DOUBLE TUCKERR அனிமேஷனில் கலக்கியதா டபுள் டக்கர் திரைப்படம்? படம்
: டபுள் டக்கர் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்கால விடுமுறையை மனதில் கொண்டு ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை டார்கெட்டாகக் கொண்டு படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வரிசையில் டபுள் டக்கர் திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆர்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மீரா மஹதி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ் பாஸ்கர், காளி வெங்கட், முனீஸ்காந்த், மன்சூர் அலிகான், ஷா ரா, சுனில் ரெட்டி, கருணாகரன் என ஏகப்பட்ட திரைப் பிரலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வித்யா சாகர் இசையமைத்துள்ளார்.
படத்தின் கதை
ஒருவர் பிறந்ததில் இருந்து இறக்கும் வரை செய்யும் தவறுகள், நன்மைகளை லெஃப்ட் மற்றும் ரைட் என்ற இரண்டு பேர் கணக்கெடுத்து அதனை கடவுளிடத்தில் சமர்பிப்பார்கள். அதே நேரத்தில் அவர் இறக்கும்போது அவரை பூமியில் இருந்து கடவுளிடம் அழைத்துச் செல்பவர்களும் இவர்கள்தான். இப்படியான நிலை கதாநாயகன் தீரஜை லெஃப்ட் மற்றும் ரைட் தவறுதலாக கொலை செய்து விட, அதனால் ஏற்படும் பிரச்னைகள், குழப்பங்களுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டது என்பதுதான் படத்தின் ஒன்லைனாக உள்ளது.
படத்தின் பலம்
படம் தொடங்கியதில் இருந்தே நகைச்சுவையாக நகர்கின்றது. குறிப்பாக லெஃப்ட் மற்றும் ரைட் கதாப்பாத்திரங்களில் இடையிடையில் சினிமா கதாப்பாத்திரங்களாக மாறி தங்களது எண்ணத்தினை வெளிப்படுத்திய காட்சிகளில் எல்லாம் கைத்தட்டல்கள்தான். இந்தக் காட்சிகளுக்கு, சிம்பயாசிஸ் டெக்னாலஜிஸின் அனிமேஷன் பலம் சேர்க்கின்றது. சினிமா கதாப்பாத்திரங்களைக் கடந்து நன்கு பிரபலமான ஒரு கதாபாத்திரம் அந்த அனிமேஷனில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கதாபாத்திரத்திற்கு தியேட்டரில் தனி வரவேற்பே இருந்தது. துள்ளலான கதைக்களத்திற்கு வித்யாசாகரின் இசை பலமாகவே அமைந்துள்ளது. லெஃப்ட் மற்றும் ரைட் என்ற அனிமேஷன் கதாப்பாத்திரங்களுக்கு தங்களது குரலினால் உயிர் கொடுத்துள்ளனர் காளி வெங்கட்டும் முனிஷ்காந்தும். இவர்களைக் கடந்து சுனில் ரெட்டியும் ஷா ராவுக்குமான காமெடி காட்சிகள் ஓ.கே தான்.
கவனம் செலுத்தி இருக்கலாம்..
படத்தின் முதல் பாதியில் தீவிரமாக இருக்கும் நகைச்சுவை, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே காமெடியை தெளித்துள்ளனர். அனிமேஷன் கதாபாத்திரத்தை தவிர மற்றவர்களின் காமெடி கொஞ்சம் ஒர்க் அவுட் ஆகவில்லை. திரைக்கதையில் ட்விஸ்ட்கள் இருந்தாலும், அந்த ட்விஸ்ட்டுகள் கதையோட்டத்தில் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. பல கதாப்பத்திரங்கள் மனதில் நிற்கும் அளவிற்கு காட்சிப்படுத்தப்படவில்லை. நடிகர்களிடம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வேலை வாங்கி இருக்கலாம். படத்தின் நாயகனான தீரஜின் மேக்கப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அதிசயப் பிறவி படத்தின் அப்டேட் வெர்ஷனா என்ற கேள்வியையும் மனதில் எழுப்பாமல் இல்லை.
மொத்தத்தில் மீரா மஹதியின் டபுள் டக்கர் குழந்தைகளை குஷியாக்கும்!
