-

Loading latest news...

ஆர்யமாலா விமர்சனம்

 ஆர்யமாலா விமர்சனம்.. 


மலராத வாடா மலர்

 

ஒரு படத்தின் கேப்டன் என்றால் அது டைரக்டர் தான்.. ஆனால் தமிழ் சினிமா முதல் முறையாக ஒரு இயக்குனர் இல்லாமல் அதாவது பாதியிலே ஓடி சென்றுவிட்டாராம் இயக்குனர்.. அவர் இயக்கிய படம் தான் இந்த ஆரியமாலா..

ஸ்டோரி…

நாயகி மனிஷா ஜித்.. இவர் வீட்டிற்கு மூத்த மகள்.. ஆனால் பருவ வயதை அடைந்தும் இவர் வயதிற்கு வரவில்லை.. இந்த நிலையில் இவரது தங்கை பூப்படைகிறாள்.. எனவே அவரை பெண் கேட்டு முறை மாமன்கள் வருகிறார்கள்.

ஆனால் அக்கா இருக்கும்போது தங்கையே திருமணம் செய்து வைக்க முடியாது என்கிறார் தாய்.. தங்கைக்கு வரன் வந்தும் தன்னால் தடைப்படுகிறதே என எண்ணி அக்கா வருந்துகிறார்.

இந்த சூழ்நிலையில் அக்கா மனீஷா கனவில் நாயகன் ஆர் எஸ் கார்த்திக்.. ஒரு கட்டத்தில் கனவில் வந்த நாயகனே தன்ய கிராமத்து திருவிழாவுக்கு கூத்து கலைஞராக வருகிறார்.

கார்த்திக் மனிஷாவிடம் காதலை சொன்னாலும் ஏற்க தயங்குகிறார். இறுதியில் என்ன ஆனது.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…

ஒட்டுமொத்த கதையை தாங்கி இந்த ஆரியமாலாவுக்கு அதிக பலம் சேர்த்திருக்கிறார் நாயகி மனீஷா ஜித்.. இவர் சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. நிஜத்தில் மாடர்னாக இருந்தாலும் படத்தில் கிராமத்து பெண்ணாக மனதை மயக்குகிறார் மனீஷா.. தங்கைக்காக வருந்துவது.. காதலனுக்காக ஏங்குவது.. காதலை சொல்ல தயங்குவது என சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

இடைவேளைக்கு பிறகு தான் வருகிறார் நாயகன் ஆர் எஸ் கார்த்திக்.. கூத்து கலைஞராக திறம்பட நடித்திருந்தாலும் சில இடங்களில் ஓவர் ஆக்டிங் தான்..

நாயகியின் தாய்மாமாவாக மாரிமுத்து, கூத்து மாஸ்டர் சிவசங்கர், நாயகியின் அம்மா எலிசபெத், ஊர்ப்பெரியவர் தவசி உள்ளிட்டோர் இயல்பான நடிப்பில் கவர்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

கூத்து நாடகத்தில் நாயகன் பெயர் காத்தவராயன்.. நாயகி பெயர் ஆரியமாலா அதையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர்..

தமிழ் சினிமாவில் பல படங்களை பார்த்திருக்கிறோம்.. வயதுக்கு வந்த நாயகி டூயட் பாடுவது காதலிப்பது என தமிழ் சினிமாவில் பல கதைகள் சொல்லப்பட்டு இருக்கும்.. ஆனால் முதல் முறையாக வயதுக்கு வராத நாயகியை வைத்து கதையை இயக்கி இருப்பது சிறப்பு..

பூப்படையாமல் ஒரு பெண் இருந்தால் அவள் எந்த மாதிரியான பிரச்சனைகளை சமூகத்தில் சந்திப்பார் என்பதை மனீஷா உணர்வுகளாய் கடத்தி இருக்கிறார்..

பாடல் வரிகள் புரியும் படியான இசையும் படத்தின் ஒளிப்பதிவு படத்தொகுப்பு நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.

முதலில் விறுவிறுப்பாக செல்லும் கதை இரண்டாம் பாதியில் கூத்து கட்டும் காட்சியில் நீண்ட வசனத்துடன் நீண்டு செல்கிறது..

படத்தில் இத்தனை பாடல்களா.? என எண்ணும் அளவுக்கு பாடல் வந்து கொண்டே இருக்கிறது.. அதிலும் எல்லா பாடல்களும் நாயகன் நாயகி மட்டுமே ஆடுவது போர் அடிக்கிறது.. ஒரு பாடலிலாவது குரூப் டான்ஸ் வைத்திருக்கலாம்.. சில கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்..