14 வருட காதல்!! கடத்தல் செய்கிறாரா வருங்கால கணவர்!! உண்மையை கூறிய வரலட்சுமி சரத்குமார்..
சமீபத்தில் அளித்த பேட்டியில், நிக்கோலய் சச்தேவ்-ஐ பொருத்தவரை அவரது தந்தை ஆர்ட் கேலரி வைத்திருந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அந்த தொழில் செய்து வந்ததாகவும் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு படுக்கையானதால் என் வருங்கால கணவர் அவரின் 16 வயதில் இந்த தொழிலுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆர்ட் கேலரி என்றால் கடத்தல் பொருட்கள் என நினைத்து கொள்ளவேண்டாம், அங்கு கலைத்தன்மை கொண்ட விலையுயர்ந்த கலைப்பொருட்கள் விற்கப்படும். சிலர் ஆர்ட் கேலரி என்றால் கடத்தல் என்று நினைக்கிறார்கள். 14 வருடமாக நிக்கோலயை எனக்கு தெரியும். இப்போது தான் கல்யாணம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம். என் அப்பா சரத்குமார் முன்பு தான் என்னை பிரபோஸ் செய்தார் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
