he is stepping into Telugu cinema with a slate of four films, beginning with Hide & Silk. The film is set to release in both Tamil and Telugu. For this venture, Stone Bench joins hands with Vartika Jain of Misrilall Pictures.


Following his massive success with Mandaadi, Suhas takes on the lead role in this upcoming film, which brings together an interesting ensemble of actors and an accomplished technical team. The film also stars Sanjana, known for her performances in Lubber Pandhu and DC, alongside veteran actor Tanikella Bharani, who plays a pivotal role. The cast includes Nandu and Karunakaran.


Written and directed by Rajendra Bala, an erstwhile associate of acclaimed filmmaker Karthik Subbaraj, Hide and Silk marks his directorial debut. The newly released title promo offers a glimpse into the film’s distinctive world, introducing a silk-weaver whose path crosses that of a modern woman. His evocative narration explores a poetic thought: every saree has a woman destined to wear it, and its true beauty goes beyond the process of weaving. Even as the weaver works, the saree is choosing the woman it belongs to.The contrast between their worlds sets the stage for an intriguing narrative, with the promo hinting at a story that promises to pique audience interest.


The film boasts a strong technical team, with cinematography by Karthik Palani, editing by Shafique Mohamed Ali, and music composed by Amrit Ramnath, known for his work in 3 BHK. The technical crew also includes production designer Suresh Selvarajan of Animal and Petta fame, stunt choreographer Jashuva, costume designer Praveen Raja, choreographer Sherif, lyricist Mohan Rajan, sound designer Suren G and Alagiya Koothan, Sound Mix by Suren G, along with art director Amol Bodake.


Hide and Silk is produced by Kaarthikeyan Santhanam and Vartika Jain. With its intriguing premise, promising cast, and fresh directorial voice, Hide and Silk is gearing up for release soon. More details about the film are expected to be announced in the coming days.


Cast: Suhas, Sanjana, Tanikella Bharani, Nandu, Karunakaran


Technical Crew:


Written & Directed by: Rajendra Bala

Produced by: Kaarthikeyan Santhanam and Vartika Jain

Cinematography: Karthik Palani

Editor: Shafique Mohamed Ali

Music: Amrit Ramnath

Production Designer: Suresh Selvarajan

Stunts: Jashuva

Costume Designer: Praveen Raja

Choreographer: Sherif

Lyricist: Mohan Rajan

Art Director: Amol Bodake

Sound Design: Suren G, Alagiya Koothan

Sound Mix: Suren G

Production Houses: Stone Bench Studio and Misrilall Pictures


https://www.youtube.com/watch?v=zZgpcVnYjAU

‘பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா

 ‘பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட்!’ – ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற புதிய அடையாளத்துடன் பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தும் சோனி விழா!



உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், தமிழர் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் எனப் பல்வேறு அம்சங்களுடன் விரிவான பொழுதுபோக்கு உலகை உருவாக்கும் சோனி விழா!


தமிழ் ரசிகர்களுக்கு உலகத் தரத்திலான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் வகையில், புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகள் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தனது புதிய நிகழ்ச்சித் தொகுப்பை சோனி விழா (Sony VIZHA) அறிமுகப்படுத்தியுள்ளது.


தமிழர்களின் கலாச்சார வேர்களுடன் இணைந்த கதைகளையும், நவீன பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சித் தொகுப்பு அமைந்துள்ளது. உலகளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சி வடிவங்களின் தமிழ் வடிவங்கள், ரசிகர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் புதிய முயற்சிகள் எனப் பலதரப்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன. உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ற வகையில், அவர்களின் கலாச்சார அடையாளத்துடனான தொடர்பையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த அறிமுகத்தின் முக்கிய அம்சங்களாக, உலகளவில் புகழ்பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளின் தமிழ் வடிவங்களான ‘தமிழ் ஐடல்’ (Tamil Idol) மற்றும் ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்’ (Celebrity MasterChef Tamil) ஆகியவை இடம்பெறுகின்றன. இசை மற்றும் சமையல் போட்டிகளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சிகள், ‘பாட்டு, சமையல்’ என்ற பொழுதுபோக்கு அம்சங்களை முன்னிலைப்படுத்துகின்றன.


மேலும், 90-களின் காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் ‘நோட்புக் 90’ஸ் – காதல் ஃப்ளாஷ்பேக்’, உண்மையான குற்றச் சம்பவங்களின் பின்னணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘கிரைம் பேட்ரோல் – குற்றங்கள் தரும் எச்சரிக்கை’, பெண் காவலர்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் எடுத்துரைக்கும் ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’ ஆகிய நிகழ்ச்சிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 


திரைப்பட ரசிகர்களுக்காக ‘அன்பில் அவன்’, ‘அசரீரி’, ‘சர்தார் 2’, ‘மண்டாடி’, ‘ராஜன் வகையறா’, ‘மீசைய முறுக்கு 2’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களையும் சோனி விழா வழங்கவுள்ளது.


விளையாட்டுத் துறையிலும் தனது பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான அடுத்ததாக நடைபெறவுள்ள இருதரப்பு டி20 சர்வதேசத் தொடரின் ஐந்து போட்டிகளுக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வினின் தமிழ் வர்ணனையை சோனி விழா வழங்கவுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டைத் தாய்மொழியில் ரசிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.


சோனி விழாவின் இந்தப் புதிய முயற்சியின் மையமாக, ‘இது நம்ம வைப்ஸ்’ (Ithu Namma Vibe) என்ற பிராண்ட் அடையாளம் அமைந்துள்ளது. தமிழ் கலாச்சாரம், மக்கள் மற்றும் கதைகளைக் கொண்டாடும் இந்த அடையாளம், ரசிகர்களுக்கு நெருக்கமான அதே நேரத்தில் புதுமையான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


உலகளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சி வடிவங்களையும், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற கதைகள் மற்றும் அனுபவங்களையும் ஒன்றிணைப்பதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து அனைத்து வயதினரையும் இணைக்கும் பொழுதுபோக்கு தளமாக உருவெடுக்க சோனி விழா திட்டமிட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஒரே உலகமாக வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.


Comments:


ராஜாராமன் சுந்தரம், தென்னிந்தியப் பிராந்தியத்தின் தலைமை உள்ளடக்க அதிகாரி, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) கூறியதாவது:


“தமிழ் கலாச்சாரத்தின் செழுமையையும், மாறிவரும் பொழுதுபோக்கு உலகின் புதிய அனுபவங்களையும் ஒருங்கிணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு சூழலை சோனி விழா மூலம் உருவாக்குகிறோம். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஒரே பொழுதுபோக்கு உலகமாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குவது எங்கள் நோக்கம். தமிழ் ரசிகர்களுக்காகத் தழுவி உருவாக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி வடிவங்கள், கலாச்சாரத்துடன் தொடர்புடைய தொடர்கள், சிறப்பான திரைப்படத் தொகுப்பு மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களை ஒன்றிணைப்பதன் மூலம், வெவ்வேறு தலைமுறைகள், வயதுப் பிரிவுகள் மற்றும் புவியியல் பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களை இணைக்க விரும்புகிறோம். எங்களுடன் இணையும் கூட்டாளர்களுக்கும், கலாச்சாரப் பொருத்தம், பல்வேறு பொழுதுபோக்கு ஆர்வங்கள் மற்றும் ரசிகர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை இது வழங்கும்.”


தீபக் தர், நிறுவனர் மற்றும் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி, பனிஜே ஆசியா மற்றும் எண்டமோல் ஷைன் இந்தியா கூறியதாவது:


“தமிழ் கலாச்சாரத்தில் உணவுக்கு எப்போதும் தனித்துவமான இடம் உண்டு. எனவே, ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்’ நிகழ்ச்சி எங்களுக்கு ஒரு உற்சாகமான அடுத்தகட்ட முயற்சியாக அமைந்துள்ளது.உலகளவில் 74 சந்தைகளில் தழுவி உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற நிகழ்ச்சியாக ‘மாஸ்டர் செஃப்’ விளங்குகிறது. இருப்பினும், ஒவ்வொரு பகுதியின் கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பிரதிபலிக்கும் தன்மையே இந்த நிகழ்ச்சியின் சிறப்பாகும். இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் நிகழ்ச்சியை வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது சோனி விழாவுடன் இணைந்து தமிழ் ரசிகர்களிடம் இதைக் கொண்டு செல்கிறோம். சமந்தா இந்த நிகழ்ச்சியில் இணைந்திருப்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. அவர் தனது தனித்துவமான அணுகுமுறையையும் புதிய பார்வையையும் நிகழ்ச்சிக்குக் கொண்டு வருவார் என நம்புகிறோம். உணவின் மீதான ஆர்வம், போட்டியின் விறுவிறுப்பு, ரசிகர்களுக்குப் பிடித்த பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் செழுமையான சமையல் மரபுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய நிகழ்ச்சியை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.”


ஆராதனா போலா, நிர்வாக இயக்குநர், ஃப்ரீமென்டில் (Fremantle) கூறியதாவது:


“தனித்துவமான பாப் இசை நட்சத்திரத்தைக் கண்டறியும் உலகின் மிகப்பெரிய தேடல்களில் ஒன்றான ‘ஐடல்ஸ்’ நிகழ்ச்சி, 2001-ல் தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் 60 நாடுகளில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதுவரை சுமார் 70 கோடி பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளதுடன், யூடியூபில் 900 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. ஃப்ரீமென்டில் நிறுவனத்தில், சோனி விழாவுடன் இணைந்து இந்த உலகப் புகழ்பெற்ற குடும்பப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தமிழ் ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாட்டின் செழுமையான இசை மரபு, பாடல் திறமையை வெளிப்படுத்தும் ஆர்வம் மற்றும் மனதைத் தொடும் மனிதர்களின் கதைகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களின் கூட்டு முயற்சியில் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்குவோம்.”


இவர், ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் சார்பில், இயக்குநரும் தயாரிப்பாளருமான மித்ரன் ஆர். ஜவஹர் கூறியதாவது:


“‘நோட்புக் 90’ஸ் – காதல் ஃப்ளாஷ்பேக்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் பொழுதுபோக்குத் துறையில் சோனி விழா மேற்கொள்ளும் புதிய பயணத்தில் இணைந்திருப்பதில் ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் மகிழ்ச்சியடைகிறது. முதல் காதலின் அப்பாவித்தனம், உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் இந்தப் பள்ளிப் பருவக் காதல் தொடர், 90-களின் அழகையும் இளமைப் பருவக் காதலின் காலத்தைக் கடந்த மாயாஜாலத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ஒவ்வொரு பார்வையும், கடிதமும், பாடலும் தனித்துவமான அர்த்தத்தைக் கொண்டிருந்த அந்தக் காலத்தை ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாகியுள்ளது. சோனி விழாவின் பல்வேறு கதை சொல்லும் முயற்சிகளுக்குப் பங்களிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் மனங்களில் தனி இடத்தைப் பிடிக்கும் என நம்புகிறோம்.”


சுந்தர் கார்த்திக், தயாரிப்பாளர், ஹைஃபோர் என்டர்டெயின்மென்ட் கூறியதாவது:


“சோனி போன்ற உலகளாவிய பொழுதுபோக்கு நிறுவனத்துடன் இணைந்து, ‘கிரைம் பேட்ரோல்’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியை சோனி விழா மற்றும் சோனி லிவ் தளங்கள் வாயிலாக ரசிகர்களிடம் கொண்டு செல்வது எங்களுக்குப் பெருமையளிக்கிறது. எங்களது படைப்புகளின் ஆழத்தை அங்கீகரித்து, ஹைஃபோர் மற்றும் மைல்ஸ்டோன் மீடியா மீது நம்பிக்கை வைத்ததற்காக சோனி நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் கூட்டணி எங்களது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் மட்டுமல்ல; தமிழ் கதை சொல்லலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை இணைக்கும், தாக்கத்தை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள படைப்புகளை உருவாக்கி, தமிழ் பொழுதுபோக்குத் துறையில் புதிய தரநிலைகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.”


