-


Loading latest news...

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் 16 வது படம் "ஹிட்டன் கேமரா" 'HIDDEN CAMERA'

 ஜித்தன் ரமேஷ் நடிக்கும் 16 வது படம் "ஹிட்டன் கேமரா" 

'HIDDEN CAMERA'  



ரிலாக்ரோ புரொடக்சன்ஸ் சார்பில், பிரமாண்டமாக தயாரிக்கிறார் ஷாம்ஹுன்.


'உயிரும், நேரமும் ஒரு முறை போனால், திரும்ப வராது' என்ற கருவை மையமாக வைத்து, த்ரில்லர், ஆக்‌ஷனுடன் உருவாகும் படம் 'ஹிட்டன் கேமரா' என்கிறார் இயக்குநர் அருண்ராஜ் பூத்தனல்.


சென்னை சாலிகிராமம், பிரசாத் லேபில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது.


நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஷாம்ஹுன், வின்சென்ட் செல்வா, அப்புக்குட்டி, காதல் சுகுமார், லொள்ளு சபா மனோகர், எஸ்.பி.ராஜா, டாக்டர் பி.என்.முகமது பெரோஸ், சூர்யா, திரவிய பாண்டியன், நடிகைகள் கிருஷ்ணா தவே, மீனு, ஸ்மிதா, பேபி அதிதி ஆகியோர் கலந்து கொண்டனர். 


படம் மாபெரும் வெற்றியடைய பிராத்தனைகள் செய்து, தோரணமலை முருகன் கோவில் அறங்காவலர் செண்பகராமன் படக்குழுவினர் அனைவரும் அருட்பிரசாதம் வழங்கினார்.


திரைக்கதை வசனம் இயக்கம் அருண்ராஜ் பூத்தனல், ஒளிப்பதிவு வி.எஸ்.சஜி, இசை ஸ்ரீனிகேத் விஷால், கதை அருண் சாக்கோ, எடிட்டிங் அர்ஜூன் ஹரிந்ரநாத், பாடல்கள் ஆர்.டி.உதயகாந்த், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். ரிலாக்ரோ புரொடக்சன்ஸ் சார்பில், ஷாம்ஹுன் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.


படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், நாகர்கோவில், கேரளா, வியட்நாம் ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது!