-

Loading latest news...

Kottukkaali movie review tamil

 Kottukkaali movie review tamil 


மீனாவுக்கும்(அன்னா பென்), பாண்டிக்கும்(சூரி) திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்நிலையில் மீனாவுக்கு பேய் பிடித்துவிடுகிறது. பேயை விரட்ட அவரை சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அப்பொழுது பாண்டியும் உடன் செல்கிறார். சாமியாரிடம் செல்லும் பயணம் தான் படத்தின் முதுகெலும்பாக இருக்கிறது.


மீனாவுக்கு நிஜமாகவே பேய் பிடித்ததா இல்லை அவர் திருமணத்திற்கு எதிராக இப்படியொரு அமைதி போராட்டம் நடத்துகிறாரா? பி.எஸ். வினோத்ராஜ் தான் சொல்ல வந்ததை சொல்ல நேரம் எடுத்துக் கொள்கிறார். அவர் நிதானமாக கதை சொல்வது படம் பார்ப்பவர்களின் நிதானத்தை சோதிப்பதாக இருக்கிறது. இருந்தாலும் சாதி பாகுபாடு, பாரம்பரியம் ஆகிய விஷயத்தில் படம் தனித்து தெரிகிறது. பாண்டியாகவே வாழ்ந்திருக்கிறார் சூரி. மீனா ஒரு காதல் பாடலை முணுமுணுப்பதை கேட்டு அத்தனை நாள் வரை அடக்கி வைத்திருந்த எரிச்சலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூரி. நடிப்பு மட்டும் அல்ல சூரியும் சூப்பராக இருக்கிறார். மீனாவாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் அன்னா பென். பேசாமலேயே தன்னை பற்றி அனைவரையும் பேச வைத்திருக்கிறார். அனைத்து கலைஞர்களையும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறார் வினோத்ராஜ்.


ஆக்ஷன் காட்சிகள், பயங்கரமான கதைக்களம் கொண்ட படம் இல்லை கொட்டுக்காளி. ஆனால் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கிறது. இது போன்ற ஒரு படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனை பாராட்டியே ஆக வேண்டும்.