ஏ.எல். விஜய், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், டி ஸ்டுடியோஸ் கூறியதாவது:


“தமிழ் பொழுதுபோக்குத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் சோனி விழாவுடன் இணைந்திருப்பதில் டி ஸ்டுடியோஸ் பெருமையடைகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் சிறப்பான கதைகளையும் உயர்தரமான உள்ளடக்கங்களையும் கொண்டு சேர்க்கும் இந்தப் பயணத்தில் பங்கெடுப்பது எங்களுக்குக் கிடைத்துள்ள சிறப்பான வாய்ப்பாகும். சோனி விழாவின் பிரம்மாண்டமான அறிமுக நிகழ்வில் இடம்பெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முயற்சி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம். விரைவில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் விரும்பப்படும் பெயராக சோனி விழா உருவெடுக்கும் என நம்புகிறோம்.”


சோனி விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பு



1. செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ் (Celebrity MasterChef Tamil): பிரபலங்கள் சமையலறைக்குள் நுழைந்து, தங்களின் சமையல் திறமை மற்றும் படைப்பாற்றலைச் சோதிக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி.


· சிறப்பு நடுவர்: சமந்தா ரூத் பிரபு


· நடுவர்கள்: செஃப் வெங்கடேஷ் பட், செஃப் சஷி செல்லையா மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா


· போட்டியாளர்கள்: அபி, பாலாஜி முருகதாஸ், தீனா, ஜனனி அசோக், மரியா ஜூலியானா, மதிச்சியம் பாலா, ரவி மரியா, ரேஷ்மி மேனன், ஆர்.ஜே. தீபக், ஷியாரா, சித்தார்த்தா மற்றும் வினோதினி


· நிகழ்ச்சித் தொகுப்பாளர்: ஆர்.ஜே. விஜய்


· தயாரிப்பு நிறுவனம்: பனிஜே ஆசியா (Banijay Asia)


2. தமிழ் ஐடல் (Tamil Idol): தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான பாடகர்களைக் கண்டறிந்து, முதல் தமிழ் ஐடல் பட்டத்தை வெல்லும் போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் இசை நிகழ்ச்சி.


· சூப்பர் நடுவர்: ஏ.ஆர். ரஹ்மான்


· நடுவர்கள்: ஆண்ட்ரியா ஜெரெமையா, கார்த்திக் மற்றும் பென்னி தயாள்


· நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்: விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட்


· தயாரிப்பு நிறுவனம்: ஃப்ரீமென்டில் (Fremantle Pvt Ltd.)


3. நோட்புக் 90’ஸ் – காதல் ஃப்ளாஷ்பேக் (Notebook 90’s – Kadhal Flashback): 1990-களின் திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடர், நட்பு, முதல் காதல் மற்றும் இளமைப் பருவத்தின் மறக்க முடியாத அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.


· நடிகர்கள்: முசம்மில் எலியாஸ் மற்றும் யுவா


· இயக்குநர்: மித்ரன் ஆர். ஜவஹர்


· தயாரிப்பு நிறுவனம்: ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் (Streetlight Pictures)


4. கிரைம் பேட்ரோல் – குற்றங்கள் தரும் எச்சரிக்கை (Crime Patrol – Kutrangal Tharum Echarikkai): உண்மையான குற்றச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, குற்ற விசாரணைகள், குற்றங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் மற்றும் அவற்றுக்கான சூழ்நிலைகளை எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.


 


· நிகழ்ச்சித் தொகுப்பாளர்: ரங்கராஜ் பாண்டே


· தயாரிப்பாளர்: சுந்தர் கார்த்திக் (Sundar Kaarthikk)


· தயாரிப்பு நிறுவனம்: ஹைஃபோர் என்டர்டெயின்மென்ட் (Hifour Entertainment)


5. மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன் (Madam Police – Naanga Irukka Bayamen): பெண் காவலர்களைக் கொண்ட குழுவின் செயல்பாடுகளை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், அன்றாடக் குற்றச் சம்பவங்களைத் துணிச்சல், புத்திசாலித்தனம் மற்றும் மனிதநேயத்துடன் அவர்கள் கையாள்வதை எடுத்துரைக்கிறது.


· நடிகர்கள்: திவ்யா கணேசன் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன்


· இயக்குநர்: கோன் (Koan)


· தயாரிப்பாளர்: ஏ.எல். விஜய்


· தயாரிப்பு நிறுவனம்: டி ஸ்டுடியோஸ் (D Studios)


சோனி விழா ஒளிபரப்பு தொடங்கும் தேதி அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8 மணிக்கு சோனி விழா தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.


பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஒரே தளத்தில் இணைத்து, ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற அடையாளத்துடன் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க சோனி விழா தயாராகியுள்ளது.

*விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு

 *விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் ‘ஸ்லம் டாக்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிப்பு!*



இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், பன்முகத் திறமை கொண்ட நட்சத்திர நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’ (Slum Dog: 33 Temple Road) திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.


பூரி கனெக்ட்ஸ் (Puri Connects) நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரித்துள்ள இப்படம், ஏற்கெனவே வெளியான விளம்பரங்கள் மற்றும் முன்னோட்டங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


தனித்துவமான கதை சொல்லும் பாணி மற்றும் விறுவிறுப்பான திரைமொழிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பூரி ஜெகன்நாத், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதுவரை வெளியிடப்பட்ட கதாபாத்திர அறிமுகக் காணொளிகள், படத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளன.


இப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, படத்தின் விளம்பரப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்துள்ளார். இவர்களுடன் தபு, துனியா விஜய், ஜரினா வஹாப், பிரம்ஹாஜீ  , வி.டி.வி. கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கெனவே வெளியான காணொளிகள், படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான முக்கியத்துவம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளன.


சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை சந்தோஷ் நூஜில்லா மேற்கொண்டுள்ளார்.


இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகவுள்ளது.


*நடிகர்கள்*


விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, ஜரினா வஹாப், துனியா விஜய், பிரம்ஹாஜீ  , வி.டி.வி. கணேஷ்.


*தொழில்நுட்பக் குழு*


எழுத்து மற்றும் இயக்கம்: பூரி ஜெகன்நாத்

தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத் & சார்மி கவுர்

வழங்குபவர்: சார்மி கவுர்

தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ் (Puri Connects)

CEO:  விஷ்ணு ரெட்டி

இசை:  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்

ஒளிப்பதிவு: சாம்  கே. நாயுடு

படத்தொகுப்பு: சந்தோஷ் நூஜில்லா

VFX:  அனில் பாடூரி

மக்கள் தொடர்பு : யுவராஜ்


*Vijay Sethupathi, Puri Jagannadh’s Much-Awaited Action-Drama Slum Dog Shoot Wrapped Up, Release Date Announcement Soon*


 Dynamic director Puri Jagannadh’s pan-India action-drama Slum Dog: 33 Temple Road, featuring versatile actor Vijay Sethupathi in the lead, has completed its entire shooting schedule. The final schedule was wrapped up today in Hyderabad. Produced by Puri Jagannadh and Charmme Kaur under the banner of Puri Connects, the film has generated considerable buzz with its promotional content.

 

Known for his distinctive storytelling and dynamic screen presentation, Puri Jagannadh is ensuring that the film strikes the right balance of elements to appeal to audiences across all sections. The character introduction videos released so far have offered glimpses into the different facets of the movie.

 

The makers are now planning to ramp up promotional activities as they gear up to bring the film to theatres soon.

 

Samyuktha plays the female lead, while Tabu, Duniya Vijay, Zarina Wahab, Brahmaji and VTV Ganesh appear in significant roles. As evident in the previously unveiled glimpses, each character has its own importance.

 

Comng to the technical crew, Sam K Naidu handles the cinematography, Harshavardhan Rameshwar composes the music, and Santosh Noozilla is in charge of editing.

 

The film is set for a pan-India release in Telugu, Tamil, Kannada, Malayalam and Hindi.

 

*Cast* : Vijay Sethupathi, Samyuktha, Tabu, Zareena Wahab, Duniya Vijay Kumar, Brahmaji, VTV Ganesh

 

*Technical Crew:*


Writer, Director: Puri Jagannadh

Producers: Puri Jagannadh, Charmme Kaur

Presents: Charmme Kaur

Banner: Puri Connects

CEO: Vishu Reddy

Music: Harshavardhan Rameshwar

DOP: Sam K Naidu

Editing: Santosh Noozilla

VFX: Anil Paduri

PRO: Yuvraaj

டிரோன்ஸ் திரைப்பட விமர்சனம்

 டிரோன்ஸ் திரைப்பட விமர்சனம்


 டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே.தீபக் கல்லூரியில் இருந்து இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். பெற்றோர்களுக்கு தெரியாமல் இருக்க இந்த காலக்கட்டத்தில் வெளியே தங்க முடிவு செய்யும் இவர்கள், பிளாக் ஹோல் என்று சொல்லக்கூடிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றில் தங்குகிறார்கள். ஒரு முறை அதற்குள் செல்லும் இவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் உருவாகிறது. அப்போது டிரோன் ஒன்றின் மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது அழகிய இளம் பெண்ணான சித்தி இத்னானி அங்கு இருப்பதை பார்க்கிறார்கள். அவர் மீது டிராவிட் செல்வத்திற்கு காதல் மலர்கிறது. இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சித்தி இத்னானியின் சூனியக்காரி பாட்டியான தேவதர்ஷினி, இவர்களை சிறை பிடிக்கிறார்.

மறுபக்கம், மாயமான கல்லூரி மாணவர்களை தேடி சிலர் அந்த வீட்டுக்குள் வருகிறார்கள். அவர்களில் காவல்துறை அதிகாரியான சினிமாவாலா சதிஷும் ஒருவர். திருமண வயதை தாண்டியும் திருமணம் ஆகாத, சினிமாவாலா சதிஷும், அந்த இளம் பெண்னின் அழகில் மயங்கி அவரை காதலிக்க தொடர்ங்குகிறார்.

இப்படி பலர் அவரது அழகில் மயங்கி அவரை காதலித்தாலும், அந்த அழகுக்கு பின்னால் ஒரு மர்மமும், அந்த மர்மத்தின் பின்னணியில் ஒரு பெண்ணின் சோகமும் இருக்கிறது. அது என்ன ?, அது தெரிந்த பிறகு காதலிக்க மறுக்கும் ஆண்களின் நிலை என்னவாகும் ?, அவரிடம் சிக்கிய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரின் நிலை என்ன ? , ஆகிய கேள்விகளுக்கான விடையை நகைச்சுவையாக மட்டும் இன்றி சமூக சிந்தனையோடு சொல்வது தான் ‘டிரோன்ஸ்’.

