Amigo Garage Movie Review:
பிரசாந்த் நாகராஜன் எழுதி இயக்கி உள்ள அமிகோ கேரேஜ் படம் தற்போது திரையரங்கில் வெளியாகி உள்ளது. மாஸ்டர் மஹேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பீப்பிள் புடக்சன் ஹவுஸ்’ முரளி ஶ்ரீனிவாசன், என்.வி. கிரியேசன்ஸ் நாகராஜன் இணைந்து தயாரிக்க அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் உருவாக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’.
படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் இளைஞன் ருத்ராவுக்கு, தவறான பழக்கம் & நண்பர்களால் எப்படி வாழ்க்கை திசை மாறுகிறது என்பதே கதை.
நாயகன் ருத்ரனாக நடித்து உள்ளார் மாஸ்டர் மகேந்திரன். வீட்டுக்கு அடங்காத மகனாக, சந்தர்ப்ப சூழலால் கேங்கஸ்டராக மாறும் இளைஞனாக நடித்து உள்ளார்.நாயகனின் அடிதடி குருவா நடித்து உள்ளர் ஜி.எம்.சுந்தர். இயல்பான டயலாக் டெலிவரி – நடிப்பால் கவர்கிறார். அதுவும் சிறு வயதில் தான் காதலித்த கதையைச் சொல்லும்போது ரசிக்க வைக்கிறார்.
நாயகி தமிழ் கதாபாத்திரத்தில் ஆதிரா நடித்து உள்ளார். காதல் காட்சியிலும், காதலனின் ரவுடித்தனம் பிடிக்காமல் குமுறும் காட்சியிலும் ஈர்க்கிறார். சிறுவயதிலிருந்தே அவரது ஏரியாவில் இருக்கும் அமிகோ கேரேஜ் என்ற கார் செட்டில் உள்ளவர்களுடன் பழக நினைக்கிறார். ஒரு எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அதே கேரேஜ்க்குள் செல்ல மஹேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதற்கு ஓனராக இருக்கும் ஜிஎம் சுந்தருடன் நல்ல உறவு ஏற்படுகிறது. ஸ்கூலில் தொடங்கி கல்லூரி முடியும் வரை தினசரி அங்கு சென்று பேசி அரட்டை அடித்து அனைத்தையும் கற்றுக் கொள்கிறார் ஹீரோ மகேந்திரன். ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியில் பெரிய ரவுடியாக இருக்கும் நபருக்கும் ஹீரோவுக்கும் பாரில் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த பிரச்சனை மகேந்திரனின் வாழ்க்கையை எப்படி திசை மாற்றுகிறது என்பதே அமிகோ கேரேஜ் படத்தின் கதை. பெரிதாக பில்டப் இல்லாத ஒரு நடுத்தர வீட்டு பையனாக மஹேந்திரன் நடித்துள்ளார். ஆனால் இன்னும் பள்ளி மாணவராக நடிப்பை மட்டும் தவிர்க்கலாம். ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் கோபக்கார இளைஞனான நடித்துள்ளார். சண்டை காட்சிகளிலும், எமோஷனல் காட்சிகளியும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். ஹீரோயின் அதிரா ராஜ் ஒரு சோகமான கடந்த காலத்துடன் மஹேந்திரன் பணிபுரியும் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். ருத்ரா சிறைக்குச் செல்லும்போது, யாருடைய உதவியும் இல்லாமல் தனித்து நின்று அவனை வெளியேற்றுகிறாள். கதையில் இந்த கதாபாத்திரத்திற்கு பெரிய முக்கியத்துவம் இல்லை என்றாலும் படம் முழுக்க வரும் படி அமைத்துள்ளனர்.
இவர்களுக்கு அடுத்தபடியாக முக்கிய கதாபாத்திரத்தில் ஜிஎம் சுந்தர் நடித்துள்ளார். படத்தில் நன்றாக எழுதப்பட்டு இருந்த கதாபாத்திரங்களில் இவரும் ஒருவர். ஆரம்பம் முதல் இறுதி வரை அதனை சரியாக பயன்படுத்தி நடித்துள்ளார். இப்படி ஒரு கேங்ஸ்டர் கதையில் ஹீரோவை முன்னிலை படுத்தி அவர் செய்வது எல்லாம் சரி என்று கதையை கொண்டு போகாமல் இருந்த இயக்குனர் பிரசாந்த் நாகராஜனுக்கு தனி பாராட்டுக்கள். மிக சாதாரண வாழ்க்கையிலிருந்து ஒரு கேங்ஸ்டராக மாறும் இளைஞர் செய்யும் தவறுகளை சுட்டி காட்டுகிறார். மேலும் ஒருவர் செய்யும் தவறுக்கு முதல் காரணமாக அமைவது போதை தான் என்பதை எடுத்து கூறி உள்ளார். படத்தின் பாடல்கள் மற்றும் இசை படத்திற்கு பலம் சேர்க்கவில்லை என்றாலும், உறுத்தலாக இல்லை. மேலும் வில்லன் கதாபாத்திரதத்தில் நடித்து இருந்தவர்களும் நல்ல ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். படத்தின் ரன் டைம் கூடுதல் பலம். தேவையில்லாத காட்சிகளை அவர்களே வெட்டி தூக்கி உள்ளனர். இருந்தாலும் சில இடங்களில் படம் மெதுவாக நகர்கிறது. காரணம் திரைக்கதையில் உள்ள சொதப்பல்கள் தான். அதை சரி செய்து இருந்தால் தமிழ் சினிமாவில் வந்த குறிப்பிடத்தக்க நல்ல படமாக அமைந்து இருக்கும்.
விஜயகுமார் சோலை முத்துவின் ஒளிப்பதிவு, பாலமுரளி பாலுவின் இசை ஆகியவை படத்துக்கு பலம்.ரூபன் – சி.எஸ். மகேந்திரன் ஆகியோரின் எடிட்டிங் இன்னும் கொஞ்சம் கச்சிதமாக இருந்திருக்கலாம்.
ஸ்ரீமான் பாலாஜினியின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது. குறிப்பாக அந்த அமிகோ கேரேஜ் செட். அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜன், முதல் படத்திலேயே அதிரடியான கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதை ரசிக்கும்படியும் சொல்லி இருக்கிறார்.
