-

Loading latest news...

*ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் 'கிங் 100- KING 100 ' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 *ர.கார்த்திக் இயக்கத்தில் உருவான நாகார்ஜுனாவின் 'கிங் 100- KING 100 ' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு 



'நித்தம் ஒரு வானம்', 'மேட் இன் கொரியா' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ர.கார்த்திக் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகி வரும் 'கிங் 100 - KING 100' திரைப்படத்தின் பிரத்யேக க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.


'உதயம்' , 'இதயத்தை திருடாதே', 'தோழா' 'குபேரா', 'கூலி' திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான பான் இந்திய நட்சத்திர நடிகரான நாகார்ஜுனா... அவருடைய திரையுலக பயணத்தில் நூறாவது திரைப்படத்த்தில் நடித்த்து வருகிறார். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்தை தமிழ் திரையுலகின் இளம் திறமையான இயக்குநர் ர.கார்த்திக் இயக்கி வருகிறார். ராஜா மகாதேவன் ஒளிப்பதிவு செய்யும்  இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் . பிரம்மாண்டமான கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் அக்கினேனி குடும்பத்தினர் தயாரிக்கின்றனர்


நட்சத்திர நடிகரான நாகார்ஜுனாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நடிப்பில் தயாராகி வரும் 'கிங் 100- KING100' திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன்எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளிம்ப்ஸ்... படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற செய்திருக்கிறது. அத்துடன் ர.கார்த்திக்  நாகார்ஜுனா கூட்டணி மிகப் பெரும் சாதனையை படைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உண்டாக்கி இருக்கிறது.


படைப்பாளுமை மிக்க இயக்குநர் ரா. கார்த்தியின் கற்பனையில் உருவான 'கிங் 100 - KING 100' படத்தின் பிரத்யேக காணொளியில்.. நாகார்ஜுனாவின் திரை தோற்றம்- திரை ஆளுமை - திரை பங்களிப்பு - என அனைத்து அம்சங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்திருப்பதால், நாகார்ஜுனாவின் ரசிகர்கள் இதனை பிறந்தநாள் பரிசாக கொண்டாடி, இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.


இயக்குநர் ர. கார்த்திக், நாகார்ஜுனாவிற்காக அதிலும் அவருடைய நூறாவது திரைப்படத்திற்காக உருவாக்கி இருக்கும் காட்சி அமைப்புகள்- உரையாடல்கள்- அனைத்தும் பிரம்மாண்டமானதாகவும், ரசிகர்களுக்கு பிரமிக்கத்தக்க வகையிலான திரையரங்க அனுபவத்தை வழங்குவதாலும். இதனை அனைத்து தரப்பு ரசிகர்களும் வரவேற்று இருக்கிறார்கள்.


நடிகர்,:

நாகார்ஜுனா


தொழில்நுட்பக் குழு :


எழுத்து & இயக்கம் : ர.கார்த்திக்

தயாரிப்பு நிறுவனம் : அன்னபூர்ணா ஸ்டுடியோஸ்

தயாரிப்பாளர் :  அக்கினேனி குடும்பம்

இசை : தேவி ஸ்ரீ பிரசாத்

ஒளிப்பதிவு : ராஜா மகாதேவன்

தயாரிப்பு வடிவமைப்பாளர் : என். சதீஸ் குமார்

படத்தொகுப்பு :  நவீன் நூலி

கிரியேட்டிவ் புரொடியுசர்: பிரசாத் நிம்மகாயலா

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ


https://www.youtube.com/watch?v=OgF4eRYcHd8

Future Runup Films Achieves Hat-Trick of Blockbuster Successes with Lokah, Kalamkaval and Bethlehem Kudumba Unit*

 *‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!*


மலையாளத் திரைப்படங்களை கேரளாவுக்கு அப்பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், (Future Runup )  ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் விநியோகத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.


தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்திய இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படம் அமைந்தது. தொடர்ந்து ஷேன் நிகம் நடித்த ‘பல்டி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டு தனது விநியோகப் பணியை வலுப்படுத்தியது.


கடந்த ஓணம் பண்டிகையையொட்டி துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜிதின் K. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘களம்காவல்’ திரைப்படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிட்டது. இந்த இரு படங்களுக்கும் கிடைத்த வரவேற்பு, நிறுவனத்தின் விநியோகப் பயணத்திற்கு மேலும் வலுசேர்த்தது.


இந்நிலையில், இந்த ஓணம் பண்டிகையில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. கிரிஷ் A.D. இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் செப்டம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன. இப்படத்தை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது.


இதன் மூலம், கேரளத்திற்கு வெளியே மலையாளத் திரைப்படங்களை விநியோகம் செய்வதில் ‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ எனத் தொடர் வெற்றிகளைப் பெற்று ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி, தரமான திரைப்படங்களை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


மலையாள சினிமா கேரள எல்லைகளைத் தாண்டி இந்திய அளவில் தனது வரவேற்பை விரிவுபடுத்தி வரும் நிலையில், ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் மலையாளத் திரைப்படங்களுக்கான தேசிய அளவிலான விநியோகத் துறையில் வளர்ந்து வரும் முக்கிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தி வருகிறது.


*Future Runup Films Achieves Hat-Trick of Blockbuster Successes with Lokah, Kalamkaval and Bethlehem Kudumba Unit*


Future Runup Films is making significant strides in the film distribution sector with a hat-trick of blockbuster successes through Lokah, Kalamkaval and Bethlehem Kudumba Unit. Founded with the vision of taking Malayalam films to Indian markets beyond Kerala, Future Runup Films is rapidly emerging as a notable distribution force within a short span of time.


The company initially began its operations with a focus on distributing Malayalam films in Tamil Nadu. Its first release was Narivetta, starring Tovino Thomas. The company subsequently strengthened its presence in the Tamil Nadu market with Balti, starring Shane Nigam, and expanded its operations with the aim of bringing Malayalam cinema to audiences across India.


Future Runup Films was founded by producer and actor Arun Narayanan, actor and director Dileesh Pothan, and Chennai-based entrepreneur Anup Kumar. The company’s primary objective is to identify new markets for Malayalam cinema outside Kerala and take quality Malayalam films to audiences across the country.


Beyond Tamil Nadu, Future Runup Films is also undertaking the distribution of Malayalam films across various regions of India outside Kerala. The strong response received by the films distributed by the company so far has further strengthened this vision.


Last Onam, Future Runup Films distributed Lokah: Chapter 1 – Chandra, produced by Dulquer Salmaan, in Tamil Nadu. This was followed by Kalamkaval, starring Mammootty and directed by Jithin K. Jose, which was also distributed by Future Runup Films in Tamil Nadu.


Following the success of Lokah and Kalamkaval, the company is now distributing Bethlehem Kudumba Unit, starring Nivin Pauly and Mamitha Baiju, this Onam season.

Directed by Girish A.D., the Tamil and Telugu versions of Bethlehem Kudumba Unit will release in theatres on September 4. Future Runup Films is handling the distribution of the film across Tamil Nadu, Andhra Pradesh and Telangana.


With this, Future Runup Films is achieving a hat-trick of blockbuster successes in the distribution of Malayalam films outside Kerala. The company continues to work towards creating greater opportunities for Malayalam cinema in markets beyond Kerala and bringing quality films to audiences across different parts of the country.


At a time when Malayalam cinema is expanding its reach beyond the borders of Kerala, Future Runup Films is positioning itself as a new and emerging force in the national distribution network for Malayalam cinema.

இரண்டு கோடி ரசிகர்கள் எங்களின் இலக்கு!

 இரண்டு கோடி ரசிகர்கள் எங்களின் இலக்கு!



அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தில் 'இரண்டு கோடி ரசிகர்களை இணைப்பது எங்கள் இலக்கு' என்றார் அகில இந்திய தலைவர் முத்துத்துரை!


அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், அகில இந்திய தலைவர் முத்துத்துரை, 1000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கினார்.


இதுவரை, ஆன்லைனில் 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளோம். அதில் 7 லட்சம் ஆண்கள். 3 லட்சம் பெண்கள் என்ற தகவலையும் தெரிவித்தார்.


தையல் மிஷின், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என லெஜன்ட் ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலம் நிறைய நலிந்த மக்களுக்கு வழங்கியுள்ளோம்.



எங்களின் இலக்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பது. தொடர்ந்து நலிந்தோருக்கு உதவுவது என்று அகில இந்திய லெஜன்ட் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் முத்துத்துரை கூறினார்.


இன்று நடைப்பெற்ற மகளிர் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்துக் கொண்டனர்.


விழாவில், லெஜன்ட் சரவணன் அவர்களுக்கென்று, ரசிகர்களால் உருவாக்கப்பட்ட தனி பாடல் ஒன்று, ரசிகர்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்டது.


இறுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது!


@GovindarajPro

இந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனை, விஜய் அவர்கள் முதல்வராக ஆகியிருப்பது

 இந்த ஆண்டின் மிகப்பெரிய சாதனை, விஜய் அவர்கள் முதல்வராக ஆகியிருப்பது!



--- 'இசைக் கவிஞர்' சௌந்தர்யன்.


சப்தஸ்வரங்கள் ரிகர்சல் ஸ்டுடியோ நிறுவனர் கெளசி அவர்கள் முயற்சியில், ஆயிரம் பாடல்கள்,தொடர்ச்சியாய் நூற்று இருபது மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி,சாதனை படைத்ததற்கான சாதனை சான்றிதழ் WORLD RECORDS UNION தலைமைப் பொறுப்பாளர் மூலமாக பெற்றார்கள். இந்த நிறைவு விழா சென்னை தி.நகர் பி.டி தியாகராயர் அரங்கில் நடந்தது.



இதில் சிறப்பு அழைப்பாளராக 

இசைக்கவிஞர் செளந்தர்யன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து, வாழ்த்தி பேசினார்.


"ஆண்களுக்கு இப்படியொரு சாதனை புரிவதில்,பெரிய போராட்டம் என்ற ஒன்று இருக்காது. ஆனால் பெண்களுக்கு இயல்பாகவே குடும்பம், குழந்தைகள், அதிகமான பொறுப்புகள் நம்மை விட அவர்களுக்கு அதிகம். அதையும் சமாளித்து, கெளசி அவர்கள் இப்படியொரு சாதனை புரிந்திருக்கிறார்கள் என்றால் பாராட்டத்தான் வேண்டும்.


இந்த வருடம் பாராட்டும் படியாய் நிறைய சாதனைகள் நடந்து கொண்டிருக்கிறது. விஜய் அவர்கள் மிகப்பெரிய சாதனையாய் முதல்வராய் வந்திருக்கின்றார். அதில் பெண்கள் MLA கள் ஆகவும், அமைச்சர்களாகவும் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கெளசி அவர்களும் சாதனை படைத்திருக்கின்றார். இவரது சாதனை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லட்டும். ஆஸ்கர் அவார்டு கூட இவர் வாங்கட்டும்".... என வாழ்த்தி, பேசினார் இசையமைப்பாளர் சௌந்தர்யன்.


@GovindarajPro

அமரம்’ திரைப்பட விமர்சனம்

 அமரம்’ திரைப்பட விமர்சனம்


கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமம் ஒன்றில் விவசாயம் பொய்த்து போன நிலையில், அம்மக்களின் பொருளாதார நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில பெரிய மனிதர்கள், அவர்களுக்கு குறைவான கூலி கொடுத்து செம்மரம் வெட்டுவது, கொலை செய்வது போன்ற தவறான வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். கூலிப்படை நபராக இருக்கும் அந்த கிராமத்தைச் சேர்ந்த நாயகன் ராஜன் தேஜஸ்வர், நாயகி ஐரா அகர்வாலின் தந்தையை அவர் கண் முன்னே கொலை செய்கிறார்.


தனது தந்தையை கொலை செய்தவரை கொன்று பழி தீர்க்க முடிவு செய்யும் நாயகி ஐரா அகர்வால், கொலையாளி பற்றி எந்த ஒரு ஆதாரமும் இல்லாத போதிலும் அவரை தேடி செல்ல முயற்சிக்கிறார். அவரது காதலர் மற்றும் அவரது தந்தையான எம்.எல்.ஏ நாகிநீடு அவருக்கு உதவ முன் வருகிறார்கள். அதன்படி ராஜன் தேஸ்வர் கண்டுபிடிக்கப்பட்டு, அவரை கொலை வெறியோடு நெருங்கும் ஐரா அகர்வால், திடீரென்று மனம் மாறி அவரை கொலை செய்யும் முடிவை கைவிட்டு விடுகிறார். இதனால், எம்.எல்.ஏ மற்றும் அவரது மகனால் அவருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிக்கும் நாயகனுக்கும், அவரை சார்ந்தவர்களுக்கும் காவல்துறை மற்றும் எம்.எல்.ஏ ஆட்களினால் பேராபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து தப்பிக்க நாயகியுடன் பயணிக்கும் நாயகன் ராஜன் தேஜஸ்வர், நாயகியையும், தன் ஊர் மக்களையும் காப்பாற்றினாரா ? , இல்லையா ? என்பதை தமிழ் சினிமாவில் பேசப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அம்மக்களின் வாழ்வியல் பின்னணியோடு சொல்வது தான் ‘அமரம்’.


மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அம்மக்களின் வாழ்வியலை அதிகம் பேசும் தமிழ் சினிமாவில் கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அம்மக்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்யும் ஒரு படைப்பாக கதைக்களத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா, அதை ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் பாணியில் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.


நாயகனாக நடித்திருக்கும் ராஜன் தேஜஸ்வர், முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதிகம் பேசாமல் படம் முழுவதும் அமைதியாக இருந்தாலும், தன் பார்வையின் மூலமாகவே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் மிக கடுமையாக உழைத்திருக்கும் ராஜன் தேஜஸ்வர், கரமுரடான பழங்குடியினர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, தனது அளவான நடிப்பின் மூலமாகவும், அழுத்தமான உடல்மொழி மூலமாகவும் அருகன் என்ற கதாபாத்திரத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ஐரா அகர்வால், துடிப்பான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். தந்தையின் கொலைக்கு பழி தீர்க்க கொலை வெறியோடு நாயகனை தேடுபவர், அவர் கிடைத்தும் கொலை செய்ய முடியாமல் தடுமாறும் காட்சியில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.


பழங்குடியின சமூக மூத்தவராக நடித்திருக்கும் ஜார்ஜ் மரியான், பழங்குடி மக்களை கூலிப்படையாக பயன்படுத்தும் சாய் தீனா, எம்.எல்.ஏ-வாக நடித்திருக்கும் நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வு.


ஒளிப்பதிவாளர் பரத் குமார், கிழக்குத் தொடர்ச்சி மலை கிராமங்களின் வறட்சியையும், மகிழ்ச்சியற்ற அம்மக்களின் முகங்களையும் இயல்பாக காட்சிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டல்.


