மறக்குமா நெஞ்சம் திரை விமர்சனம்
படத்தை பற்றிய அலசல்
எடுத்துக்கொண்ட கதைக்களம் நம் மனதை தொடுவது போல் இருந்தாலும், திரைக்கதை வலுவாக இல்லாத காரணத்தினால் லேசாக சரிவை சந்திக்கிறது. ஒருசில இடங்களில் நம்மை ரசிக்க வைக்க தவறிவிட்டார் இயக்குனர். 90ஸ் கிட்ஸ் நினைவுகளை திரையில் காட்டினாலும், அதை இன்னும் கூட சுவாரஸ்யமாக காட்டியிருக்கலாம். அதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். மேலும் கதாபாத்திர தேர்வும் கச்சிதமாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஹீரோ, ஹீரோயின், அவர்களுடன் இருந்தவர்கள் யாருமே பள்ளி மாணவர்கள் கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட பொருந்தவில்லை.நகைச்சுவையும் சில இடங்களில் ஒர்கவுட் ஆகவில்லை. ஆனால், நமக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை குறித்தும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து இயக்குனர் காட்டிய விஷயம் நன்றாக இருந்தது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங் ஓகே.
பிளஸ் பாயிண்ட்
கதைக்களம்
மைனஸ் பாயிண்ட்
கதாபாத்திரங்கள் தேர்வு
திரைக்கதை
எடிட்டிங்
