-

Loading latest news...

indian 2 movie review

 indian 2 movie review 


இந்தியன் படத்தில் தமிழகத்தில் நடக்கும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தேடிச்சென்று பழி வாங்கிய சேனாதிபதி தற்போது பார்ட் 2வில் இந்திய அளவில் சொத்துக்களை குவித்து வைக்கும் தொழில் அதிபர்களை இந்திய அளவில் ஊழலை ஒழிக்க புறப்பட்ட இந்தியனின்கதை தான்

இந்தியன் பார்ட் 2. இப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் வாங்க

சித்தார்த் மற்றும் அவரது நண்பர்கள் பிரியா பவானி ஷங்கர், ஜெகன் உடன் இணைந்து சமுதாயத்தில் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க வேண்டும் என போராடுகிறார்.

Youtube சேனல் மூலம் இதை நகைச்சுவையுடன் சேர்த்து செய்து வரும் சித்தார்த் ஒரு கட்டத்தில் நம்மால் எதுவுமே செய்ய முடியாது, இதற்கு இந்தியன் தாத்தா தான் வரவேண்டும் என முடிவு செய்து இந்தியனை தேடும் பயணத்தில் இறங்குகின்றனர்.

#comebackindian என்கிற டேக்கை வைரலாக்கி இங்கு நடக்கும் லஞ்சம் ஊழல் போன்ற விஷயங்களை இந்தியன் சேனாதிபதிக்கு தெரிவிக்கின்றனர். உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இந்தியனுக்கு இது தெரியவரும் என தொடர்ந்து முயற்சி செய்ய, தைவானில் இருக்கும் சேனாபதி மீண்டும் இந்தியா செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார்.

இந்தியாவிற்கு 28 ஆண்டுகள் கழித்து வரும் வீரசேகரன் சேனாபதியை பிடிக்க வேண்டும் என போலீஸ் ஒரு புறம் இருக்க, லஞ்சம் ஊழல் செய்பவர்களை விட்டு வைக்க கூடாது என இந்திய வரும் சேனாதிபதி என்னென்ன இன்னல்களை சந்தித்தார்? இதன்பின் நடக்கப்போவது என்ன? என்பதே படத்தின் மீதி கதை

.
அதோடு தமிழகத்தில் நடக்கும் அத்தனை அரசுத்துறை அதிகாரிகளையும் வெழுத்து வாங்கி இருக்கிறார் இயக்குனர் சங்கர் இந்த தைரியம் எந்த இயக்குனருக்கும் வராது.

மறைந்த நடிகர் விவேக், இன்னும் இருந்திருக்கலாம் என எண்ண வைக்கும் அளவிற்கு தனக்கே உண்டான பஞ்ச் நகைச்சுவை வசனங்களைப் பேசி சிரிக்க வைக்கிறார். தமிழ் சினிமாவிற்கு இழப்புதான்.

இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசை, வேகமான திரைக்கதைக்கு தொந்தரவு செய்யாமல் இருக்கிறது

சங்கரின் திரைக்கதை ரசிக்க வைக்கிறது பிரமாண்டமான கட்சிகள் நேசிக்க வைக்கிறது சித்தார்த்தின் அம்மா இறக்கும் தருவாயில் நடக்கும் அந்த எபிசோடு நன்றாக இருக்கிறது இயக்குனர் சங்கரின் கடுமையான உழைப்பு படத்தில் நன்றாக தெரிகிறது
ஷங்கர் என்றால் பிரமாண்டம் என்பதை மீண்டும் ஞாபக படுத்துகிறார்

ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவின் கடுமையாக உழைத்திருக்கிறார்
அந்த ஸேஸிங காட்சி மரண பயம்

லைக்கா நிறுவனம் ஒரு வெற்றி படத்துக்கு தேவையான கதையை தேர்வு செய்து படமாக்கி இருக்கிறார்கள் முத்துராஜ்
கலை இயக்கம் படத்திற்கு மிகப்பெரிய பலம்.அந்த தங்க மாளிகை அற்புதமான ஒர்க்

கமல் ஹாசன் நடிப்பு
ஒப்பனை சிறப்பு
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு அருமையாக இருக்கிறது
, Prosthetic makeup, VFX என அனைத்து டெக்னிகல் விஷயங்கள் பிரமிக்கத்தக்க வகை யில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர்

கமல் ஹாசன் – பாபி சிம்ஹா சேசிங் காட்சி
செம பரபரப்பாக போகிறது அந்த ஒற்றை வண்டியில் கமல் பறந்து பறந்து தப்பிப்பது விறு விறு ப்பு