பாட்டி கதையையும், பறக்கும் தட்டு என்ற பழைய கதைக்கு பவுடர் அடித்து எடுத்த   இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத்  திரைக்கதையில் கோட்டை விட்டு பார்ப்பவர்களை எரிச்சலான திரைக்கதை சூனியக்காரி, அறிவியல் ஆராய்ச்சி என்று மொக்க படம் 

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, அழகு பெண்ணை  நடிப்பில் அரக்கியாகவும் நடித்து இருக்கும் இடம் கதையில் கவனம்  இல்லை . மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், கதைக்கு தேவை யில்லாத கதாபாத்திரம்  

நாயகனாக நடித்திருக்கும் டிராவிட் செல்வம், காமெடி கதாபாத்திரம் என்பதால் அதற்கான காமெடி எங்கும் இல்லை  

சூனியக்காரியாக நடித்திருக்கும் தேவதர்ஷினி  கதாபாத்திரம் பார்ப்பவர்கள் வெறுக்க வைக்கிறது 

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ்,  டம்மி பீஸ் கதையில்  குரேஷி வரும் காட்சிகள் சிரிப்பு எங்கும் வரவில்லை . ஆர்.ஜே.தீபக் மற்றும் சசி செல்வராஜ் ஆகியோரின் நடிப்பு நடிப்பு வரவில்லை 

ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன், குறிப்பிட்ட ஒரு லொக்கேஷனில் பெரும்பாலான காட்சிகளை காட்சிப்படுத்தினாலும், கதைக்களம் திருப்தியாக இல்லை 

இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆர்-ன் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யாவுக்கு வேலை இல்லை , 


முதல் பாதி படம் பார்வையாளர்களை சற்று சோர்வடைய செய்தாலும், இரண்டாம் பாதி அப்படயே  உள்ளது படத்தில்  எதிர்பார்க்காத திருப்பங்கள் என்று எதுவும் இல்லை 

மொத்தத்தில், ‘டிரோன்ஸ்’ பறக்காது 

*நடிகர் நெப்போலியன் நடிக்கும் 'அமெரிக்கா ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

 *நடிகர் நெப்போலியன் நடிக்கும் 'அமெரிக்கா ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா


*


ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன்- குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான 'அமெரிக்க ஆவி' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 


இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான திரு. டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். 


அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமெரிக்க ஆவி' திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 'நேஷ் வில்' பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இந்து ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார். காமெடி ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீவன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 


முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமிதத்துடன் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. படக் குழுவினருடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


*இந்நிகழ்வில் தயாரிப்பாளர் குணால் நெப்போலியன் பேசுகையில்,*


''இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ..இது வேற மாதிரியான படம். தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தான் முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம். அமெரிக்காவில் வாழும் நம்முடைய இனத்தினரிடம் இவ்வளவு திறமைகள் மறைந்திருக்கிறது என்பதை காணும் போது ஆச்சரியமாக இருந்தது. இது சின்ன விசயம் அல்ல. அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கான வேலையை செய்து கொண்டே கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தில் இப்படத்தில் பணியாற்றினார்கள். அதை நினைக்கும் போது எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக இருக்கிறது. 


'அமெரிக்க ஆவி' என்ற டைட்டிலை பற்றி சொல்ல வேண்டும். ஆவி என்றால் நாம் பேய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. அதே தருணத்தில் ஆவி என்பதற்கு அமெரிக்காவை பொறுத்தவரை மற்றொரு பொருளும் இருக்கிறது. அமெரிக்காவில் பல நாடுகளில் இருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள் அதிகம். அவர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள். முயற்சி செய்து வெற்றி பெறுபவர்கள். அந்த கோணத்திலான பொருளும் இப்படத்தில் கதாபாத்திரங்களாக இடம் பிடித்திருக்கிறது. எனவே இந்த படத்தில் பேயும், பிசாசும் இருக்கிறது அத்துடன் சுவாரசியமான மற்ற விசயங்களும் இருக்கிறது. 


இந்தப் படத்தில் மற்றொரு சுவராசியமான விசயமும் இருக்கிறது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தனுஷ் நெப்போலியன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால்.. அவர் தான் எனக்கு முதலாளி. அவரால் இங்கு வர இயலவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியின் நேரலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். 


'அனைவரும் இந்த திரைப்படத்திற்கு குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்க வேண்டும்' என அவர் இங்குள்ள ரசிகர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார். இந்தப் படத்தை வெற்றி பெற செய்வது நம்முடைய கடமை'' என்றார். 


*நடிகர் நெப்போலியன் பேசுகையில்,*


''இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என 

தோராயமாக 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இங்கு இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள். 


இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் - டாக்டர்கள் - சயின்டிஸ்ட்- புரொபசர்ஸ்- என எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். 


இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில்.. இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம். 


சிவாஜி சார் நடித்த 'பாரத விலாஸ்: படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்.


1994 ஆம் ஆண்டில் சன் டிவி நேரலை காட்சி தொடங்கிய போது, நானும், இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிற்கு சென்று தொடங்கி வைத்தோம். அன்று முதல் எங்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. அவர் இங்கு வந்து எங்கள் படக் குழுவை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும் இங்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி'' என்றார். 


*அறிமுக நடிகர் மகேஷ் பேசுகையில்,*


''இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக ஜனவரி மாதத்தில் அனைவரையும் ஒரு பிரத்யேக உடையில் வர வேண்டும் என நெப்போலியன் சொன்னார். அப்போது நாங்கள் எல்லோரும் ஆடிஷன் தான் நடைபெறப் போகிறது என நினைத்திருந்தோம். ஆனால் அவர் உங்களுக்கெல்லாம் ஆடிஷன் இல்லை நடிக்கலாம் என்றார். அதன் பிறகு அனைவருக்கும் நெப்போலியன் சார் நடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்களுக்காக நடித்துக் காட்டியது மறக்க முடியாத அனுபவம். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது நடைபெறும் அனைத்து தொழில்நுட்ப விசயங்களை நேரில் பார்த்து ரசித்தோம். இந்தப் படத்தில் என்னுடைய அம்மா தான் நெப்போலியன் சாரின் அம்மாவாக நடித்திருக்கிறார். அது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தைக் காண நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம்'' என்றார். 


*இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் பேசுகையில்,*


'' நான் ஒன்பது வயதிலேயே பழைய ஃபிலிம் வைத்து சூரிய ஒளி மூலம் சுவற்றில் அந்த படத்தை காண்பித்திருக்கிறேன். இதுதான் என்னுடைய தொடக்க கால பிலிம் டைரக்ஷன் ஆர்வம். அதற்கு பின் 'ஓநாய்கள் ஜாக்கிரதை' என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தேன். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன். அங்கு இருந்த காரணத்தினால் சினிமா பற்றிய தொடர்பு துண்டித்து போய்விடுமோ..! என பயந்தேன். அதற்காக இப்போதும் பல கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் ஒரு முறை நெப்போலியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என்னால் தனுஷை விட்டுவிட்டு வெளியில் வந்து நடிக்க முடியாது என்றார். அந்தத் தருணத்தில் அமெரிக்காவிலேயே ஏதாவது படத்தை உருவாக்க முடியுமா? அதற்கான கதை இருக்கிறதா? என கேட்டார். அதன் பிறகு மதிய உணவு அருந்தினோம். அத்துடன் அவர் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டை காண்பித்தார். மூன்றரை ஏக்கரில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான வீடு அது. மரங்களுக்கு நடுவே அழகாக அமைந்திருந்த அந்த வீட்டை பார்த்ததும் ஆங்கில திரைப்படங்களில் வருவதை போல் இருந்தது. அதன் பிறகு இந்த வீட்டை மையப்படுத்தி ஏதேனும் கதையை உருவாக்க முடியுமா? எனக் கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து கதையை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து போனது. அப்போது அவர் இது வழக்கமான ஹாரர் படமாக இருக்கக் கூடாது. காமெடி கலந்த ஹாரர் படமாக இருக்க வேண்டும் என்றார். 


அதற்குப் பிறகு ஒரு கதையை உருவாக்கினோம். அந்தக் கதையை நெப்போலியனும், அவரது வாரிசுகளான குணால் - தனுஷ் என அனைவரும் இணைந்து அட்டகாசமான திரைக்கதையாக உருவாக்கினோம். 


இந்தப் படத்திற்காக பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி'' என்றார். 


*ஒளிப்பதிவாளர் 'நேஷ் வில்' பிரபு பேசுகையில்,*


'' என்னுடைய முழு பெயர் பிரபு தொப்புடு அமரேசன். என்னுடைய தாத்தா டி.எஸ். அமரேசனுக்கு நன்றி. அவர் ஆர் எஸ் மனோகர் நடித்த மேடை நாடகங்களை இயக்கியவர். 1920 களில் அவர் மறைந்து விட்டார். அவர் இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார். 


நான் சென்னையில் தற்போது பிரபலமான ஒளிப்பதிவாளர்களாக திகழும் மனோஜ் பரஹாம்சா, அறிவழகன் ஆகியோரின் அறையில் தான் நான் இருந்தேன். அதனால் கேமரா லென்ஸ், லைட்ஸ் அதைப்பற்றி எல்லாம் தெரியும். அதன் பிறகு அமெரிக்காவிற்கு சென்றபோது அங்கு நடைபெறும் சிறிய நிகழ்வுகளை எல்லாம் கேமரா மூலம் பதிவு செய்தேன். அப்போதுதான் நெப்போலியன் அறிமுகமானார். அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளுக்கெல்லாம் கேமரா மேனாக இருந்தேன். அதன் பிறகு தான் ஜப்பானில் தனுஷின் கல்யாணம் நடைபெற்ற போது அதனை பதிவு செய்தேன். அப்படி என்னை படிப்படியாக மெருகேற்றி தற்போது ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி'' என்றார். 


*ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,*  


''இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் போது 'மை டியர் குட்டிச்சாத்தான்' படத்தை பார்ப்பது போல் இருக்கும். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். ஒரு திரைப்படத்தில் ஒருவரை புது முகமாக அறிமுகப்படுத்தி நடிக்க வைப்பது எளிது. ஆனால் ஒட்டுமொத்த திரைப்படத்திலும் அனைவரையும் புதுமுகமாக அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பது என்பது உலக மகா கடினமான வேலை. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்து அவர்களிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சியில் அனைவரும் ரிதத்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள். இது அவர்களின் நடிப்பின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இதற்காக கலா மாஸ்டருக்கு நன்றி.  


நெப்போலினை பொறுத்தவரை ஒரு வேலையை செய்தால் அதனை சரியாக செய்திட வேண்டும் என நினைப்பவர். அது நடிகர் சங்க தலைவராக இருந்தாலும் சரி.. நடிகராக இருந்தாலும் சரி.. அரசியல்வாதியாக இருந்தாலும் சரி.. ஒரு வேலையை செய்தால் அதனை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார். அந்த அளவிற்கு அவர் நல்ல மனிதர். 


இப்படத்தின் ஹீரோயின் ஒரு டாக்டர். அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. அவருடைய ஓய்வு நேரத்தின் போது அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிப்பார். அதுவரை படக்குழுவினர் அங்கு காத்திருப்பார்கள்.


இந்த படத்தின் உச்சகட்ட காட்சியில் அட்டகாசமான சண்டை காட்சியை சண்டை பயிற்சி இயக்குநர் பி சி.ஸ்டண்ட் வடிவமைத்திருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் '' என்றார். 


*திருமதி ரோஜா செல்வமணி பேசுகையில்,*


'' வி சேகர் இயக்கத்தில் 'வீட்டோட மாப்பிள்ளை' படத்தில் நான் நெப்போலியுடன் நடித்திருக்கிறேன் அவர் என் சக நடிகர். அவரைப் பற்றி என்ன சொன்னாலும் அது குறைவு தான் அவர் ஒரு நல்ல கலைஞர்... நல்ல அரசியல்வாதி... நல்ல தொழிலதிபர்... நல்லதொரு தந்தை.. இதற்கு மேல் அவர் நல்ல மனிதரும் கூட. நீண்ட நாட்களுக்குப் பிறகு நெப்போலியனை ஒரு நடிகராக திரையில் பார்க்கும்போது சக நடிகையாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் கூட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறேன். ஒரு கலைஞருக்கு ரசிகர்கள் -கேமரா- படப்பிடிப்பு தளம் -ஆகியவற்றுடன் பழகிய பிறகு, அதை விட வேண்டும் என்பது கடினமானதாக இருக்கும். எங்களுடைய குடும்ப பணி இருந்தாலும் ரசிகர்களுக்காக... கலைக்காக... மீண்டும் நடிக்க வருவதில் மகிழ்ச்சி தான். அதிலும் அவர் நல்ல கதையுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகை தந்திருக்கிறார். இதற்காகவே நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் இந்தப் படத்தை வெற்றி படமாக மாற்றுவதற்கு மவுத் பப்ளிசிட்டி, சோசியல் மீடியா பப்ளிசிட்டி ஆகியவற்றை அனைவரும் செய்திட வேண்டும். 


