-

Loading latest news...

நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) - எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ - முதல் பாடல் வெளியீடு

 *நடிகர்கள் பஸில் ஜோசப் (Basil Joseph) - எல். கே. அக்ஷய் குமார் (L. K. Akshay Kumar) இணைந்து நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ படத்தின் ‘அட்ரா பரமா.. ’ - முதல் பாடல் வெளியீடு! 



மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - ‘சிறை’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் எல். கே. அக்ஷய் குமார் ஆகிய இருவரும் இணைந்து முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.


இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராவடி (Raawadi)’ திரைப்படத்தில் பஸில் ஜோசப், எல். கே. அக்ஷய் குமார், ஜான் விஜய்,  ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் PA., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளைப் பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பி. எஸ். ஹரிஹரன் பணியாற்றியிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெயினராகத் தயாராகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்திற்கு எல். கே. விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.


இப்படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பிரியா ரவி பணியாற்றியுள்ளார். நடன அமைப்பை எம். ஷெரிப் மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை டான் அசோக் கவனித்துள்ளார். ஒலி வடிவமைப்புப் பணிகளை எஸ். அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஆகியோரும், ஒலி கலவைப் பணிகளை சுரேன் ஜி -யும் மேற்கொண்டுள்ளனர். படப்பிடிப்புத் தளப் புகைப்படக் கலைஞராக ஆகாஷ் பாலாஜி பணியாற்றியுள்ளார். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜ் கவனிக்க, தயாரிப்பு நிர்வாகியாக ஆர். எஸ். வெங்கட், எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராக மணிகண்டன், கிரியேட்டிவ் புரொடியூசராக அருண் கே. ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.


வரும் டிசம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொடி பொடியா அடிச்சது பொடியன் இல்ல பாத்துக்க பாத்துக்க...’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது . இந்தப் பாடலைப் பாடலாசிரியர் உதய் எழுத, பின்னணிப் பாடகர் அறிவு பாடியிருக்கிறார். ஜென் மார்ட்டினின் இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடல் இளம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய துள்ளல் இசைப் பாணியில் அமைந்திருப்பதால் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.


‘படிடா பரமா’ என்ற வசனம் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அட்ரா பரமா’ பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


https://www.youtube.com/watch?v=yey-EW9Njjo