'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் நடிக்கும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவு
'பவர் ஸ்டார்' பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் - மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
'பவர் ஸ்டார்' பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின் வித்தியாசமான கலவையில் பவர் பேக் செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும், பவர்ஸ்டாரின் பவரான நடிப்புடன் தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் படத்தை பற்றிய புதிய அப்டேட்களை தயாரிப்பாளர்கள் வெளியிடவுள்ளனர். பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை கண்டு படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
'உஸ்தா பகத்சிங்' ஒரு பெரிய அதிர்வை உருவாக்கியிருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான 'கப்பர் சிங்' திரைப்ப…