எனக்கும், என் மகளுக்கும் பேய் படம் என்றால் பயம். இருந்தாலும் இந்தத் திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம்'' என்றார். 


*நடிகர் நாசர் பேசுகையில்,*


'' நெப்போலியன் உடனான பயணம் 'கிழக்கும் மேற்கும்' படத்தில் தொடங்கி, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. அந்தப் படத்திற்காக நாங்கள் இருவரும் ஏறத்தாழ 30 நாட்கள் ஒன்றாகவே இருந்தோம். இப்போது எப்படி இருக்கிறாரோ...! அப்போதே அப்படித்தான் இருந்தார்.‌ அப்போது அவர் வாழ்க்கையை எப்படி திட்டமிட்டாரோ... அதே போன்ற வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது. சில பட்டங்கள் - சில நற்பெயர்களை- சம்பாதிப்பது கடினம். கஷ்டப்பட்டு உழைத்தால் கோடீஸ்வரன் ஆகலாம். கஷ்டப்பட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகலாம். ஆனால் மனதார எப்போதும் நெப்போலியனை வாழ்த்தும் போது 'நல்ல' என்றொரு வார்த்தையை சேர்த்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் கிடைக்காது. 


என்னுடைய மகன் விபத்தில் சிக்கிய போது எனக்கு மிகப்பெரும் ஆறுதலை சொல்லியவர் நெப்போலியன் தான். 'நல்ல' என்ற பெயரை.. நெப்போலியன் மட்டும் சம்பாதிக்கவில்லை. அவருடைய மனைவியும் சேர்த்து தான் சம்பாதித்திருக்கிறார்கள். 


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக என் மனமார்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு நாங்கள் யாரும் கேட்காமல் அவராக முன் வந்து ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொடுத்தார்.


இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் நெப்போலியன் இளமையாக தோன்றுகிறார். 


தற்போது தான் ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரையை எழுதி விட்டு வந்தேன். இந்தியாவில் குழந்தைகளுக்கான படம் என்பது .0 சதவீதத்தில் கூட இல்லை. நாம் குழந்தைகளுக்காக படத்தை உருவாக்கியது இல்லை. அந்த வகையில் இந்த படம் குழந்தைகளுக்கான படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 


இவருக்கு உறுதுணையாக இருந்த நேஷ் வில் இருந்து இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி'' என்றார். 


*தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில்,*


''நெப்போலியன் நடிக்க தொடங்கும் காலகட்டத்திலேயே நல்ல நடிகர் என்ற பெயருடன்.. நல்ல மனிதர் என்ற பெயரையும் சம்பாதித்திருக்கிறார். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்திருந்தார். அவர் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தபோது சங்க நிகழ்வுகளுக்காக கடினமாக உழைத்தவர். அவர் எல்லா இடத்திலும் ஒரு ராணுவ வீரரை போல் செயல்படுவார். 


நான் இந்தப் படத்தை பார்த்தேன் நிச்சயமாக பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயம் கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கும் என நம்புகிறேன். 


பெப்சிக்கான கட்டிடத்திற்கு முதல் நன்கொடையை கொடுத்தவர் நெப்போலியன் தான். இவருக்கு திரைத்துறை சார்பில் தனியாக பாராட்டு விழா நடத்திட வேண்டும். 


என்னுடைய திரையுலக அனுபவத்தில் நான் பார்த்த இரண்டு 'நல்ல' மனிதர்களில் ஒருவர் விஜயகாந்த். மற்றொருவர் நெப்போலியன் தான் அனைவருக்கும் நன்றி'' என்றார். 


*நடன இயக்குநர் கலா பேசுகையில்,"


''இங்கு மூன்று பாடல்களை தான் திரையிட்டார்கள். படத்தில் மேலும் சில பாடல்கள் இருக்கிறது. நெப்போலியனும் நானும் எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும் அதை அவர்கள் கற்றுக்கொண்டு நடித்ததற்கு நன்றி.


நெப்போலியன் என்னுடைய முப்பது ஆண்டுகால நெருங்கிய குடும்ப நண்பர். அவர் நடிகர் சங்கத்திற்கு மட்டுமல்ல எங்களுடைய நடன இயக்குநர்கள் சங்கத்திற்கும் நன்கொடை வழங்கி இருக்கிறார். நடிகர் நாசர் குறிப்பிட்டது போல்... தயாரிப்பாளர் சிவா குறிப்பிட்டதை போல்... நெப்போலியன் நல்ல மனிதர். அவரைப் போலே அவருடைய வீட்டின் பெண்மணியான சுதாவும் நல்ல மனுஷி. அவர்களை நான் திருமணமான தருணத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார். 


இந்த திரைப்படம் ஆவி சம்பந்தப்பட்ட படம் அல்ல. இது ஒரு அழகான குடும்ப திரைப்படம். இந்தப் படம் நிச்சயமாக சூப்பர் ஹிட் ஆகும்'' என்றார். 


*இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் பேசுகையில்,*


''இயக்குநர் ஜே பி ஆர் மூலமாக நெப்போலியன் சந்தித்து, இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய திரை இசை பயணத்தில் இந்தப் படம் ஒரு மைக்கல். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி'' என்றார்.  


*பாடலாசிரியர் சினேகன் பேசுகையில்,*


''இந்த மேடை பேரன்பிற்கான மேடை. அவரைப் பற்றி நான் மணி கணக்கில் பேசலாம். அவரிடம் நான் whatsapp மூலம் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.‌ உடன்பிறந்த சகோதரர் போன்றதொரு உணர்வு எனக்குள் இருக்கிறது. மிகச்சிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தில் நானும் ஒரு புள்ளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை பாராட்டுவதற்கு மற்றொரு மேடை கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கிறேன் அனைவருக்கும் நன்றி'' என்றார். 


*இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில்,*


'' புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது நான் 'உறுதிமொழி' படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்- ஒல்லியாக உயரமாக இருந்த ஒருவரை 'இவர் தான் குமரேசன்' என அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது அவரிடம் 'நான் உன்னை மிகப்பெரிய வில்லனாக நடிக்க வைக்கிறேன்' என உறுதிமொழி கொடுத்தேன். அதன் பிறகு 'எஜமான்: படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தேன் அதற்காக கடுமையாக போராட வேண்டியது இருந்தது ரஜினி சாரே வேண்டாம் என்று சொன்னார். அப்போது அவரிடம் ஏன் நெப்போலியன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்? என்பதற்கான காரணத்தை சொன்னேன். அதைக் கேட்டு இது புதிதாக இருக்கிறதே..? என சொல்லிய பிறகு அவர் ஒப்புக்கொண்டார். நெப்போலியனுக்காக அந்தக் கதையின் பல மாற்றங்களை செய்தேன். அந்தப் படத்தில் அவர் பேசுவதை போல் இடம்பெறும் ஒரு வசனம் ( கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளை...) இன்று வரை பிரபலம். அவருடன் அந்த ஒரு படத்தில் மட்டும் தான் பணியாற்றிய முடிந்தது. அது எனக்கு நிறைவானதாகவும் இருந்தது. 


இந்த 'அமெரிக்க ஆவி' படத்தில் ஆவி யார்? என்பதை சொல்லவே இல்லையே..? இந்த படத்தின் போஸ்டரில் நெப்போலியன் ஒரு கிளென் ஈஸ்ட்வுட் போல் இருக்கிறார். நாம் வயசான ஆவி- நல்ல ஆவி- கெட்ட ஆவி -இளம் ஆவி- விபத்தில் இறந்து போன ஆவி- காதலில் தோல்வி அடைந்த ஆவி -வீட்டை வாங்க முடியாமல் உயிரிழந்த ஆவி - என பல ஆவிகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் எந்த ஆவி அமெரிக்கா ஆவி என தெரியவில்லை. எந்த ஆவியாக இருந்தாலும் நெப்போலியன் ஒரு சிறப்பான ஆவியைத்தான் நமக்கு காண்பிப்பார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார்.

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி

 *ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி! 




சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரி சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 

 

1979-ஆம் ஆண்டு திரைக்கலைஞர் திரு. சிவகுமார் அவர்களின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமார் அவர்களின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006-ஆம் ஆண்டு முதல் 'அகரம் ஃபவுண்டேஷன்' இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது. 

 

ஓவியர் ஜீவானந்தனுக்கு விருது:

கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது. இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ள நிலையில், இந்த 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தன் அவர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 

25 மாணவ, மாணவியருக்குக் கல்வி ஊக்கத்தொகை!

பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  


தொடர்ந்து, விளிம்புநிலை மாணவர்களின் கல்விக்காகச் செயல்படும் கீழ்க்கண்ட மூன்று அமைப்புகளின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நிதியுதவிகள் வழங்கப்பட்டன : 


1. திண்டிவனம் ‘தாய் தமிழ்ப் பள்ளிக்கு’ ரூ. 6,28,000/- நிதியுதவி:

திண்டிவனம் ரோசனை பகுதியில் 'தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை' என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி 'தாய் தமிழ் தொடக்கப்பள்ளி'. இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026 - 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ. 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. 

 

2. ஈரோடு ‘சுடர்’ அமைப்புக்கு ரூ. 2,00,000/- நிதியுதவி:

ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு 'சுடர்'. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ. 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் திரு. நடராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டது. 

 

3. ‘வாழை’ அமைப்புக்கு ரூ. 3,00,000/- நிதியுதவி:

சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த 'வாழை' அமைப்பு. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ.25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ. 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. 

 

விழாவில் மாணவர்களைப் பாராட்டி, திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள் பேசியதாவது: 

மாணவ - மாணவிகளுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிற ஒரே ஒரு விஷயம் — கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையில் போய் வேண்டும் என்றாலும் நீங்கள் சாதிக்க முடியும். அந்த ஒன்றுதான் அடிப்படை. நீங்கள் ஏழைப் பெற்றோருக்கு பிறந்தீர்களா, பெற்றோர் இழந்த குழந்தைகளா, கிராமத்தில் பிறந்தீர்களா — எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையிலும் போய் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் மனதில் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சின்ன, மிகச் சின்ன உதாரணம் நான். 


நாங்க படிச்ச காலத்துல பள்ளிக்கூடம் என்று ஒன்று கிடையாது, பள்ளிக்கூட கட்டிடம் கிடையாது, வாத்தியார்கள் முறையா கிடையாது. எல்லாம் பிரைவேட் பள்ளிக்கூடம், பிரைவேட் வாத்தியாரு. 'கலங்கள்' என்பது எங்க கிராமத்துல இருந்து கரெக்டா நாலு ஃபர்லாங் தூரத்துல இருக்குது. அதுல ஜி.டி. நாயுடு பிறந்த ஊரு. அதுல ஊருக்கு நடுவுல ஒரு மொட்டை மண்டபம், 30 அடிக்கு 60 அடி நீளத்துல ஒரு மண்டபம். அந்த மண்டபத்துல தரையெல்லாம் தூசி படிஞ்சுட்டு இருக்கும். நாங்க ஊர்ல இருந்து வரும்போது வழியில மாடு சாணம் போட்டுருக்கும். அந்த சாணத்தை எல்லாம் நாங்க எடுத்துட்டு வந்து, கூடையில் போட்டு, ஒரு சட்டிக்குள்ள போட்டு நல்லா கரைச்சு, அந்த சாணத்துல நாங்க தான் தரையில மெழுகி குடுப்போம், இல்லைன்னா உள்ள புழுதி பறக்கும். அதை மெழுகி விட்டு, அதுலதான் நான் உட்கார்ந்து படிச்சோம். சைடுல யார் வேடிக்கை பார்ப்பாங்கன்னு மூங்கில் தட்டி அடிச்சு, ஒரு மூணு மூங்கில் தட்டி சுத்தியும் மறைச்சிருப்போம்.


