-

Loading latest news...

இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?

 இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?

Indian 2 First Review Is Out: கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகயுள்ளது. தற்போது எக்ஸ்க்ளுசிவாக படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. Indian 2 First Review Is Out: கமல்ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வருகிற ஜூலை 12 ஆம் தேதி வெளியாகயுள்ளது. தற்போது எக்ஸ்க்ளுசிவாக படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்த விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியன் 2 (Indian 2 Movie Update) படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் அடுத்த பாகம் தான் 28 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு அசம்பாவிதங்களாலும், சர்ச்சைகளாலும் சூட்டிங் நீண்டு கொண்டே போனது. இந்த நிலையில் தான், ஒரு வழியாக படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிந்து தற்போது ஜூலை 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது இந்தியன் 2. இந்தியன் 2: 

இந்த படத்திலும் கமல்ஹாசன் (Kamal Haasan) சேனாபதி எனும் தாத்தா கமல் பாத்திரத்திலேயே நடிக்கிறார். இதில் நடித்து வந்த நடிகர்கள் விவேக், மயில்சாமி, மனோபாலா, நெடுமுடி வேணு விட்ட போல படப்பிடிப்பின் பாதியிலேயே உயிரிழந்து விட்டனர். இதனாலும் பட வேலைகளில் தாமதம் ஏற்பட்டது. இதனுடன் இந்த படத்தில் சித்தார்த் (Siddharth), பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் (Rakul Preet Singh), காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, ஜெகன் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில நாட்களுக்கு முன்பு இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல் பாகத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். ஆனால் அதன் இரண்டாம் பாகத்திற்கு அனிருத் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்தியன் 2 படத்தில் இருந்து மொத்தம் ஆறு பாடல்கள் உள்ளன. இந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் பெற்று வருகிறது.இந்தியன் 2 முதல் விமர்சனம்:

இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தை (Indian 2 Movie First Review) பார்த்துவிட்டு சென்சார் போர்டு நபர்கள் கமல் ஹாசனிடம் தங்களது கருதுவக்களை தெரிவிக்கும் பொழுது படம் நன்றாக இருகிறது என்று கூறினார்களாம். இந்த தகவலை ப்ரீ மீட்டில் நடிகர் கமல்ஹாசன் வெளிப்படையாக கூறியிருந்தார். மேலும் சென்சார் போர்டை சேர்ந்தவர்கள் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது மிகவும் அரிது என்றும் அவர் கூறியுள்ளார்.

ரிலீஸ் எப்போது?
இந்தியன் 2 (Indian 2 Release Date) திரைப்படம், அடுத்த மாதம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது.  12 கெட்டப்பில் கமல்ஹாசன்:

இதனிடையே இந்த படத்தில் கமல்ஹாசன் மொத்தமாக 12 கெட்டப்களில் நடித்துள்ளாராம். அதில் இந்தியன் 2 படத்தில் 7 கெட்டப்களிலும், மூன்றாம் பாகத்தில் 5 கெட்டப்பிலும் தோற்றம் அளிக்கவுள்ளார். இதன் மூலம் தசாவதாரம் படத்தில் பத்து கெட்டப்களில் நடித்த சாதனையை முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.