Thank you for the Phenomenal Response for FamilyPadam !!
எங்களின் “UK கிரியேஷன்ஸ்” தயாரிப்பில் முதல் திரைப்படமான “ஃபேமிலி படம்” கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டு 28 நாட்களில் படப்பிடிப்பு நடத்தி கடந்த டிசம்பர் மாதம் தியேட்டரில் ரிலீஸ் செய்தோம், அதற்கு பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள், மக்கள் கொடுத்த மிகப்பெரிய வரவேற்பினை தொடர்ந்து கடந்த ஜனவரி 15ஆம் தேதி, பொங்கல் அன்று “AHA OTT” தளத்திலும் மற்றும் வெளிநாடுகளில் “TENTKOTTA OTT” தளத்திலும் மற்றும் “SIMPLY SOUTH OTT’ தளத்திலும் வெளியானது. அன்று முதல், பத்திரிக்கை மற்றும் ஊடகம் நண்பர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் அன்பையும், பாராட்டுக்களையும் எங்கள் திரைப்படத்திற்கு தொடர்ந்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் குறுகிய நாட்களில் சிறிய முதலீட்டில் எடுத்து ரிலீஸ் வரை எங்களுடன் துணை நின்ற படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் மற்றும் படத்தில் பணியாற்றிய அத்தனை டெக்னீசியன்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
கூடிய விரைவில், எங்களது நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்புடன் உங்களை மீண்டும் சந்திப்போம்.
அனைவருக்கும் நன்றி,
K. Balaji