எங்க வாத்தியார் கல்யாணசுவாமி நாயுடு. அவர் 1940-களிலேயே ஸ்டேட் மேத்ஸ்ல ஸ்டேட் செகண்ட் வாங்கினவர். 1940-கள்ல மேத்ஸ்ல மிகப்பெரிய ஆளு. அவரு பிரைவேட் பள்ளிக்கூடம் வச்சிருக்காரு. ஒன்னாம் கிளாஸுக்கு 1 ரூபாய், ரெண்டாம் கிளாஸுக்கு 2 ரூபாய், மூணாம் கிளாஸுக்கு 3 ரூபாய், நாலாம் கிளாஸுக்கு 4 ரூபாய்—இதான் மாச ஃபீஸ்.   நான் ரெண்டாம் கிளாஸ் படிச்சேன், எங்க அக்கா மூணாம் கிளாஸ் போனாங்க. நாங்க படிச்ச காலத்துல ஒரு சவரன் தங்கம் வந்து 12 ரூபாய். அப்போ அக்காவுக்கு 3 ரூபாய், எனக்கு 2 ரூபாய்னா 5 ரூபாய், கிட்டத்தட்ட பாதி சவரன் விலை. நான் பிறந்து 10 மாச குழந்தையா இருக்கும்போது எங்க அப்பா இறந்துட்டார். காலம் பூரா எங்க அம்மா வெள்ளைச் சேலையில தான் நான் பார்த்திருக்கேன். நம்ம காடு கரையில பாடுபட்டு, ஒரு காய்ஞ்சு போன பூமியை எங்க அப்பா விட்டுட்டு போயிருந்தாரு. அதுல பாடுபட்டு தான் எங்க அம்மா படிக்க வச்சாங்க. அதனால 5 ரூபாய் மாசத்துக்கு செலவு பண்ண முடியாதுனு எங்க அக்காவை மூணாம் கிளாஸோட நிறுத்திட்டாங்க. 


கிராமப்புறங்களில் ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்பதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். கல்வி ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, நன்றாகப் படித்து முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வதில் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. தடைகளைத் தாண்டி அவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமையும். இந்த பயணத்தில் உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி மட்டுமே. இனி கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டது. மாணவர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடன், கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். 

 

நிகழ்வில் திரைக்கலைஞர் சூர்யா பேசியதாவது, இது ஒரு குடும்ப நிகழ்ச்சி. இது வந்து 47 வயசுன்னா வந்து வீட்ல எப்படி ஒரு பிறந்தநாள் நடக்குமோ, அந்த மாதிரி ஒரு ஒரு முறையும் இது குடும்ப நிகழ்ச்சியா மட்டுமே தான் பார்க்கிறோம். ஒரு ஒரு முறையும் இந்த குடும்பம் இன்னும் விரிவடைந்துகொண்டே தான் இருக்குது. இங்க வந்திருக்கிற, இன்னைக்கு வந்திருக்கிற மாணவ - மாணவிகள் அவங்களோட சாதனைகளைச் சொல்லி, ஒரு ஒரு வாட்டியும் பரிசு எடுத்துட்டு போகும்போது, எவ்வளவு விஷயங்கள் தாண்டி வந்திருக்காங்க, எவ்வளவு விஷயங்கள் கடந்து வந்திருக்காங்க அப்படின்னு பிரம்மிப்பா பார்க்கிறேன். அப்பாவோட வழிகாட்டுதல் தான். இவ்வளவு வருஷத்துக்கு அப்புறமா வந்து இதை எடுத்துட்டு போக முடியுது. இது ஒரு உணர்வு. இப்படித்தான் நாங்க வளர்க்கப்பட்டிருக்கோம். இப்படித்தான் வந்து எங்களை எல்லா விஷயத்தையும் இங்க கண் முன்னாடி வந்து நிப்பாட்டி இருக்காங்க. 

 

அகரம் வந்து 20 வருஷம் கடந்தாச்சு. கிட்டத்தட்ட முதல் தலைமுறை மாணவர்கள், மாணவிகளோட குடும்பத்துல ஒரு 7,000 பேரை எங்களால வந்து தொட முடிஞ்சிருக்கு. இன்னும் இன்னும் இன்னும் பல விஷயங்கள் வந்து அகரம் மூலமா நடந்துட்டே இருக்குது. இன்னும் வந்து அதோட எடுத்துக்கிட்ட நோக்கம் வந்து குறையாம இருந்திருக்குது. இன்னும் அது இன்னும் சிறப்பா நடந்துட்டு இருக்கு அப்படின்னா, அதுக்கு முக்கியமா வந்து கல்யாணி ஐயா மாதிரி முக்கியமானவங்க வந்து நம்ம கூடவே கை கோர்த்து நின்னுட்டு இருக்காங்க. சமூகப் பார்வைனா என்ன? யாருக்காக பண்ண போறோம்? எதுக்காக பண்ண போறோம்? அப்படிங்கிற மறுபடியும் மறுபடியும் அவங்க வச்ச கேள்விகள், நம்ம கூட இருக்கிற வழிகாட்டிகளும் சரி, மாணவர்களும் சரி... இப்ப அகரமை முன்னெடுத்துட்டு போற முன்னாள் மாணவர்கள் அத்தனை பேருக்கும் அந்த பார்வையை சரியா பாத்துக்கிட்டது வந்து இவங்கள மாதிரி நிறைய வழிகாட்டிகள் தான். அதனாலயே எங்க ஆரம்பிச்சமோ, அங்க மட்டுமே அதை மட்டுமே பண்ணிராம, இன்னும் யார் யாருக்குத் தேவை? இன்னும் யார் யார் தேவைப்படும் குழந்தைகள்? இன்னும் யாரை எல்லாம் கை பிடிச்சு கூட்டிட்டு வரணும் அப்படின்னு தேடும்போது வந்து, நிறைய இஸ்லாமிய சமூகத்திலும் சரி, நிறைய மாணவிகள் நிறைய கல்வி இடைநிற்றல் எல்லாம் இருக்காங்க அப்படிங்கிறது தெரிய வந்துச்சு. அங்க போய் சில வேலைகள் பண்ண முடிஞ்சுச்சு. மலைக் கிராமத்துல போய் வேலைகள் பண்ண முடிஞ்சது. கடலோர பகுதிகளில் வேலைகள் பண்ண முடிஞ்சது. அதுமாதிரி தேவைகள் அப்படின்னு பார்த்தா இன்னும் ஏராளமா ஏராளமா இருக்கு. 


2006-ல மாணவர் பத்திரிக்கையாளரா அறிமுகம் ஆன ஞானவேல் அவர்கள் கேட்ட அந்த ஒரே கேள்விதான்: "முதல் தலைமுறை மாணவர்கள் இன்னும் இருக்காங்க. 12த் ஸ்டாண்டர்ட் எக்ஸாமை ஒரு மலைக் கிராமத்துல இருக்கிற ஒரு மாணவியும் எழுதுறாங்க, ஒரு மீனவ கிராமத்துல இருந்து ஒரு மாணவி எழுதுறாங்க. அங்க பல பகுதிகளில் ஆசிரியரே கிடையாது. ஆனா எல்லாரும் ஒரே பரீட்சைதான் எழுதுறாங்க. அவங்களை நீங்க பார்க்கிறீங்களா? அவங்க இருக்காங்கன்னு தெரியுமா? அதுலயும் முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கன்னு தெரியுமா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு. ஏன் எங்க அப்பா வந்து அப்போ 60-ல 50-ல எல்லாம் வந்து மெட்ராஸ்க்கு கிளம்பி வந்தாங்க. நீங்க சொல்றது எல்லாம் வந்து 50 வருஷத்துக்கு முன்னாடிங்க. இப்ப எல்லாம் எங்க முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்க? அப்படின்னு சாதாரணமா பேசினோம். "இல்லைணா, முதல் தலைமுறை மாணவர்கள் இருக்காங்கணா" அப்படின்னு 2006-ல சொன்னாரு. இப்ப 2026. இப்போதும் முதல் தலைமுறை மாணவர்கள் வந்து படிச்சு வெளியில வந்துட்டு இருக்காங்க. அகரம் அவங்களை தேடி போயி, அவங்களை வெளியில கொண்டு வந்து, யார் யாருக்கு உதவி தேவைப்படுதோ அவங்க கேட்கக் கூட வேண்டாம், அகரம் அங்க போய் அவங்களை வெளியில கூட்டிட்டு வந்து, அவங்களுக்கு வந்து இந்த உலகத்தை, இந்த வெளிச்சத்தைக் காமிக்குதுன்னு நினைக்கும்போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு அத்தனை பேருக்கும் நான் நன்றியை சொல்லிக்கிறேன். 

 

சினிமாலயே வந்து கிட்டத்தட்ட இப்போ 28, 29 வருஷம் ஆகப்போகுதுன்னு சொல்றாங்க. சினிமால இருந்து நான் கத்துக்கிட்ட விஷயத்தை உங்களுக்கு சொல்லணும் பார்க்கிறேன். சினிமால வந்து 'ரீடேக்ஸ்' (Retakes) அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு காட்சி வந்து ஒரே ஷாட்ல முடியறது கிடையாது. சில டைம் அஞ்சு டேக், ஆறு டேக் ஆகும். ஷாட் நல்லா வரணும் அப்படிங்கிறதுக்காக 18, 30 வாட்டி கூட 'ரீடேக்ஸ்' போவோம். ஒரு ஒரு வாட்டியும் அது தப்பாகும்போது வந்து டைரக்டர் வந்து "நீ ஃபெயில்" அப்படின்னு சொல்ல மாட்டாரு. "ஒன் மோர்" அப்படிம்பாரு. நான் டைரக்டரை வந்து வாழ்க்கையா பார்க்கிறேன். வாழ்க்கை எப்பவுமே உங்களை ஃபெயில்னு சொல்றது கிடையாது. நீங்க அப்படி நினைச்சுக்கலாம், ஆனா வாழ்க்கை அப்படி கிடையாது. நீங்க எப்பவுமே வாழ்க்கைக்கிட்ட "இன்னொரு வாட்டி பண்ண போறேன், ஒன் மோர்"னு சொல்லுங்க. "இன்னொரு வாட்டி பண்ண முடியும்"னு சொல்லுங்க. அது உங்களோட மார்க்கா இருக்கலாம், இல்லாட்டி காலேஜ்ல சேர்ற ஒரு சீட்டா இருக்கலாம், இல்லாட்டி நீங்க போற முதல் வேலையா இருக்கலாம். உங்களுக்கு திருப்தியா இல்லாட்டி அதுவே கடைசி கிடையாது, அதுவே முடிவு கிடையாது. நீங்க சொல்ல வேண்டிய ஒரே விஷயம் "ஒன் மோர்". இன்னொரு வாட்டி அதை சரி பண்ண முடியும், இன்னொரு வாட்டி இன்னொரு சான்ஸ் எடுத்துக்க முடியும், அதை இன்னும் மேம்படுத்த முடியும். So, there is always "one more" அப்படிங்கறதை வந்து ஞாபகம் வச்சுக்கோங்க. எதுவுமே முடிவு கிடையாது அப்படிங்கிறதை தயவுசெஞ்சு மறந்துடாதீங்கன்னு சொல்லுவேன். 

