-

Loading latest news...

Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..

 

Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்.. 

  Actor Dhanush Second Marriage : கோலிவுட் திரையுலகில் இருக்கும் முதல் வரிசை கதாநாயகர்களுள், முக்கியமான இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் தனுஷ். சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர், தமிழ் திரையுலகில் 24 ஆண்டுகளுக்கு முன்னர் தடம் பதித்தார். இவரது தந்தை கஸ்தூரி ராஜா, ‘துள்ளுவதாே இளமை’ படத்தில் இவரை அறிமுகப்படுத்த, அடுத்து தனது அண்ணன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் சைக்கோ கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் தனுஷ்.  நடிகர் தனுஷ், திரையுலகில் தலைத்தூக்குவதற்கு முன்பாகவே குடும்ப தலைவராக மாறிவிட்டார். இவரது காதல் கொண்டேன் படத்தின் செலிப்ரிட்டி ஷோ பார்க்க வந்த ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிற்கு, தனுஷை பிடித்து போக அப்படியே தங்கள் நட்பை தொலை பேசிகள் மூலமாகவும், நேரில் சந்தித்தும் வளர்க்க ஆரம்பித்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. உடனே, இருவருக்கும் சுற்றமும் நட்பும் சூழ, 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. அப்போது நடிகர் தனுஷிற்கு வயது 21, ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வயது 22. மிக இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை, சில ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட தொடங்கியது. ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து வாழ முடிவு செயதிருப்பதாக கூறி கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இதை பார்த்து முதலில் ஷாக்கான ரசிகர்கள், பிறகு “பொறுமையா சேந்துப்பாங்க..” என்று நம்பினர். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது மட்டுமன்றி, தங்களின் பிள்ளைகளை Co-parenting முறையில் வளர்த்தும் வருகின்றனர்