கமல் சேனாபதியாக அதே ஸ்டைல், ஆக்‌ஷனுக்கான உடல்வாகு போன்றவற்றில் கலக்கியிருக்கிறார் கமல்ஹாசன். தன் குரலாலும் படத்திற்கு வலுசேர்த்திருக்கிது சிகை அலங்காரம், பிராஸ்தடிக்ஸ் என செம ரிஸ்க்
நாட்டின் மீது அவருக்கு இருக்கும் பாசம் சுதந்திரம் வீணாகப் போகிறது என்று அவர் காட்டும் கரிசனம் இனி வயதானவர்களை நம்பி பிரயோஜனம் இல்லை 40 வயதுக்கு கீழே உள்ள இளைஞர்கள்தான் தன் வீட்டுக்குள்ளே இருக்கும் கலையை பிடுங்கி எறிய வேண்டும் என்று அவர் பேசும் வசனம் அதற்காக சித்தார்த் குழுவினர் எடுக்கும் முயற்சி பாராட்டுவது பிறகு சித்தார்த் அவரைப் பார்த்து கோபேக் என்று கத்துவது கண்கலங்கும் கமலை பார்க்கும்போது நமக்கே பரிதாபப்பட வைக்கிறது குஜராத். கல்கத்தா, ஹைதராபாத், என்று தேடிச் சென்று வில்லன்களை முதலில் தண்டனை கொடுத்துவிட்டு அதற்கான விளக்கம் தரும் அந்த காட்சி புதுமையாக இருக்கிறது கமல் தி கிரேட் அவரைப் போல அர்ப்பணிப்புள்ள ஒரு நடிகரை இனி காண முடியாது

துடிப்பான இளைஞனாகக் கவர்வதோடு, எமோஷனலான காட்சிகளிலும் தேவையான நடிப்பைத் தந்து, அக்கதாபாத்திரத்தை முழுமைப்படுத்தியிருக்கிறார் சித்தார்த்.
ரகுல் ப்ரீத்தி சிங்குடன் அதிக காதல் காட்சி இல்லை என்றாலும் சமுதாயத்தின் நோக்கம் கருதி இருவரும் பழகுவது வித்தியாசமாக இருக்கிறது

ஜெகன், பிரியா பவானி சங்கர், ரிஷி காந்த் ஆகியோர் தங்களுக்குக் கொடுத்த குறைந்தபட்ச வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
ஆனால் இதெல்லாம் நடக்குமா பெற்ற தாய் தந்தையரை இப்படி பழி வாங்குவார்களா யாரோ ஒரு இந்தியன் சொல்லிவிட்டார் என்பதற்காக என்று அந்த இடத்தில் யோசிக்கவும் செய்கிறோம்

சமுத்திரக்கனி,
நேர்மையான அதிகாரியாக வரும்பொழுது அவரிடம் இருக்கும் கம்பீரம் அவர் மீதும் ஊழல் படியும் போது அவர் கதாபாத்திரம் வெறுக்க வைக்கிறது

நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், ரேணுகா, மனோபாலா ஆகியோர் ஸ்கோர் செய்து உள்ளார்கள் சி.பி.ஐ அதிகாரிகளாக பாபி சிம்ஹா மற்றும் விவேக்
இருவரும் கதை ஓட்டத்துக்கு மிகவும் உதவுகிறார்கள் பாபி சிம்ஹா துடிப்பான சிபி ஐ ஆபீஸராக ஆகமிரட்டுகிறார்

வில்லன்களாக குல்ஷானும் ஜாகிர் ஹுசைனும் வில்லத்தனத்தில் மிரட்டல்
தங்க மாளிகையில் வசித்த அந்த வில்லன் குதிரை போல ஓடிக் கொண்டு குஜராத் வீதியில் பலரின் கேளிக்க ஆளாகி பாலத்தின் மேலே இருந்து விழுந்து சாகும் கட்டம் புதுசு

. எஸ்.ஜே.சூர்யா,
தங்க நகைகளை போட்டுக் கொண்டு ஜொலிக்கும் சகலகலா வல்லவன் மூன்றாவது பார்ட்டில் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்

தம்பி ராமையா, காளிதாஸ் ஜெயராம், இமான் அண்ணாச்சி என வருகிறார்கள், போகிறார்கள்,
இவர்களுக்கு நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை என்றாலும் கொடுத்துக் காட்சிக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்கள் படத்தொகுப்பாளர் ஶ்ரீகர் பிரசாத். இன்னும் கொஞ்சம் நறுக்கி இருக்கலாம் அன்பறிவு, ரமசான், அனல் அரசு, பீட்டர் ஹெய்ன், ஸ்டண்ட் சில்வா, தியாகராஜன் ஆகியோர் அடங்கிய ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் ஸேஸிங் காட்சிகளில் மிரட்டல்

சித்தார்த் – சமுத்திரக்கனியின் இருவரும் வரும் சென்டிமென்ட் காட்சி படத்தின் பலம். . இரு நடிகர்களுமே அக்காட்சிகளைச் சரியாகக் கையாண்டிருக்கிறார் கள் . மொத்தத்தில் இந்தியன் இன்றைய நாட்டுக்கு தேவையான இந்தியன். எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் இந்தியா முழுவதும் கரெக்ஷன், அதை யார் தான் தட்டி கேட்பது, என்று தட்டி கேட்க வந்துள்ளது. இப்படி ஒருவர் வரமாட்டாரா? என்று ஏங்கி தவிக்கும் இந்தியர்களுக்கு. அதை பூர்த்தி செய்து இருக்கிறார் கமல் பலவிதமான கெட்டப்புகள் பலவிதமான வில்லன்கள் என மிரட்டி இருக்கிறார் பாடல் காட்சிகளுக்கு, காதல் காட்சிகளுக்கு, அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டுக்கு தேவையான நல்ல கருத்துக்களைச் சொன்ன இந்தியனை நாம் வரவேற்கலாம்.