மிக்கி ஜெ .மேயர் இசையில் பாடல்கள் கதைக்களத்திற்கு ஏற்றபடியும், புதுமையாகவும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டியிருப்பதோடு, திரைக்கதையின் வேகம் மற்றும் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது.


படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் பயணிக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கும் ஆர்.ஸ்ரீராமர், அனைத்துக் காட்சிகளையும் சுருக்கமாக தொகுத்து படத்தை விறுவிறுபாக நகர்த்தியிருப்பதோடு, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பற்றிய தகவல் மற்றும் அம்மக்களின் வாழ்வியல் எளிய முறையில் சொல்லப்பட்டிருந்தாலும், பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்து விடுகிறார்.


எழுதி இயக்கியிருக்கும் திருஅருள் கிருஷ்ணா, ஆபத்தில் இருக்கும் நாயகியை காப்பாற்றும் நாயகன், என்ற வழக்கமாக கதைக்கருவை, தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கிழக்குத் தொடர்ச்சி மலை மற்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதரத்தை கதைக்களத்துடன் சேர்த்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.


செம்மரம் வெட்டுபவர்கள் மற்றும் கூலிப்படையாக செயல்படுகிறவர்கள் யார் ?, அவர்களது பின்னணி என்ன ?, என்பதை சுவாரஸ்யமாக சொல்லி முதல் பாதி படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்லும் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா, இரண்டாம் பாதியில் ஆபத்தில் இருக்கும் நாயகியை காப்பாற்றும் நாயகனின் உணர்வுப்பூர்வமமான பயணம் மற்றும் அவரை துரத்தும் பிரச்சனைகளை எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் காட்சிப்படுத்தி பார்வையாளர்களை படத்துடன் ஒன்றி விட செய்கிறார்.


சொல்லப்படாத ஒரு சமூக மக்களின் வாழ்வியலை பின்னணியாக வைத்துக் கொண்டு காதல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற கமர்ஷியல் அம்சங்களை அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் திருஅருள் கிருஷ்ணா, பார்வையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் ஒரு படத்தை கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.


மொத்தத்தில், ‘அமரம்’ அனைவரது மனதையும் கவரும்.

டாக்ஸிக்’ திரைப்பட விமர்சனம்

 டாக்ஸிக்’ திரைப்பட விமர்சனம்

1947 முதல் 1970 காலக்கட்டங்களில் கதை நடக்கிறது. அப்போதையக் காலக்கட்ட கோவா மாநிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலில் கதை தொடங்குகிறது. துடிப்பான மற்றும் முரட்டுத்தனம் மிக்க இளைஞரான நாயகன் யாஷ் மற்றும் அவரது சகோதரி நயன்தாரா இருவரும் இணைந்து தங்களது எதிரிகளை வேட்டையாடுகிறார்கள். அக்கா நயன்தாராவுக்கு தனது தம்பி முழு நகரத்தையும் ஆள வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவருக்கு துணையாக பயணிப்பவர் திடீரென்று சிலரது சதியால் கொல்லப்படுகிறார். அக்காவின் கொலைக்குப் பிறகு கோவாவை விட்டு வெளியேறும் யாஷ், சீனாவில் தனது ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துகிறார்.


இதற்கிடையே யாஷ் மீண்டும் கோவா திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாஷியின் வருகையை அறிந்து அவரது மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்துக் கொள்கிறார். அவரது 10 வயது மகனை யாஷ் கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அது அவரால் முடியாமல் போக, அவரை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்.


மீண்டும் வழக்கம் போல் கோவாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் யாஷ், ருக்மணி வசந்தை திருமணம் செய்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்க, அவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவங்கள் நடக்கிறது. அவரது சாம்ராஜ்யத்திற்கும், அவரது மகனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து தனது மகனையும், சாம்ராஜ்யத்தையும் யாஷ் காப்பாற்றினாரா ? , அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்பதை பிரமாண்டமான முறையில் சொல்வது தான் ‘டாக்ஸிக்’.


‘கே.ஜி.எப்’-ன் மிகப்பெரிய வெற்றியின் மூலம் ‘டாக்ஸிக்’ மீதான மக்களின் எதிர்பார்ப்பை, பிரமாண்டம் மற்றும் வன்முறை காட்சிகளின் மூலமாக பூர்த்தி செய்து விடலாம், என்ற தவறான முடிவால் படம் பாதாளத்திற்கு சென்றிருக்கிறது.


பலமான கதை மற்றும் நம் கலாச்சாரத்தை சார்ந்து பயணிக்கும் திரைக்கதை இல்லை என்றால், எத்தகைய பிரமாண்டம் இருந்தாலும், அந்த படத்தை மக்கள் குப்பையில் வீசுவார்கள், என்பதை நிரூபிக்கும் ஒரு படமாக ‘டாக்ஸிக்’ அமைந்திருக்கிறது.