 

இன்னொன்னு ரிஹர்சல்ஸ் (Rehearsals). நீங்க ஒரு ரெண்டரை மணி நேரம் படம் பார்த்துடுறீங்க, ஆனா கைதட்டலே வாங்காத பல வாட்டி வந்து அந்த விஷயத்தை நாங்க வந்து ரிஹர்ஸ் பண்ணிருப்போம். பல வாட்டி ரிஹர்சல் போயிட்டே இருப்போம், அதுக்கெல்லாம் கைதட்டல் எல்லாம் கிடையாது. சோ, அதுதான் வந்து உங்களை உருவாக்குறதுன்னு நான் சொல்லுவேன். அந்த ரிஹர்சல்ஸ் ரொம்ப ரொம்ப முக்கியம். நமக்கு என்ன ரொம்ப பிடிக்குமோ அதுக்கு முழு மனசோட, முழுசா சரண்டர் ஆகி பண்ணிட்டே இருந்தா என்ன முடியாதோ அதை நாம பண்ண முடியும். நீங்க எடுத்த உடனே வந்து ஒரு ஒரு சின்ன கலையோட, ஒரு ஸ்கில்லோட வந்து வரணும் அப்படிங்கிறது அவசியம் கிடையாது. அது வந்து ஒரு 'கன்சிஸ்டன்சி' (Consistency) அப்படின்னு சொல்லுவாங்க. திரும்ப திரும்ப திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை பண்ணா அதுல நம்ம வந்து மேம்பட முடியும், அதுல முதன்மையா வர முடியும். அது வந்து ஒரு கோடிங்கா (Coding) இருக்கலாம், இல்லாட்டி டிராயிங்கா (Drawing) இருக்கலாம், அல்லது ஓட்டப் பயிற்சியா இருக்கலாம், வேறு எதுவா வேணாலும் இருக்கலாம். கன்சிஸ்டன்சி திரும்ப திரும்ப திரும்ப அதை ரிஹர்சல்ஸ் பண்ணும்போது அதுதான் நம்ம உருவாகுற இடம் அப்படின்னு நான் சொல்லுவேன். எல்லாத்துக்குமே ஒரு முதல் படிக்குன்னு ஒன்னு இருக்குது. நான் சினிமாக்கு வரும்போது நடிக்கவெல்லாம் தெரியாது, எதுவுமே தெரியாது. திரும்ப திரும்ப பண்ண ரிஹர்சல்ஸ்தான் இங்க 29 வருஷத்துக்கு அப்புறமா நிக்க வச்சிருக்கு. என்னால வர முடியும்னா நீங்க எதுல எல்லாம் ஆசைப்படுறீங்களோ அது எல்லாத்துலயும் உங்களால வர முடியும்.


அப்புறம் 'கிரெடிட்ஸ்'னு (Credits)... படம் முடிஞ்சதுக்கு அப்புறமா ஒரு கிரெடிட்ஸ்னு வந்து எவ்வளவு பேர் அந்த படத்துக்காக வேலை செஞ்சிருக்காங்க அப்படிங்கிறது அவங்களோட பேரோட வரும். ஒரு ஹீரோங்கிறது தனியா நான் அப்படியே நடந்து அப்படியே வெளியில வந்துறது இல்லை. அவ்வளவு உதவி இயக்குநர்கள் இருப்பாங்க, எழுத்தாளர்கள் இருப்பாங்க, காஸ்ட்யூம்ஸ் இருப்பாங்க, மேக்கப் இருப்பாங்க, டிரைவர்ஸ் இருப்பாங்க, ஆயா இருப்பாங்க, லைட்மேன் இருப்பாங்க. இவங்க எல்லாரோட உழைப்பின் மூலமாதான் வந்து ஒருத்தனால வந்து வெளியில வர முடியுது.


நம்ம ஒரு வாழ்க்கையில மேல வந்துட்டோம் அப்படின்னா வெறும் ரீல்ஸை மட்டும் பார்க்காம, பக்கத்துல லெஃப்ட்ல, ரைட்ல நம்ம கூட யார் இருந்திருக்காங்க? நம்ம இங்க வர்றதுக்கு யார் உதவியா வந்திருக்காங்க? நமக்கு யார் நமக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்திருக்காங்க அப்படிங்கிற அவங்களை மறந்துட வேண்டாம். அவங்களை தயவுசெஞ்சு ஞாபகம் வச்சுக்கோங்க. அதே மாதிரி ஒரு இடத்துக்கு வந்ததுக்கு அப்புறமா, நம்ம ஒருத்தரையாவது மேல உயர்த்தணும். அவங்களோட கிரெடிட்ல வந்து நம்ம பெயர் இருக்கணும். 

 

நீங்க இன்ஸ்டாகிராம், அதாவது ரீல்ஸ் (Reels) பார்த்துட்டு இருந்தீங்கன்னா அந்த ரீல்ஸ்ங்கிறது ஒரு கதைதான். அதனால வந்து நம்ம ஒண்ணுமே கத்துக்க போறதே கிடையாது. யாரை ஃபாலோ பண்றோம் அப்படிங்கிறது ரொம்ப முக்கியம். கனவு உலகமா பார்த்துட்டு இருந்தீங்கன்னா, அந்த கனவு உலகத்துலயே தான் நாம இருப்போம். எலான் மாஸ்க் எங்கிருந்து ஆரம்பிச்சாரு? 24 மணி நேரத்துல 23 மணி நேரம் வேலை செய்வாராம். ஒரு மணி நேரம் தான் வந்து தூங்குவாராம். அந்த மாதிரி எங்கிருந்து ஆரம்பிச்சாங்க? ஆரம்பிச்ச பயணம் எங்கிருந்து இங்க வந்தாங்க அப்படிங்கிறதை வந்து வெறும் ரீல்ஸ் மட்டும் பார்க்காம, நிறைய பாட்காஸ்ட் (Podcast) இருக்கும், அவங்களை பத்தின நிறைய ரிசர்ச் வொர்க் இருக்கும், அதெல்லாம் எடுத்துக்கிட்டீங்கன்னா, உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும். உங்கக்குள்ள இருக்கிற டேலன்ட்டை (Talent) வெளியில எடுத்துட்டு வர்றதுக்கு அவை உதவும். 

  

சினிமால இருந்து நான் கத்துக்கிட்டது மறுபடியும் 'ரீடேக்'—ஒன் மோர் கேளுங்க, 'ரிஹர்சல்' பண்ணுங்க, 'கிரெடிட்ஸ்'—நம்ம யாருக்காக எதுனால இங்க வந்தோமோ, எதுனால இவ்வளவு தூரம் வந்தோமோ அதை மறந்துட வேண்டாம். So, always ask for one more அண்ட் ஒருத்தரையாவது நாம் மேல உயர்த்தறதுக்கு முயற்சி பண்ணுவோம். வாழ்க்கை ரொம்ப ரொம்ப அழகானது, நம்புங்க. என்ன நினைக்கிறீங்களோ அதுவாவே நாம் ஆக முடியும். ரொம்ப ரொம்ப நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவ, மாணவியர், அகரம் ஃபவுண்டேஷன் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

*ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

 *ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம் 



*தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு - ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்*


தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது.


அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் - புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர். ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.


இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங், IAS., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.


தென்காசியில் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


தியாகராஜா டாக்கீஸ் – இயக்குநர் சிவ பிரசன்னா – ஜெய் ஆகியோர் கூட்டணியில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும் திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


*நடிகர்கள்*

ஜெய்

டெல்னா டேவிஸ்


*தொழில்நுட்பக் கலைஞர்கள்*

தயாரிப்பு நிறுவனம்: தியாகராஜா டாக்கீஸ்

தயாரிப்பாளர்: ஏ. எம். பிரபாகரன்

இயக்குநர்: சிவ பிரசன்னா (அறிமுக இயக்குநர்)

ஒளிப்பதிவாளர்: விஜய் உலகநாத்

படத்தொகுப்பாளர்: வி. ஜே. சபு ஜோசப்

தயாரிப்பு நிர்வாகி: ரங்கராஜ் பெருமாள்

கலை இயக்குநர்: ஜெயச்சந்திரன்

சண்டைப் பயிற்சி: ராம் குமார்

ஸ்டில்ஸ்: ஆனந்தன்

ஆடை வடிவமைப்பு: அபினந்தினி M

நிர்வாகத் தயாரிப்பாளர் (EP): இளங்கோ ஏகாம்பரம்

தலைமை தயாரிப்பு நிர்வாகி: கே. எஸ்.ஹேம்ராஜ் 

ஒப்பனை: எஸ். ஏ. சண்முகம்

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் வெளியிட்ட ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்

 *தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் வெளியிட்ட ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்.* 



*’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ; தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் வெளியிட்டனர்.* 


*‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி கதாநாயகனாக நடிக்கும் ’பரீட்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.*  


ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். 


‘8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகியாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா நடிக்கிறார். சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை கே.வி கிரண் கவனிக்கிறார். டான்பாஸ்கோ படத்தொகுப்பை மேற்கொள்ள, கலை இயக்கத்தை காந்தாரா உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய வேலு கவனித்திருக்கிறார். நடனத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் வடிவமைத்திருக்கிறார்.


என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலிஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகியுள்ளது.


இப்படத்தில் போலீஸை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு முக்கியமான பாடலை இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்..


சென்னை, கோவை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 


தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனா ஆகியோர் வெளியிட்டுள்ளனர். 


இதனைத் தொடர்ந்து, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி

 *விஜய் சேதுபதி நடித்த ‘பத்தா’ திரைப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி!



மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகி, அக்டோபர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பத்தா’.


இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தொகுப்பு: ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18)  , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) , சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் (Cine 1 Studios Production) சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்திருந்தனர்.


ஆக்சன் படமாகத் தொடங்கி, மானுட மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் சுவாரஸ்யமாக விரியும் கதையில் உருவான ‘பத்தா’ திரைப்படம், விமர்சன ரீதியாக ஊடகங்களால் பாராட்டப்பட்டும், வசூல் ரீதியாகத் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டும் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ‘பத்தா’ படக்குழுவினர் ‘சக்சஸ் மீட்’ வெற்றிச் சந்திப்பை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்


நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசும்போது,


"முதலில் இந்த வாய்ப்பு கொடுத்த அட்லீ அண்ணாவுக்கு நன்றி. நான் ஒவ்வொரு படத்திலிருந்தும் கற்றுக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ராஜுமுருகன் வரிசையில் பாலாஜி தரணிதரன் அவர்களிடமும் கற்றுக்கொண்டேன். அது மட்டுமில்லாமல், வாழ்க்கையில் எதற்கும் ஆசைப்படக்கூடாது, எளிமையாக வாழ வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக்கொண்டேன். மாலை 6 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும், சீக்கிரம் தூங்கப் போய்விட வேண்டும், செல்போன் தொடர்புகளை விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் கற்றுக்கொண்டேன்.


விஜய் சேதுபதி சார் அருமையாக நடித்திருந்தார். சிறுவன் சாய் நடிப்பில் ஆச்சரியப்படுத்தினான். லிஜோமோல் சிறப்பாக நடிக்கக்கூடியவர். ‘மகளே’ பாடலின் படப்பிடிப்பின்போதே எனக்குக் கண்கள் கலங்கின" என்றார்.


படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் பேசும்போது,


"இந்தப் படத்தில் அனைவருமே பிரமாதமாக நடித்திருந்தார்கள். சாய் பிரமாதமாகப் பாடல்களை மட்டுமல்ல, பின்னணி இசையையும் பிரமாதமாக அமைத்திருக்கிறார். எதிர்பாராத பல விஷயங்களைக் கொண்டதாக இந்தப் படம் இருந்தது. இந்தப் படத்தில் எதிர்மறைத் தன்மையே வராமல், விமர்சனங்கள் வந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எதிர்மறையையே பரப்பி வரும் இந்தக் காலத்தில் இப்படி அமைவது அரிது. மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர் அட்லீ இதை முன்னெடுத்திருக்கிறார். இதேபோல் அவர் நிறையப் படங்கள் செய்ய வேண்டும். இதுபோல நல்ல நல்ல படங்கள் வரவேண்டும்; விஜய் சேதுபதி சார் பாத்திரத்தில் சின்னச் சின்ன நுட்பங்களைக் காட்டி அவர் நடித்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. குறிப்பாக, அந்தப் பாத்ரூம் காட்சியில் அந்தப் பாத்திரமாகவே மாறியிருந்தார். அந்தச் சிறுவன் சாய் கடைசியில் வாக்குமூலம் போல் அழுது பேசி நடித்திருக்கும் காட்சியில் பிரமாதமாக நடித்திருப்பான். பின்னணி இசை இல்லாமலேயே மனதைக் கலங்க வைக்கும். லிஜோமோலும் மிகவும் நுட்பமாக நடித்திருப்பார். படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்திருப்பார்கள்" என்றார்.


