-


Loading latest news...

'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்!

 'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடலை வெளியிட்ட 100 சினிமா பிரபலங்கள்! 



100 பிரபலங்கள் வெளியிடும் 'அடியே வெள்ளழகி' ஆல்பம் பாடல்!


கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா  நடிப்பில் உருவான "அடியே வெள்ளழகி" பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள் .இதுவரை கலையுலகம் காணாத பிரம்மாண்ட புதுமை இது.


வருகிற 12-ஆம் தேதி கட்டெறும்பு சேனலில் இந்தப்பாடல் வெளிவருகிறது .இந்த ஆல்பம் பாடலைக் கட்டெறும்பு ஸ்டாலின் தயாரித்துள்ளார் .

அனைவரும் கண்டு மகிழும்படி உருவாக்கப்பட்டுள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் காதல் என்கிற மெல்லுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பாடல் உருவாக்கியுள்ளது.


இந்தப் பாடலில் நாயகனாக மிதுன் சக்கரவர்த்தி நடித்துள்ளார். 

இவர்,பில்லாபாண்டி, தேவராட்டம், புலிக்குத்திபாண்டி அங்காரகன், கருப்பு பெட்டி போன்ற பல படங்களில் தோன்றி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அறியப்பட்ட நடிகரான கே.சி.பிரபாத்தின் மகன். 


மிதுன் சக்கரவர்த்தி,இயக்குநர் முத்தையா  இயக்கத்தில் உருவான கொடி வீரன் படத்தில் சிறுவனாக அறிமுகம் செய்யப்பட்டவர். தொடர்ந்து பில்லாபாண்டி, கருப்புபெட்டி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ளார். இப்போது இயக்குநர் குகன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்து உள்ளார். இயக்குநர் சிவாஜி இயக்கத்தில் உருவாகும் தமிழ்த் திரைப்படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார்.

 இவரின் தந்தை 


 திரைப்படங்களில் நடிப்பதில்  மிதுன் சக்கரவர்த்திக்குச்  சிறு வயது முதல் மிகுந்த ஆர்வம் உண்டு.  இவர் இப்போது எஸ்.ஆர்.எம்  பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.ஸி., விஸ்காம் படித்து வருகிறார் .படித்து முடித்தவுடன் முழுமூச்சாக சினிமா தயாரிப்பையும்,சினிமா நடிப்பையும் கவனிப்பார் என அவர் தந்தை கேசி பிரபாத் கூறியுள்ளார்.


 இந்தப் பாடலை திரைப் பிரபலங்கள் 100 பேர் வெளியிட்டார்கள்.


 இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், சற்குணம், மோகன் ஜி, சரவண சக்தி,திருமலை, மஞ்சுதிவாகர்,

திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான  ஆர்.கே.சுரேஷ்,எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி,நடிகர்கள் விதார்த், விமல், அமுதவாணன், மதுரை காளையன், அப்புக்குட்டி, அங்காடித்தெரு மகேஷ், விஜய்விஸ்வா, ஸ்ரீபதி, சங்கர பாண்டியன்,டாக்டர் சரவணன்,

அங்கயற்கண்ணன், அஜய்வாண்டையார், ஜித்தன் ரமேஷ்,ரமணா, கலை, காதல் சுகுமார், ஆறுபாலா,

இயக்குநர் ஒளிப்பதிவாளர் ஜீவன், பாடகர் கலைமாமணி வேல்முருகன்,இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்  மோகன்டச்சு, பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்,நடிகைகள் தேவிகாவேணு, தியா.மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்  மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட பிரபலங்கள் இந்தப் பாடலை பார்த்து பாராட்டி  வலைதளத்தில் வெளியிட்டனர்.

Finding bliss in acclaimming your sweet heart.


Here's Mellifluous #AdiyeVellalagi song.


Direction: Mohammed Imthiyas


Hero -  K.C.P Methun Shakaravarthy Heroine - Jeevitha


Link -  youtu.be/pNjQFSUl0HY?si…


@PROSakthiSaran