ராயா மற்றும் டிக்கெட் என்ற அப்பா-மகன் வேடங்களில் நடித்திருக்கும் யாஷ், விதவிதமான மேல்நாட்டு ஆடைகளை உடுத்திக் கொண்டு, பலவிதமான பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, விதவிதமான பாட்டில்களில் மது அருந்துவது, கண் இமைக்கும் நேரத்தில் தலை, கை, கால்களை வெட்டுவது என்று வன்முறையும், ஆபாசமும் நிறைந்த ஒரு வாழ்கையை வாழ்ந்திருக்கிறார். அப்பா, மகன் இருவரும் வன்முறைக்கு சலைத்தவர்கள் இல்லை என்று சொல்லும் விதத்தில் கொத்து கொத்தாக கொலை செய்கிறார்கள். படம் முழுவதும் நடப்பது, சிக்ரெட் புகைப்பது, நிர்வாணமாக நிற்பது, துப்பாக்கி சண்டை, வெட்டி வீழ்த்துவது என்று பயணிக்கும் யாஷ், கிளைமாக்ஸுக்கு முன்பு கொஞ்சம் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அங்கேயும் ஆக்‌ஷன் காட்சிகள் ஆதிக்கம் செலுத்துவதால் யாஷ் என்ற நடிகர் காணாமல் போய் விடுகிறார்.


யாஷின் சகோதரியாக நடித்திருக்கும் நயன்தாரா, ஆரம்பத்தில் சில அதிரடியான காட்சிகளில் அமர்க்களமாக எண்ட்ரி கொடுத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் செட் பிராபர்ட்டி போல் அமைதியாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார். யாஷின் முதல் மனைவியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், காதலியாக நடித்திருக்கும் தாரா சுதாரியா, வில்லியாக நடித்திருக்கும் ஹுமா குரேஷி என திரை முழுவதும் நிரம்பியிருக்கும் நாயகிகளின் நடிப்பை விட அவர்களின் ஆடைகள் தான் கவனம் ஈர்க்கிறது.


ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, கிராபிக்ஸ் காட்சிகளை சரியான முறையில் காட்சிகளுடன் இணைத்து படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார். 1947 – 1970 காலக்கட்டங்களுக்கான உடை மற்றும் கதைக்களத்தை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்திய வண்ணங்கள் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.


ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும், பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கிறது. படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருப்பதால், அவற்றுக்கு ஏற்ப பயணித்திருக்கும் பின்னணி இசை ஆங்காங்கே அதீத சத்தத்துடன் நம் காதை பதம் பார்த்து விடுகிறது.


பல கிளைக்கதைகள், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி, பெரும் குழப்பமடைந்திருப்பது கதையை விவரிக்கும் விதத்திலேலேயே தெரிந்து விடுகிறது. அவரது குழப்பம் பார்வையாளர்களிடத்திலும் ஒட்டிக்கொள்ள, கதை சொல்வது தந்தையா ? மகனா ? என்று புரியாமல் புலம்புவதோடு, முதல் பாதி படம் முடிந்ததும், என்ன கதை ? என்று மற்றவர்களிடம் கேட்கிறார்கள். ஒரு வழியாக இரண்டாம் பாதியில் இது தான் கதை, என்று உஜ்வல் குல்கர்னி புரிய வைத்தாலும், இதற்காகவா இந்த அக்கப்போரு…!, என்று நினைக்க தோன்றுகிறது.


யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் ஆகியோரது கதையில் பல கிளைக்கதைகள் இருந்தாலும், அவற்றை தெளிவாக விவரிக்காதது, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரமாண்டத்திற்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.


இயக்குநர் கீது மோகன்தாஸ், கதை என்னவாக இருந்தாலும், ஹாலிவுட் பாணியில் அதை காட்சிப்படுத்த வேண்டும் என்ற முடிவில், தேவை இல்லாத காட்சிகளை திணித்து பார்வையாளர்களை பதம் பார்த்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை வன்முறை காட்சிகளும், பெண்கள் உடனான ஆபாசக் காட்சிகளும் அதிகம் நிறைந்திருப்பதோடு, எந்த ஒரு விசயத்தையும் சுவாரஸ்யமாக சொல்லாமல் பார்வையாளர்களை கடுப்பேற்றும் வகையில் சொல்லி படத்தை குப்பையாக்கியிருக்கிறார்.


முரட்டுத்தனம் மிக்க யாஷ், கோபப்பட்டு வெட்டுவது, சுட்டு வீழ்த்துவது என்று பயணிக்கும் போது ஒரு கட்டத்தில் படம் பார்ப்பவர்களுக்கே எங்கே நம் மீது கத்தி திரும்பி விடுமோ, என்ற பயம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு திரை முழுவதும் ஆயுதங்களும், பிணங்களும் நிறைந்து இரத்த ஆறு ஒடுகிறது.


