பைக்கர்’ திரைப்பட விமர்சனம்
தந்தை ராஜசேகர் போல் தானும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக வேண்டும் என்று சர்வானந்த் விரும்புகிறார். அவரது விருப்பம் மற்றும் ஈடுபாட்டை பார்த்து அவரது குருவான தந்தை ராஜசேகர் இத்துறையில் அவர் மிகப்பெரிய சாதனையாளராக வருவார் என்று நம்புகிறார். சர்வானந்தும் இத்துறையில் யாரிடமும் இல்லாத தனித்திறன்களோடு வலம் வருகிறார். னம் ராஜசேகர் எதிர்பார்த்தது போல், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை தன் மகன் மூலமாக உலக அரங்கில் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. தான் நினைத்ததை தன் மகன் செய்து முடிப்பான் என்ற அதீத நம்பிக்கையோடு இருக்கும் ராஜசேகரை சர்வானந்த் ஏமாற்றி விடுகிறார். முதல் பந்தயம் முடிந்த உடன் அவர், பந்தயத்தில் இருந்தும், தனது தந்தையிடம் இருந்தும் விலகிச் சென்று விடுகிறார். மகன் செய்த தவறால் ராஜசேகர் தண்டிக்கப்படுவதோடு, அவருக்கு மோசடி நபர் மற்றும் துரோகி என்ற அவப்பெயர் ஏற்படுகிறது. இதனால், அவர் மோட்டார் சைக்கிள் பந்தய பயிற்சியாளர் பணியை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தந்தையிடம் இருந்து விலகி வாழ்ந்து வரும் சர்வானந்த், தந்தையின் நிலை அறிந்து அதை மாற்றுவதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக களம் இறங்க முடிவு செய்கிறார். அவரது முடிவு அவரது தந்தையின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அவரது எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?, அவர் தந்தையை பிரிந்து செல்ல காரணம் என்ன ? என்பதை காட்சி விருந்தாக சொல்வது தான் ‘பைக்கர்’.
மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் கதாபாத்திரத்திற்காக சர்வானந்த் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. இரண்டு விதமான தோற்றங்களுக்காக உடல் எடை குறைத்திருப்பது, ஸ்டைலிஷான தோற்றம் உள்ளிட்ட அனைத்திலும் ஒரு முழுமையான விளையாட்டு வீரராக திரையில் ஜொலிஜொலிக்கிறார் நாயகியாக நடித்திருக்கும் மாள்விகா நாயர், காதலியாக இருக்கும் போது சாகசம் செய்யும் காதலனை ஊக்கப்படுத்தி தைரியம் சொல்பவர், கணவரான பிறகு ஒரு மனைவியாக மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இருக்கும் ஆபத்தை உணர்ந்து பதறும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்திருப்பவர், பாடல் காட்சியில் ஆடை குறைப்புடன் ஆட்டம் போட்டு அட்டகாசம் செய்திருக்கிறார்.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ராஜசேகர், இந்திய மோட்டார் சைக்கிள் பந்தய விளையாட்டை உலக அரங்கில் எடுத்துச் செல்ல துடிக்கும் ஒரு பயிற்சியாளராக நேர்த்தியாக நடித்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையான அவரது கதாபாத்திர வடிமைப்பு மற்றும் அதில் அவர் வெளிப்படுத்திய அளவான நடிப்பு படத்தை தூணாக தாங்கிப் பிடிக்கிறதுவிளையாட்டை வியாபரமாக்கி சம்பாதிக்கும் தொழிலதிபர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார் அத்துல் குல்கர்னி.. Casting : Sharwanand, Rajasekhar, Malvika Nair, Atul Kulkarni
Directed By : Abhilash Reddy
Music By : Ghibran Vaibodha
Produced By : UV Creations - V. Vamsi Krishna Reddy, Pramod Uppalapati