படத்தின் போஸ்டர் டிசைனர் கோபி பிரசன்னா பேசும்போது,


"இந்தப் படத்திற்கு ரெட்ரோ போல ரூட் கொடுக்க விரும்பினேன். இந்தப் படத்தின் புவியியல் காட்சி எனக்குப் பிடித்தது. அது எனக்கு ஒரு தூண்டுதலாக இருந்தது. அதுவே அந்தத் தோற்றத்தைக் கொடுத்தது. விஜய் சேதுபதி அவர்களின் முதல் தோற்றமே பிரமாதமாக அமைந்தது. இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.


பாடலாசிரியர் கேகே நகர் கானா ஜீவா பேசும்போது,


"இந்தப் படத்தில் எனக்கு பாடல் வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு இதற்கு மேல் பேச வரவில்லை. இந்தப் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் நன்றாக உள்ளன" என்றார்.


படத்தின் இணை வசனகர்த்தா எழுத்தாளர் கரன் கார்க்கி பேசும்போது,

"இந்த மேடை எனக்கு 16 ஆண்டு காலக் கனவு. அந்த அளவுக்கு எனக்கு சினிமா மீது ஒரு கனவு உண்டு. இதுவரை எட்டு நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதியிருக்கிறேன். 16 விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால் அதில் எல்லாம் கிடைக்காதது இப்போது கிடைத்துள்ளது. இப்போது அனைவரும் ட்ரீட் கேட்கிறார்கள். முதலில் இந்தப் படத்தை இயக்குநர் அளித்தபோது தயக்கமாக இருந்தது. ஏனென்றால், பொதுவாக எனக்கு தமிழ் சினிமா மீது ஒரு விஷயத்தில் வெறுப்பு உண்டு. சென்னை வட்டார மொழியைத் தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்று. சென்னை வட்டார மொழிகளில் பல அடுக்குகள் உண்டு. சிந்தாதிரிப்பேட்டையில் பேசுவதை வியாசர்பாடியில் பேச மாட்டார்கள். ராயபுரம் மொழி வேறு மாதிரியாக இருக்கும்.

இந்தச் சென்னை வட்டார மொழியின் வேரைக் கண்டுபிடித்துச் சில சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்படி பயன்படுத்திய சொற்களின் பொருளை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.


இதன் திரைக்கதையே ஒரு பயிற்சி நிலையத்திற்கு பாடமாக வைக்கும் அளவிற்கு இருக்கிறது" என்றார்.


நடிகர் ஹரிகிருஷ்ணன் பேசும்போது,


" இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அனைவருக்கும் மிக்க நன்றி .ஒரு நல்ல படத்தில் நான் இருப்பதற்காக, நான் பங்கேற்க வாய்ப்பு கொடுத்ததற்காக நன்றி. விஜய் சேதுபதி அண்ணா அவர்களுடன் நான் நடித்ததற்காகவும் எனக்கு உரிய இடத்தை கொடுத்ததற்காகவும் நன்றி. இந்தப் படத்திற்கு நல்ல நேர்நிலை உணர்வுகள் உருவாகிக்கொண்டே வருகின்றன. அதற்கு காரணம் அட்லீ என்கிற நல்ல ஆத்மா தான் காரணம்" என்றார்.


நடிகர் பாலமுருகன் பேசும்போது ,


"எனக்கு இது தான் முதல் படம். நான் இதற்கு முன்பு மீடியாக்களில் இருந்து கொண்டு சினிமா நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது நான் இந்த மேடையில் இருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.விஜய் சேதுபதி அண்ணாவிடம் நிறைய கற்றுக் கொண்டேன்" என்றார்.


நடிகர் அர்ஜுன் சிதம்பரம் பேசும்போது,


"வந்தாரை வரவேற்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ‘பத்தா’ எங்கள் அனைவருக்கும் முக்கியமான படம். கதை சொல்லும்போது நம்பிக்கையாக இருந்தது, நடிக்கும்போது வியப்பாக மாறியது. படப்பிடிப்பில் இயக்குநர் சொன்னதை நான் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருந்தேன். நல்ல கதையை நம்பினால் அது அனைத்தையும் தேடிக் கொண்டு வரும் என்பதற்கு இந்தப் படமே ஒரு உதாரணமாக இருக்கிறது. நல்ல சினிமா வராதா என்ற ஏக்கத்தைக் கொஞ்சம் போக்குகிற படமாக இது வந்திருக்கிறது. அதில் நானும் பங்கு பெற்றிருப்பதில் மகிழ்ச்சி" என்றார்.


நடிகர் விஷ்ணு பேசும்போது,


"நான் மலையாளத்திலிருந்து இங்கே வந்திருக்கிறேன். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. என்னைக் கேட்டால், மூன்று விஷயங்களைக் கூறுவேன். முதலில் நாம் கலையைத் தேர்ந்தெடுப்பதை விட, கலை நம்மை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து கடினமாக உழைக்க வேண்டும்; மௌனமாக இருக்க வேண்டும். மூன்றாவதாக, நாம் பேசக்கூடாது; நமது படம்தான் பேச வேண்டும். இந்த மூன்றும் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள். இந்தப் படத்தில் என் நடிப்பு பிடித்திருந்தால், வாய்ப்பு கொடுங்கள்" என்றார்.


தயாரிப்பாளர்  முராத் கெதானி பேசும்போது,


"என்னை இந்தத் தயாரிப்பில் இணைத்ததற்கு அட்லீ அவர்களுக்கு நன்றி. இந்த நல்ல படப்பிடிப்புக் குழுவில் நானும் பங்கேற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இயக்குநர், விஜய் சேதுபதி, முத்துராஜ் மற்றும் அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கு மிக முக்கியமான படம். இந்தப் படத்தைப் பற்றி மட்டுமே எல்லாமே நல்ல விமர்சனங்களாக வந்தன. இது மாதிரி வரவேற்பு எந்தப் படத்திற்கும் கிடைத்திருக்காது" என்றார்.


கதாநாயகி லிஜோ மோல் ஜோஸ் பேசும்போது,


"இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரொம்ப பதற்றமாக இருந்தேன். இப்போது அந்தப் பதற்றம் குறைந்திருக்கிறது. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி. கன்னிமா பாத்திரத்தில் என்னை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு மிகவும் நன்றி. மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் தயாரிப்பாளர் அட்லீ அவர்களுக்கு நன்றி. மற்ற தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு துறையினரும் தங்களது சிறந்ததைக் கொடுத்திருக்கிறார்கள். அனைவரையும் பாராட்ட வேண்டும். இந்தப் படத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. படப்பிடிப்பிலிருந்து டப்பிங் வரை இயக்குநர் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து என்னிடமிருந்து வேலை வாங்கினார். அவரது பொறுமைக்கு நன்றி. விஜய் சேதுபதி சார் அவர்களைப் பார்த்தாலே எனக்குப் பயம். ஆனால் அவர் அருகில் இருப்பது ஒரு மேஜிக் போல் உணர வைக்கும். அந்த மேஜிக்கில் நானும் அருகில் இருந்தது, அதைப் பார்த்தது பெருமையாக இருக்கிறது. அவர் சக கலைஞர்களுக்கு கொடுக்கும் இடமும் சுதந்திரமும் என்னை ஆச்சரியப்படுத்தியது. சிறுவன் சாய் நல்ல திறமைசாலி. சஹஸ்ராவும் நன்றாக நடித்திருந்தார். ‘செல்ல மகளே’ பாடல் சாய் அப்யங்கர் இசையில் பிரமாதமாக இருந்தது. இந்தப் படம் அனைவரையும் போய்ச் சேர வேண்டும். மேலும் மேலும் பார்க்க வேண்டும். பார்த்தவர்கள் பார்க்காதவர்களிடம் கூற வேண்டும். இந்தப் படத்தை மேலும் மேலும் வெற்றிபெற உதவுங்கள்" என்றார்.


சிறுமி சஹஸ்ரா பேசும்போது,


"தேன்மொழி பாத்திரத்தில் என்னைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தை பெரிய வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அட்லீ சார் உட்பட அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. எனக்கு பொறுமையாகச் சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குநருக்கு நன்றி. விஜய் சேதுபதி அவர்களுக்கு நன்றி. நல்லதொரு உணர்வைத் தருகிற நல்லதொரு படம் இது" என்றார்.


சபரி பாத்திரத்தில் நடித்திருக்கும் சாய் பிரித்திவி ராஜ் பேசும்போது,


"இது எனக்கு முதல் படம், முதல் பயணம். பயமும் மகிழ்ச்சியும் கலந்த உணர்வாக இருக்கிறது. படப்பிடிப்பின் போதும் அப்படித்தான் இருந்தது. ஒரு பக்கம் பயமாகவும், இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஆனால் அனைவரும் என்னை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செட்டில் அங்குமிங்கும் நான் திரிந்து கொண்டிருந்தாலும், அந்த 60 நாட்களும் என்னைப் பத்திரமாக அனைவரும் கவனத்துடன் பார்த்துக் கொண்டார்கள். இயக்குநர் அழகாக நடிக்க வைத்தார். சேது சார் உடன் நடிக்கும் போது பயமாக இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சியை முகத்தில் கொண்டு வராமல் பயந்து கொண்டே இருந்தேன். அவர் நண்பரைப் போல பழகினார். ஜாலியாக இருந்தார். சில நேரம் திட்டியிருக்கிறார். ஆனால் நன்றாகப் படிக்க வேண்டுமென்று சொல்லிக்கொண்டே இருந்தார்" என்றார்.


இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் பேசும்போது,


"இந்தப் படத்தை நான்தான் இசையமைக்க வேண்டும் என்றபோது எனக்குப் பல விதமான உணர்வுகள் வந்தன. இந்தப் படத்தில் நடித்தவர்கள் இரண்டு மூன்று பேர் தேசிய விருது பெறுவார்கள் என்று நம்புகிறேன். வண்டி ஓட்டுபவர்கள் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தார்கள். யார் சிறப்பாக நடித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடித்திருந்தார்கள். முதலில் என்னை இயக்குநர் நம்பவில்லை. வேறு ஒருவரை வைத்து செய்வதாக இருந்தது. நான் ஒவ்வொரு பாடல் மூலமும் அவரிடம் நம்பிக்கை வரவைத்தேன். பிறகுதான் அவர் பின்னணி இசை அமைக்கவே சம்மதித்தார். சேது அண்ணா பிரமாதமாக நடித்திருந்தார். லிஜோ அக்காவும் சிறப்பாக நடித்திருந்தார். முதலில் கதை சொன்னபோதே அட்லீ அண்ணா என்னை நம்பினார். நானே என்னை நம்பவில்லை. ஆனால் அவர் நம்பினார். எனது இரண்டாவது படத்திற்கும் நீதான் இசையமைக்கிறாய் என்றார். அது நன்றாக வரும் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.


இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசும்போது,


"இந்த வாய்ப்பு கொடுத்த மூன்று தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. என்னிடம் குறைவாக இருப்பது, அட்லீயிடம் அதிகமாக இருப்பது, அந்த நேர்நிலை எண்ணம்தான். முதலில் சேதுவிடம் கதை சொன்னேன். அவர் நண்பர் என்பதால் ஓகே செய்துவிட மாட்டார். அவருக்குப் பிடித்துப் போனதால் அட்லீயிடம் அழைத்துக் கொண்டு சென்றார். விஜய் சேதுபதியுடன் நான் இணைந்த படங்களில் உள்ள அனுபவத்தில் சொல்கிறேன். அவர் இயக்குநர்களின் நடிகர் என்பதை நிரூபித்தவர்.