ஸ்டைலிஷ் மற்றும் கம்பீரமான கதாநாயகன், பிரமாண்டமான காட்சியமைப்புகள், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவை பாராட்டப்பட வேண்டியவை என்றாலும், சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை மற்றும் கவனம் ஈர்க்காத கதாபாத்திர வடிவமைப்பு படத்தை, துண்டு துண்டாக வெட்டி கொன்று விட்டது.


மொத்தத்தில், ‘டாக்ஸிக்’ மக்களை பாதிக்கும் நச்சுத்தன்மை.

ஹாய் ’ (Hi) திரைப்பட விமர்சனம்

 ஹாய் ’ (Hi) திரைப்பட விமர்சனம் .


தனது பெற்றோர் போல் காதல் திருமணம் தான் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் நாயகன் கவினுக்கு காதல் கை கூடாததால், அவரது பெற்றோர் பெண் பார்க்கிறார்கள். காதலித்து தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கவின், கடிதம் மூலம் குடும்பத்தாரை மிரட்டிவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.


அம்மா முகத்தை பார்க்காத, அப்பாவின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல் வளரும் நாயகி நயன்தாரா, திருமண பந்தத்தில் சிக்கி விடாமல் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால், அவருக்கு திடீரென்று திருமண ஏற்பாடு நடக்க, அதில் விருப்பம் இல்லாமல் வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.


வீட்டை விட்டு ஓடி வந்த நயன்தாராவும், கவினும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். நட்பாக பழகுகிறார்கள். கவின், தான் எதிர்பார்க்கும் காதலி நயன்தாரா தான் என்று நினைத்து அவரை காதலிக்க தொடங்குகிறார். ஆனால், நயன்தாரா காதல், கல்யாணம் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்த, கவின் தன் காதலை சொல்லாமல் மறைத்து விடுகிறார்.


இதற்கிடையே, கவினும், நயன்தாராவும் கணவன் – மனைவியாக சில மாதங்கள் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, நயன்தாராவை தன் காதல் வலையில் வீழ்த்த முடிவு செய்யும் கவின், அதில் வெற்றி பெற்றாரா? என்பதை திகிட்டாத காதல் உணர்வோடு சொல்வதே ‘ஹை’.


கொங்கு தமிழ் பேசும் கோவை இளைஞராக நடித்திருக்கும் கவின், காதல் மீதான தன் ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் தன் நடிப்பில் மிக சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். நயன்தாரா உடனான தனது வயது வித்தியாசத்தை தன் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் மறைத்திருக்கும் கவின், பல காட்சிகளை மிக இயல்பாக கையாண்டு ரசிக்க வைத்திருப்பதோடு, காமெடி கலந்த நடிப்பின் மூலம் அவ்வபோது சிரிக்க வைக்கவும் செய்கிறார்.


கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெண் என்றாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பையும், வசன உச்சரிப்பையும் வெளிப்படுத்தியிருக்கும் நயன்தாரா, கூடுதல் பளிச்சென்று இருக்கிறார். கிராமத்து பெண் என்றாலும், மாடர்ன் உடை மூலம் அந்த அடையாளமே தெரியாத வகையில் பயணிக்கும் அவரது திரை இருப்பு மற்றும் முதிர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்தாலும், அவரது வயது முதிர்ச்சி சில காட்சிகளுடன் ஒட்டாமல் தணித்து பயணிக்கிறது.


கவினின் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகா, அப்பாவாக நடித்திருக்கும் கே.பாக்யராஜ், நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் பிரபு, சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சுஹாசினி மணிரத்னம் ஆகியோரது அனுபவம் வாய்ந்த நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.


சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி ஆகியோரது காட்சிகள் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. குறிப்பாக சத்யனின் சாதாரண மைண்ட் வாய்ஸ் கூட திரையரங்கமே அதிரும்படியாக சிரிக்க வைக்கிறது.


விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் ஆகியோரின் திரை இருப்பு சிறியது என்றாலும் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, நயன்தாராவை பளிச்சென்று காட்டியிருக்கிறார்.


ஜென் மார்ட்டின் இசையில் பாடல்கள் அனைத்தும் கொண்டாட்ட ரகமாகவும், பின்னணி இசை காதல் உணர்வுகளை கடத்தும் விதமாகவும் பயணித்திருக்கிறது.


இலகுவான கதையை, பார்வையாளர்கள் உள்ளத்தை தொடும் இதமான உணர்வுகள் போல் காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.


எழுதி இயக்கியிருக்கும் விஷ்ணு எடவன், எளிமையான காதல் கதையை, எளிமையான திரைக்கதையோடு சொன்னாலும், அமைதியான மற்றும் இதமான உணர்வை கொடுக்கும் படமாக கொடுத்திருக்கிறார்.


படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, எந்தவிதமான திருப்பங்களோ, எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பயணித்தாலும், கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் வடிவமைப்பு மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கும் வித்தையை இயக்குநர் விஷ்ணு எடவன் மிக சிறப்பாக செய்திருக்கிறார்.


