வாழ்வு தொடங்குமிடம் நீ தானே’ விமர்சனம்
Directed by : Jeyaraj PazhaniCasting : Niranjana Neithiyar, Shruthi Periyasamy, ArshathMusic :Darshan KumarProduced by : Neelima IsaiPRO : Yuvaraj
Review "வாழ்வு தொடங்குமிடம் நீ தானே" ஜெயராஜ் பழனி இயக்கத்தில் நீலிமா இசை தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை தர்ஷன் குமார். இந்த படத்தில் நிரஞ்சனா நெய்தியார், ஸ்ருதி பெரியசாமி, அஷ்ரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் கதை. இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பதுதான் வாழ்வு தொடங்குமிடம் நீ தானே படத்தின் கதை.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிரஞ்சனா நெய்தியார் மற்றும் ஸ்ருதி பெரியசாமி இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடித்திருக்கிறார்கள். தங்களுக்கு இடையிலான உறவும் காதல் தான் என்பதை நிரூபிக்க இருவரும் போராடும் காட்சிகளில் அசத்தலாக நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தர்ஷன் குமாரின் பின்னணி இசை கவனம் ஈர்க்கும் வகையில் இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சதீஷ் கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, கடற்கரை மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகளை ரசிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறது. ஒரு ஆணுக்கும், பெண்ணும் இடையே ஏற்படும் காதல் எப்போது வரும் என்று தெரியாது, அது இயற்கையானது என்பது போல், தன் பாலினத்தவர்கள் மீது ஏற்படும் காதலும் இயற்கையானது தான், எனவே அதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்திருக்கும் இயக்குநர் ஜெயராஜ் பழனி, அதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.
இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், இந்தியாவில் ஓரினச்சேர்க்கை என்பது தவறானது இல்லை என்றாலும், மக்கள் அப்படிப்பட்ட உறவுகளை மக்கள் ஏற்றுக்கொள்ள முன்வருதில்லை மாறாக ஓரினச்சேர்க்கையாளர்களை குற்றவாளிகளாகவே பார்க்கும் சூழலை மாற்றியமைக்கும் முயற்சியாக இயக்குநர் ஜெயராஜ் பழன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சில குறைகள் இருந்தாலும், ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்படும் காதலை போல் தன் பாலினத்தவர்கள் மீது ஏற்படும் காதலும் இயற்கையானது தான், என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்.
"வாழ்வு தொடங்குமிடம் நீ தானே" படத்திற்கு மதிப்பீடு 3/1

.jpg)
.jpg)