நடிப்பு: தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம் எஸ் பாஸ்கர், முனிஷ்காந்த், காளி வெங்கட்,. மன்சூர் அலிகான், சுனில் ரெட்டி, சாரா, கருணாகரன், யாஷிகா ஆனந்த் , ஜார்ஜ் விஜய் , டெடி கோகுல்
தயாரிப்பு: ஏர் ப்ளிக்ஸ்
இசை: வித்யாசாகர்
ஒளிப்பதிவு: கௌதம் ராஜேந்திரன்
இயக்கம்: மீரா மகதி
பி ஆர் ஓ: நிகில் முருகன்
விபத்தில் பெற்றோரை இழக்கும் அரவிந்த் ( தீரஜ்) முகத்தில் தீக்காயம் ஏற்படுகிறது பெரிய பணக்காரனாக இருந்தும் அவனிடம் யாரும் பழக மறுக்கி றார்கள். இளம் பெண் பாரு (ஸ்மிருதி) மட்டும் அவனுடன் பழகுகிறாள். இவர்கள் நட்பு காதல் ஆகிறது. இந்நிலையில் வானத்து தேவதைகள் அரவிந்த் உயிரை பறிக்கிறார்கள். பின்னர் தான் அவர் 85 வயது வரை வாழக்கூடிய தகுதி வாய்ந்தவர் தவறுதலாக அவரது உயிரை பறித்த விஷயம் தேவதைகளுக்கு தெரிய வருகிறது. தன் உடலுக்கு உயிர் தரும் வரை உங்களை விட மாட்டேன் என்று தேவதைகளை மடக்கி வைத்துக் கொள்கிறார் அரவிந்த். இந்நிலையில் அவரது வாழ்வில் பல்வேறு திருப்பங்கள் நடக்கின்றன. இறுதியில் அரவிந்த் உயிர் திரும்பியதா, தேவதைகள் கதி என்னவானது என்ற பல்வேறு கேள்விகளுக்கு பல டிவிஸ்ட் களுடன் படம் பதில் அளிக்கிறது.
லாஜிக் பார்க்காமல் மேஜிக்கான திரைக்கதையை கொண்டு டபுள் டக்கர் படம் உருவாகி இருக்கிறது. இது ஏன் இப்படி நடந்தது, அது ஏன் அப்படி நடக்கிறது என்ற கேள்வி யெல்லாம் கேட்காமல் இருந்தால் இப்படத்தை ஒரு குழந்தை போல் கைதட்டி ரசித்து பார்க்கலாம்.
படம் தொடங்கி சில காட்சிகள் சென்ற உடனேயே ஹீரோ தீரஜ் இறந்து விடுவதால், என்ன கதையை இப்படி தொடங்கி விட்டார்கள் என்று யோசிக்க வைத்து அடுத்த சில நிமிடங்களி லேயே லெப்ட், ரைட் என்ற இரண்டு அனிமேஷன் கதாபாத் திரங்களை கடவுளின் தேவதைகளாக அறிமுகம் செய்து அவர்கள் அடிக்கும் லூட்டிகள் எதிர்பார்க்காத சுவாரசியத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்த சுவாரசியம் படத்தின் கிளைமாக்ஸ் வரை தொடர்கிறது, இன்னும் சொல்லப்போனால் கிளைமா விற்கு பிறகும் தொடர்கிறது.
தீரஜ் புத்திசாலித்தனமாக ஒரு கதாபாத்திரத்தை அதுவும் குழந்தைகளுக்கு பிடிக்கும் கதாபாத்திரமாக ஏற்றுக் கொண்டு ரசிக்கும்படி செய்திருக்கிறார். திடீரென்று ராஜா கதாபாத்திரத் தில் தீரஜ் வந்ததும் இவர் எப்படி வந்தார் என்ற சந்தேகம் ஒரு பக்கம் திரைக்கதையை முடுக்கி விடுகிறது. இந்த சஸ்பென்ஸ் எல்லாம் இங்கே உடைத்து விட்டால் படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் இருக்காது அதனால் குழந்தை களோடு சென்று இப்படத்தை பார்த்து சிரித்து என்ஜாய் செய்யுங்கள்.
இன்ப அதிர்ச்சியாக வந்து ஒரு பாடலுக்கு கிக்காக நடனமாடி விருந்து படைக்கிறார் யாஷிகா ஆனந்த்.
முனிஸ் காந்த், காளி வெங்கட் இருவரும் லெஃப்ட் ரைட் கதாபாத்திரத்தில் கலகலக்க வைக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் ஆக வரும் கோவை சரளா, கதாநாயகியின் தந்தையாக வரும் மன்சூர் அலிகான் அவரது கூட்டாளிகள் எல்லோருமே ஒட்டுமொத்தமாக சேர்ந்து சிரிக்க வைத்தே தீர்வோம் என்று தங்கள் பங்குக்கு காமெடி வெடிகளை வெடிக்கிறார்கள்.
கதாநாயகி ஸ்மிருதி வெங்கட் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை.
ஏர் பிளிக்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது.குழந்தைகளை கவர்ந்தால் அவர்களுடன் பெற்றோர்களையும் தியேட்டருக்கு அழைத்து வந்த விட முடியும் என்ற ஃபார்முலாவை மனதில் வைத்து படத்தின் திரைக் கதையை அமைத்து அதை வெற்றி கரமாகவும் செய்திருக்கிறார் இயக்குனர் மீரா மகதி.
கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு கை கொடுத்திருக்கிறது. வி எஃப் எக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் பெரும் பங்கு வகிக்கிறது
வித்யாசாகர் இசை நீண்ட இடைவெளிக்கு பிறகு காதில் ரீங்காரமிடுக்கிறது
டபுள் டக்கர் – குழந்தைகளுக்கு கோடையில் கிடைத்த டபுள் சிக்சர்.
