அமீரின் உயிர் தமிழுக்கு படம் எப்படியிருக்கு? இதோ விமர்சனம்! Uyir Thamizhukku Movie Review Tamil :
அமீர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம், உயிர் தமிழுக்கு. இந்த படத்தில், அமீருக்கு ஜோடியாக சாந்தினி ஸ்ரீதரன் நடித்திருக்கிறார். இப்படம் எப்பியிருக்கிறது? விமர்சனத்தை இங்கு பார்க்கலாம். Uyir Thamizhukku Movie Review Tamil : இயக்குநரும் நடிகருமான அமீர், தற்போது ஹீரோவாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து மறைந்த நடிகர் மாரிமுத்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம், அரசியல்-காமெடி படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்திற்கு அனைவரும் மாறி மாறி பெரிய வகையில் ப்ரமோஷன் செய்ததை தொடர்ந்து, இதன் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. படம் எப்படியிருக்கு? இங்கு பார்ப்போம். கதையின் கரு: கேபிள் டிவி தொழில் செய்து வரும் பாண்டியனுக்கு, அரசியல் வாரிசான தமிழ் செல்வி மீது காதல். அவரை பார்ப்பதற்காகவே தேர்தலில் நிற்கிறார். அவருடன் காதல் வயம் கொண்டிருக்கும் அதே நேரத்தில், மக்கள் செல்வாக்கையும் பெறுகிறார். தமிழ் செல்வியும் ஒரு கட்டத்தில் இவரை காதலிக்க, இது அவருடைய அப்பாவிற்கு பிடிக்காமல் பாேகிறது. அவரை யாரோ கொலை செய்ய, அந்த கொலைப்பழி பாண்டியன் மீது விழுகிறது. இதனால் தமிழ் செல்வியும் அவரை வெறுக்க ஆரம்பிக்கிறார். தன் காதலிக்கு தான் குற்றவாளி இல்லை என்று நிரூபிப்பதற்காகவும் தனது காதலை நிரூபிப்தற்காகவும் மீண்டும் தேர்தலில் நிற்கிறார். அந்த கொலையை செய்தது யார்? பாண்டியன் தேர்தலில் வெற்றி பெற்றாரா? இதற்கு பதிலாக வருகிறது படத்தின் கதை. ஆங்காங்கே உபயோகப்படுத்த பட்டிருக்கும் தமிழக அரசியல் களத்தை வைத்து இதில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, சமாதியின் மீது சத்தியம் செய்யும் காட்சி, சமாதியில் அமர்ந்து தியானம் செய்யும் காட்சி என அனைத்தும் அரசியல் கலாட்டாக்களை எடுத்து காண்பிக்கிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்னு சொல்லுவாங்க. அப்படித்தான் இயக்குனர் அமீரின் நடிப்பு. வடசென்னை படத்தில் ராஜன் கேரக்டரில் அவர் நடித்ததன் மூலமே எப்பேர்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அவருடைய நடிப்பில் உயிர் தமிழுக்கு படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
கதர் சட்டை, கதர் வேட்டியில் அமீர், படம் பெயர் உயிர் தமிழுக்கு என்ற உடன் தமிழை பற்றி பேசி கொலையா கொல்லப் போறாங்கன்னு நெனச்ச எல்லோருடைய எண்ணமும் போயிடுச்சு. படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தினியின் பெயர் தமிழ்ச்செல்வி.
அப்போ உயிர் தமிழுக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று புரிகிறதா. அரசியல் ஆட்டத்தில் நிறைய காதல் கதைகளை பார்த்திருப்போம்.. ஆனால் இந்த படம் காதலுக்காக செய்யப்பட்ட அரசியல். இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தளபதி முதல் கமல் வரை வெச்சு செஞ்ச அமீர்
கேபிள் ஆபரேட்டராக இருக்கும் பாண்டியன் தன்னுடைய காதலிக்காக அரசியல்வாதியாக ஆவது தான் கதை. காதலிக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என கலக்குகிறார் அமீர். படத்தின் பெரிய பிளஸ் இந்த காலத்து அரசியலை வச்சு செய்வதுதான்.
சமாதி முன் தியானம், ஓட்டு மிஷினை நம்பிய அரசியல் செய்வது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது என எல்லா கான்செப்ட்டையும் உள்ளே கொண்டு வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம் பாவா.
சாந்தினியின் அப்பா இறந்து போக அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது. அதிலிருந்து அவர் தப்பித்து எப்படி வெளியே வருகிறார், சாந்தினி உடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி அரசியல் நையாண்டியை மையப்படுத்தி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.
இரண்டாவது பாதி கொஞ்சம் டல்லடித்தாலும் சினிமாவில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லி ஒரு தடவை படத்தை பார்த்து கவலை மறந்து சிரித்து விட்டு வரலாம். அமீருக்குள் இருக்கும் யதார்த்த நடிகன் திரையில் மக்களை சிலிர்க்க வைத்திருக்கிறார்.MOVIE : UYIR THAMIZHUKKU
HERO : AMEER as PANDIAN
HEROINE: CHANDINI SREEDHARAN as TAMIL
CAST:
IMMAN ANNACHI as SUDALAI
ANANDRAJ as PAZHAKADAYAAR
RAJ KAPOOR as THALAIVAR ( THIRUCHELVAM )
SARAVANA SAKTHI as SETHU
MAARI MUTHTU as T.N.S
KANJA KARUPPU as PARAMAN
DIRECTOR: ADHAM BAVA
MUSIC : VIDYASAGAR
DOP : DEVARAJ
EDITOR: ASHOK
