தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai)
இந்திய சினிமா மட்டுமின்றி ஹாலிவுட் வரை கால் பதித்த நடிகர் தனுஷ் நாளை ஜூலை 28 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனுஷ் அவரது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த மாபெரும் ரத்ததான முகாம் நேற்று (26/7/26)வேல்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி ( Manjakaranai)
வளாகத்தில் இந்தியா முழுக்க உள்ள ரசிகர் மன்றத்தினர் முன்னிலையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்கள் 150 பேருக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் 30 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை குடும்பத்திற்கு 30 ஆட்டோ வழங்கி உள்ளார் தனுஷ். 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். மேலும் காலை, மதியம், இரவு என மூன்று நேரத்திற்கும் பந்தி வைத்து விருந்தளித்தார் தனுஷ்.

