-


Loading latest news...

கிரைம் திரில்லர் நிறைந்த மேஜிக் மக் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் இ;ன் ‘ ’மௌனம்’ ’ புதிய படத்தின் துவக்க விழா.

 கிரைம் திரில்லர் நிறைந்த மேஜிக் மக் மூவிஸ் புரொடக்ஷன்ஸ் இ;ன் ‘ ’மௌனம்’ ’ புதிய படத்தின் துவக்க விழா. 



தமிழில், மௌன கீதங்கள், மௌன ராகம், மௌனம் பேசியதே, மௌனம் சம்மதம், போன்ற தலைப்புகளில் திறந்த கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. 

அந்த வகையில் தற்போது மேஜிக் மக் மூவிஸ் சார்பில் மௌனம் என்கிற பெயரில் புதிய படம் உருவாக உள்ளது. கிரைம் திரில்லர், நிறைந்த இப்படத்தை தமிழில், தெலுங்கு, கன்னட, மலையாளம், ஹிந்தி ஆகிய  மொழிகளில் இயக்குகிறார். இப்படத்தை கன்னட திரையுலகை சேர்ந்த . மகேஷ்  குமார் B. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார். 

ஒரு காலத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான கதைகளை கொண்டு தயாரித்து வந்த கன்னட திரையுலகம் கே.ஜி.எஃப், காந்தாரா, su from so, ஆகிய பிரம்மாண்ட படங்களை தயாரித்து தற்போது முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அந்த வரிசையில் இப்படத்தின் இயக்குநர் மகேஷ்,B டிராகன், ஊட்டி,  மிஞ் மிஞ்சுலு, போன்ற படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இதில் மிஞ்சுலு Karnataka

State Award பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்த புதிய படத்தின் துவக்க விழா பிரசாத் லேப் விஜயதசமி நன்னாளில் இன்று இனிதே துவங்கியது. அக்டோபர் 20 முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து 60 நாட்கள் நடைபெற்று படத்தை வெளிக்கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. நான்கு பாடல்கள் இடம் பெறும் இப்படத்தில் இரண்டு பாடல்கள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. 

மௌனம் இப்படத்தின் கதை கொரோனா காலக்கட்டத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன நாயகனைத் தேடி ஒரு சந்தர்பத்தில் தனது முன்னாள் காதலி தேடி வருகிறார்.

வீட்டில் அடைகலமான அவர், விடிந்து பார்க்கையில் படுகொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த கொலை எப்படி நடந்தது அதன் பின்னணி என்னென்ன என திகில், மர்மம் நிறைந்த கதை களமாக சொல்லப்பட உள்ளது.

Cast : 

Male lead : Abhi Ram Varma

Male 2nd lead : JSR Rithik 

Supporting Actor : Suman 

Crew : 

Produced by  : Magic Mug Movies 

Co- producers : Shraddha Manjunath  & Dr.B.H.Channakeshava Murthy.

D.O.P : Nireekshith

Music : Sam Manigandan 

Writer : Ravindra Parameshwarappa

Story, Written & Directed by : B. Mahesh kumar

Pro  : Ganesh