லிஜோ மோல் மூன்று நாட்களுக்குள் படப்பிடிப்பு என்கிறபோதுதான் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் பெரிய நம்பிக்கை வந்தது. எது நடக்குமோ, அது நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை வந்தது. அவர் தனது நேர்மையான பங்களிப்பை வழங்கினார். அவர் ஒரு சிறந்த நடிகை. சிறுவன் சாய் குழந்தை குணம் கொண்டவன். அவனை நடிக்க வைக்காமல் இருந்தாலே போதும். அந்தக் குழந்தைத்தன்மை சரியாக வந்தாலே சிறப்பாக அமைந்துவிடும் என்று நினைத்தேன். அப்படித்தான் வந்திருக்கிறது. சித்தாவில் வந்து பாராட்டைப் பெற்ற சிறுமி சஹஸ்ராவும் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தை நம்பினார்கள். அது படத்தில் பொறுப்பாக மாறி வெளிப்பட்டது. அதன் விளைவு சரியாக அமைந்திருக்கிறது. முத்துராஜ் என்ற அனுபவசாலி, அந்த 80s களின் உலகத்தைக் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தார். இப்படியே திறமையான ஒளிப்பதிவாளர், அற்புதமான எடிட்டர் என அனைவருக்கும் பங்கு உண்டு.


சாய் அப்யங்கர் முதலில் இசையமைக்க எனக்கு ஒரு சின்ன பயம் இருந்தது. ஆனால் அந்தப் பயத்தை நீக்கி, நம்பிக்கையை அவர் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு பின்னணி இசை அமைக்க வைத்தேன். அவர் படத்தை வேறொரு உயரத்துக்குக் கொண்டு சென்றார். அதுமட்டுமல்ல, காஸ்டியூமர் ஸ்ருதி மஞ்சரி வயதில் இளையவராக இருந்தாலும், 80s களின் உடைகளை எல்லாம் சரியாகக் கொண்டு வந்தார். டிசைனர் கோபி பிரமாதமான திறமைசாலி.

இப்படி இந்தப் படத்திற்குப் பின்னால் உழைத்தவர்கள் நிறைய பேர். அனைவருக்கும் நன்றி" என்றார்.


பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசும்போது,


"இது ஒரு நீண்ட பயணம். இந்தப் படம் வணிகப் படங்களுக்குள் கலையை கொண்டு வந்த படம். இந்தப் படத்தின் வெற்றி மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. வணிகத்தை மீறி கலை செய்யக்கூடிய இயக்குநராக பாலாஜி தரணிதரன் இருக்கிறார்.


இந்தப் படம் என் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருப்பதால் என் மனதுக்கு நெருக்கமான படமாக இருக்கிறது. படத்தில் வரும் பத்தாவுக்கு அவன் பாடியபோது ஒரு சின்ன பாராட்டு கிடைத்திருந்தால், அவன் கத்தியைத் தூக்கியிருக்க மாட்டான்.


என் வாழ்க்கையும் அப்படித்தான் திசை மாறியது. போதை அடிமையாக இருந்து மாறியிருக்கிறேன். நல்ல படங்கள் எல்லாம் நல்ல புத்தகங்கள் போன்றவை. இந்தப் படம் அப்படிப்பட்ட படம்" என்றார்.


திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது,


"விஜய் சேதுபதி சாரின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ முதல் அவரது எல்லா முக்கியமான படங்களிலும் நாங்கள் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்திலும் இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி" என்றார்.


நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது,


"எனக்கு இப்போது காய்ச்சல் வந்திருப்பது போல இருக்கிறது. பெரிய மகிழ்ச்சியாக இருந்தால் எனக்குக் காய்ச்சல் வரும். நான் நன்றி சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். யாரிடம் தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் கொண்டு சென்றதற்குப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு மிகவும் நன்றி. ஒரு படத்தை எடுத்து வந்து உங்களுக்குப் போட்டுக் காட்டிவிட்டுக் காத்திருக்கும் போது, பிரசவத்திற்கு மனைவியை அனுப்பிவிட்டு வெளியில் பதற்றத்துடன் காத்திருப்பது போல் இருக்கும்.


நீங்கள் எல்லாம் மலர்ந்த முகத்தில் வந்தீர்கள் என்றால், அன்று எங்கள் தோட்டம் முழுவதும் பூக்கள் பூத்திருக்கும். மகிழ்ச்சியாக வருவோம். கொண்டாட்டத்துடன் வருவோம். நீங்கள் நின்று, பாராட்டி, கை கொடுத்து, கட்டிப் பிடித்து, நடத்தியபோது மகிழ்ச்சியாக இருந்தது. மக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தை தங்கள் படம் போல ஆரத்தழுவிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அன்புக்குரிய மக்களுக்கும் என் ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.


உங்களுக்குப் பிடித்து விட்டால் போதும், தூக்கிக் கொண்டு செல்வீர்கள். அது பற்றி யார் என்ன மாதிரியாகப் பேசினாலும், அதற்கு விளக்கம் கொடுப்பீர்கள். அனைத்து சமூக ஊடகங்களிலும் கொண்டு செல்வீர்கள். அப்படி அதை நீங்கள் உங்கள் படத்தைப் போலவே கொண்டாடும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கும்போது, நம் வாழ்க்கை வரம்தான் என்பதை நினைவுபடுத்துகிறது.


இந்தக் கதையை மற்ற தயாரிப்பாளர்கள் நம்பவில்லை. அட்லீ தான் நம்பினார். சினிமா என்பது வியாபாரம் தான். இதைக் குறையாகச் சொல்லவில்லை. இயக்குநர் பற்றி சில கேள்விகள் கேட்டார்கள். இயக்குநரைப் பற்றிப் பேசும்போது, அவருக்கு முந்தைய படம் என்ன? அதன் வியாபாரம் என்ன? என்று கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால் அவர் இயக்கிய மூன்று படமும் அற்புதமானவைதான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி, பத்தா என மீண்டும் அற்புதமான படங்கள் தானே? ஒரு பக்கக் கதையில் நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என் முகத்தைப் பார்த்துவிட்டு கல்லூரி மாணவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் மேலும் உற்றுப் பார்த்து இருந்தால் ஒப்புக்கொள்வார். அதனால் நடிக்க முடியவில்லை.


சீதக்காதி, முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. கமல் சார், அமிதாப் சார், மோகன்லால் சார் போன்றவர்கள் நடிக்க வேண்டிய கதை என்றார். ஆனாலும் நான் நடித்தேன். தெருவில் இருக்கும் நாய்கள் அழகாக இருந்தால் கூட, அதை நாம் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஜெர்மன் ஷெப்பர்ட்தான் நமக்குப் பிடிக்கும்.


இங்கு நிறைய நபர்களை அடிப்பது, இந்தக் கூட்டமாக இருப்பது, இதெல்லாம் பெரிய படங்களில் இருப்பவை. ஆனால் மனதில் உள்ளதைச் சொல்லக்கூடிய படம் தான் பத்தா. இது உணர்வுகளைச் சொல்கிற படம். எனக்கு குழந்தைகள் பிடிக்கும். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பின் போது சின்ன பையன் சாய் உடன் நான் சரியாக பேசவில்லை, பழகவில்லை. ஏனென்றால் அவன் எனக்கு பயந்த மாதிரி நடிக்க வேண்டும். ஒரு சகஜம் ஏற்பட்டு விட்டால் அது மாறிவிடும் என்று நான் இறுக்கமாக இருந்தேன். அவன் நன்றாக நடித்திருக்கிறான். இந்தப் படத்தின் மூலம் பெரிய புகழ் வந்திருக்கிறது. அவன் திசை மாறிச் சென்றுவிடக்கூடாது. அவன் நன்றாகப் படிக்க வேண்டும் என்று சொல்வேன். லிஜோமோலின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. நன்றி. என் சகோதரர்கள் ஹரி, ஜோதி, விஷ்ணு, பாலா, உங்களுக்கும் நன்றி. நீங்கள் மிகவும் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். சாய் அப்யங்கர் மீது எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் இந்தப் படத்தைப் புரிந்துகொண்டு வேலை செய்தார். இப்படி அனைவரும் இந்தப் படத்தின் கதையைப் புரிந்துகொண்டு பணியாற்றினார்கள். அனைவருக்கும் நன்றி" என்றார்.


நிறைவாகத் தயாரிப்பாளர் அட்லீ பேசும்போது,


"எப்படி இருந்தாலும், எப்படிப் பேசினாலும் குற்றம் சொல்கிறார்கள். நான் திமிர் பிடித்தவன் என்கிறார்கள். நியாயமாக இருக்க வேண்டும்; கூட இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அந்த நேர்மை, நம்பிக்கை திமிர் என்றால் இருக்கட்டும்.


பால் கெட்டுப் போனால், தயிராகும்போது அது மதிப்பு மிக்கதாக மாறுகிறது. தயிர் கெட்டுப் போனால், நெய்யாகும்போது அது மேலும் மதிப்பு மிக்கதாக மாறுகிறது. இப்படித்தான் வாழ்க்கையிலும் சில கெட்ட அனுபவங்களால் நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்வோம். கடவுள் வழி தவறவிட்டார் என்றால், அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார் என்று அர்த்தம். அப்படிப்பட்ட பத்தாவின் அனுபவம்தான் இந்தப் படம்.


நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். அப்படி அதற்கு திமிர் என்றால் வைத்துக் கொள்ளுங்கள்.


நான் சின்ன வயதில் விஜய் சாரை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். ஷாருக்கானை வைத்துப் படம் இயக்குவேன் என்றால், யாரும் நம்ப மாட்டார்கள், சிரிப்பார்கள். அப்படித்தான் எனது ஒவ்வொரு கட்டமும் இருந்தது. இன்று பாலிவுட் வரை சென்று படம் இயக்கியிருக்கிறேன்.


நான் கறுப்பாக இருக்கிறேன், மதுரை பக்கத்தில் இருந்து வந்திருக்கிறேன். அதனால் சிலருக்குக் கேலியாகத் தெரியலாம். ஆனால் இதைப் பற்றி நான் கண்டுகொள்ளாமல் என் பாதையில் போய்க் கொண்டே இருப்பேன்.


இந்தப் படத்தைப் பொறுத்தவரை, நான் சொன்ன ஒரு சொல்லிற்காக வந்து இணைந்து கொண்ட தயாரிப்பாளர் முராத் கெதானிக்கு நன்றி.


சிலரை மறக்கவே முடியாது. அப்படிப்பட்டவர்தான் விஜய் சேதுபதி அண்ணன். அவர் நல்ல மனிதர், நல்ல நடிகர் என்பதைவிட, முதலில் நல்ல மனிதர். அவரைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி ரஜினி சார், ஷாரூக்கான் எல்லாம் பேசுகிறார்கள்.


இன்று விஜய் சேதுபதி அண்ணாவை இந்தியா முழுக்க தெரியும். அவரை நான் மேலும் மேலே கொண்டு செல்வேன். கமல் சார், விஜய் சேதுபதி அண்ணா இருவரையும் வைத்து வாய்ப்பு இருந்தால் ‘மருதநாயகம்’ படத்தினை மீண்டும் தொடங்கி எடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.


சாய் அப்யங்கர் கடவுளின் குழந்தை. அவரைப் பற்றிப் பலரும் பலவிதமாகப் பேசலாம். ஆனால் நாங்கள் லண்டன் சென்றபோது, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய சுமார் 200 இசைக் கலைஞர்களையே இவரது இசைக் குறிப்புகளுக்கு வாசிக்கவைத்து, ஆச்சரியப்படுத்திக் கைதட்டல் வாங்கி வந்தவர். நான் இங்கு சொல்கிறேன், அவர் தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளமாக வளர்வார். இப்படம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்தாலும், மேலும் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று நான் மக்களைத் தேடிச் செல்கிறேன். அது குறைவானதல்ல. மக்களை நோக்கிச் செல்வது உயர்வான விஷயம்" என்றார்.