கண்கள் கூசும் அளவுக்கு நயன்தாரா பிரகாசமாக இருந்தாலும், அவரது வயது முதிர்வு திரையில் தெரிவதும், கவின் உடனான காட்சிகளில் அது ஒட்டாமல் பயணிப்பதும் படத்தின் குறையாக இருந்தாலும், கவினின் முதிர்ச்சியான, அளவான மற்றும் இயல்பான நடிப்பு அந்த குறையை மறக்கடித்து, படம் பார்வையாளர்ளை கவரும்படி செய்து விடுகிறது.


மொத்தத்தில், ‘ஹை’ அனைவரையும் ரசிக்க வைக்கும்.

விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

 *“விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு*



  *200 கோடி வசூலை தாண்டிய “விஸ்வநாத் & சன்ஸ்” – சூர்யாவின் தொடரும் வெற்றிப் பயணம்*


 மீண்டும் 200 கோடி கிளப்பில் சூர்யா – “விஸ்வநாத் & சன்ஸ்” புதிய வசூல் சாதனை


சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது.


குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக வெளிவந்த “விஸ்வநாத் & சன்ஸ்”, அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் ஒவ்வொரு புரமோஷனல் அப்டேட்டும் கவனம் பெற்ற நிலையில், தற்போது ரூ.200 கோடி வசூலை கடந்துள்ள செய்தி படக்குழுவினரையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


மீண்டும் வசூல் சாதனை படைக்கும் சூர்யா!


சூர்யாவின் திரைப்பயணத்தில் தொடர்ந்து வசூல் சாதனைகள் இடம்பெற்று வருகின்றன. “கருப்பு” திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது “விஸ்வநாத் & சன்ஸ்” படமும் ரூ.200 கோடி வசூல் கிளப்பில் இணைந்திருப்பது அவரது நட்சத்திர மதிப்பையும், அவரது படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பையும் வெளிப்படுத்துகிறது. மாறுபட்ட கதாபாத்திரங்களையும், பல்வேறு வகைத் திரைப்படங்களையும் தேர்வு செய்து வரும் சூர்யாவுக்கு, இந்த வெற்றி அவரது திரையுலகப் பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான வசூல் மைல்கல்லாக அமைந்துள்ளது.


“விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தை சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.


“வாத்தி”, “லக்கி பாஸ்கர்” உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த நாக வம்சி மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணி , மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு கொண்டாட்டத்திற்கு தேவையான அம்சங்களுடன் இப்படத்தைத் தந்து அசத்தியுள்ளனர்.


இப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் ஆகியோரும் தங்களது சிறப்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.


ரூ.200 கோடியை கடந்துள்ள “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படத்தின் வசூல் பயணம் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யாவின் மற்றொரு திரைப்படம் வசூல் சாதனை படைத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்துள்ளது.



தொழில்நுட்பக் குழு


எழுத்து & இயக்கம்: வெங்கி அட்லூரி

தயாரிப்பாளர்கள்: சூர்யதேவரா நாக வம்சி & சாய் சௌஜன்யா

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

படத்தொகுப்பு: நவீன் நூலி

கலை இயக்கம்: பங்களன்

நிர்வாக தயாரிப்பாளர்: யலமஞ்சிலி கோபால கிருஷ்ணா (நானி)

சண்டை பயிற்சி: V. வெங்கட்

தயாரிப்பு நிறுவனங்கள்: சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்

வழங்குபவர்: ஸ்ரீகரா ஸ்டூடியோஸ்

ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா

 *‘ஒன்ஸ்மோர்’ – திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா! 



*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’.*


அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.


இந்நிகழ்வினில் இயக்குநர் தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது..,


“ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள்.‘அன்பே டயானா’ படத்தில் என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.


அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.


தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.


ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும்.”


நடிகை கலா பேசியதாவது..,


“‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.


அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.


இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,


“மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம், இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.

என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன். நன்றி.”


நடிகை சோனா பேசியதாவது..,


“இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.உங்கள் அனைவரையும் போலவே நானும் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.”


தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது..,


“இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.


இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.


அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்.


இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள். வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளியுங்கள். அனைவருக்கும் நன்றி!”


இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது..,


“இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.

இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.


இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.


இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி.


இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி!”


நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது..,


“முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.


நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.


இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்.இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன்.!”


நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது..,


“விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார்.

ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார்.


என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.


அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்றுகொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம். ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் இப்படம், அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.


 இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.”

இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.

அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.

பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும்.‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி!”பான் இந்திய அளவில் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்த ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.


அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்திற்கு ராஜ்கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம்

 இருமுடி கட்டு’ திரைப்பட விமர்சனம் 


விவசாயியான நாயகன் ரவி தேஜா – பிரியா பவானி சங்கர் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த ரவி தேஜா, ஐயப்பன் சாமிக்கு மாலை போட்டு வேண்டிய பிறகு பிறந்த குழந்தை என்பதால், தன் மகள் மீது கொண்டிருக்கும் அளவுக்கு அதிகமான அன்பு போல், ஐயப்பன் மீதும் அளவுக்கு அதிகமான பக்தி கொண்டிருக்கிறார். அதே சமயம், அதீத மது பிரியரான ரவி தேஜா, ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போட்டு கடுமையாக விரதம் இருக்கிறார்.


