-

Loading latest news...

இயக்குநர் பாலா பிடிவாதமாக வணங்கான்

இயக்குநர் பாலா பிடிவாதமாக வணங்கான்


 1999ம் ஆண்டில் வெளிவந்த 'சேது' படம் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா. அதன்பின் 'நந்தா, பிதாமகன், நான் கடவுள்' ஆகிய படங்கள் அவருடைய சிறந்த படைப்புகளாக அமைந்தன. அந்தப் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் விக்ரம், சூர்யா, ஆர்யா ஆகியோர் காலூன்றக் காரணமாக அமைந்தார்.

 அதன்பின் அவர் இயக்கத்தில் வெளிவந்த 'அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வர்மா' ஆகிய படங்களில் 'பரதேசி' படம் மட்டுமே தரமான ஒரு படைப்பாக இருந்தது. மற்ற படங்களில் பாலாவின் முத்திரை பதிக்கப்படவில்லை. 2018ல் வெளிவந்த 'நாச்சியார்' படத்திற்குப் பிறகு கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக பாலாவின் படம் ஒன்று தியேட்டர்களில் வெளியாகவில்லை. நாளை அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'வணங்கான்' படம் வெளியாகிறது. மீண்டும் பழைய பாலாவை இந்தப் படத்தில் பார்க்க முடியுமா என்று ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.