இந்த நிலையில், ரவி தேஜா மகள் படிக்கும் பள்ளியை சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் இறக்கிறார். அவரை தொடர்ந்து மற்றொரு மாணவி திடீரென்று படிப்பை பாதியில் விட்டுவிட்டு தலைமறைவாகிறார். ஆசிரியை சுவாசிகா சிறப்பு வகுப்பு என்ற பெயரில் குறிப்பிட்ட சில மாணவிகளை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். இப்படி மாணவிகளை சுற்றி நிகழும் மர்ம சம்பவங்களுக்கான பின்னணி பற்றி ரவி தேஜாவின் மகளுக்கு தெரிய வருகிறது. அதை தன் தந்தையிடம் சொல்லி அவர்களை காப்பாற்ற நினைக்கிறார். ஆனால், அதற்கு ரவி தேஜாவின் மது பழக்கமும், ஐயப்பனுக்கு மாலை போட்டதும், தடையாக அமைகிறது. அந்த தடை நீங்கி, மகள் சொல்ல நினைத்தது தந்தை ரவி தேஜாவுக்கு தெரிந்ததா ?, மாணவிகளை காப்பாற்றினாரா ? என்பதை உணர்ச்சிகரமாகவும், மாஸாகவும் சொல்வது தான் ‘இருமுடி கட்டு’.


மாஸ் மகாராஜா என்ற பட்டப் பெயருடன் வலம் வரும் ரவி தேஜா, இதில் தனது மாஸை குறைத்துக் கொண்டு கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மகள் மீதான பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் கிளாஸாக நடித்திருக்கும் ரவி தேஜா, பெண் பிள்ளைகள் அனைவரையும் தன் மகள்களாக பார்ப்பது தனது மோசமான பலவீனம், என்று கூறி அவர்களது பிரச்சனையை தீர்க்கும் காட்சிகளில் மாஸ் காட்டியிருக்கிறார்.


ரவி தேஜாவின் மனைவியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், மகளாக நடித்திருக்கும் சிறுமி நக்‌ஷத்ரா இருவரும் தங்களது நடிப்பின் மூலம் பார்வையாளர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்கள். குறிப்பாக சிறுமி நக்‌ஷத்ரா தனது பார்வையின் மூலமாகவே பலவித உணர்வுகளை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார்.


சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, சுவாசிகா, மீசாலா லக்‌ஷ்மண், ராஜ்குமார் காசிரெட்டி, கிஷோர் கசிரப்பளம், கார்த்திக் அடுசுமல்லி, மகேஷ் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.


ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மா, கிரைம் திரில்லர், அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாஸ் என மூன்று விதமான பரிணாமங்களை தனது கேமரா மூலம் பார்வையாளர்களிடம் கச்சிதமாக கடத்தியிருக்கிறார்.


ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் டப்பிங் படம் போல் அல்லாமல் ஒரிஜினல் படம் போல் அமைந்திருக்கிறது. பின்னணி இசை மகள் மீது அப்பாவுக்கு இருக்கும் அன்பையும், அது தொடர்பான காட்சிகளையும் கண் கலங்க வைக்கும் விதத்தில் பார்வையாளர்கள் மனதில் பதிய வைக்கிறது.


அமைதியான குடும்ப நாடகம், திரில்லர், மாஸ், கமர்ஷியல் மற்றும் சமூகத்திற்கான அறிவுரை என திரைக்கதையில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் வகையில் படத்தொகுப்பாளர் பிரவீன் பவுடி, காட்சிகளை தொகுத்திருக்கிறார்.


எழுதி இயக்கியிருக்கும் சிவா நிர்வாணா, எளிமையான ஒரு கதையை மிக வலிமையாக சொல்லும் வித்தையை மிக சிறப்பாக செய்திருக்கிறார். மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு அவரது ரசிகர்களை திருப்திப்படுத்துவதோடு, கதையின் போக்கை மாற்றாமல் அதே சமயம் கதை சொல்ல வரும் விசயத்தை பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார்.


கதையின் துவக்கத்தில் இருந்தே பயணிக்கும் அப்பா – மகள் செண்டிமெண்ட் மற்றும் மாணவிகளின் பிரச்சனைகள் திரைக்கதையை சுவாரஸ்யமாகவும், அடுத்தது என்ன நடக்கும் ? என்ற எதிர்பார்ப்போடும் நகர்த்திச் செல்கிறது. இரண்டாம் பாதியில் வரும் எதிர்பார்க்காத திருப்பம் பார்வையாளர்களின் இதயங்களை கனக்கச் செய்து, படத்தின் இறுதி வரை சீட் நுணியில் உட்கார வைத்து விடுகிறது.


மொத்தத்தில், ‘இருமுடி கட்டு’ வெற்றிக்கொடி கட்டுவது உறுதி.