-

Loading latest news...

Theeyor Koodam First Look Poster Unveiled by Thenisai Thendral Deva*

 *தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட "தீயோர் கூடம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்* 



*சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் தீயோர் கூடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு*


ரூல் பிரேக்கர்கஸ் புரொடக்ஷன் மற்றும் தியா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஜெகன் நாராயணன், சக்திவேல், வீரமணி மற்றும் கண்ணன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "தீயோர் கூடம்." சாக்ஷி அகர்வால், டேனியல் ஆனி போப் மற்றும் வையாபுரி இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்தை சக்திவேல் எழுதி, இயக்கி இருக்கிறார். மேலும் சாம்ஸ், வசந்தி, ஜேஸ்பர், சத்யா மற்றும் சம்யுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வசந்த் இசைப்பேட்டை இசையமைக்கும் இந்தப் படத்திற்கு பிரசாத் டி.எஃப்.டி. ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, பி.கே. படத்தொகுப்பு பணிகளை செய்துள்ளார். கலை இயக்குநராக பிரசாத் பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்களை ராஜா எழுதியுள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஒரே நாளில் நடக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.


ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அந்த சம்பவத்தில் சிக்கும் மூன்று பேர் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் அதில் இருந்து எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை திரில்லர் ஜானரில் பேசும் படமாக தீயோர் கூடம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தீயோர் கூடம் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தேனிசை தென்றல் தேவா வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை சாக்ஷி அகர்வால் முன் உடைந்த கண்ணாடிகளில் டேனில் ஆனி போப், வையாபுரி முகங்கள் இடம்பெற்று இருக்கிறது. போஸ்டரில் மர்மம், விசாரணை மற்றும் மனதை குழப்பும் சந்தேகங்களுக்கு விடை தேடும் கதையை தீயோர் கூடம் வித்தியாசமாக சொல்லும் என்று தெரிகிறது. முதற்கட்டமாக ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் இந்தப் படம் குறித்த இதர அப்டேட்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.


*Theeyor Koodam First Look Poster Unveiled by Thenisai Thendral Deva*


*Sakshi Agarwal starrer crime thriller Theeyor Koodam gears up for release*


The first look poster of the upcoming Tamil crime thriller Theeyor Koodam was officially launched by legendary music composer Thenisai Thendral Deva. Produced by Rule Breakers Production and Thiya Cini Creations, the film is being made under the banner with producers Jegan Narayanan, Sakthivel, Veeramani, and Kannan.


It stars Sakshi Agarwal, Daniel Annie Pope and Vaiyapuri in the lead roles, with an ensemble supporting cast including Chams, Vasanthi, Jasper, Sathya, and Samyuktha. Written and directed by Sakthivel, the film features music by Vasanth, cinematography by Prasad D.F. Tech, editing by P.K., and art direction by Prasad. The lyrics for the songs have been penned by Raja.


Theeyor Koodam is a gripping crime thriller that unfolds entirely within a single day. The story revolves around a sudden murder that takes place inside a house, trapping three individuals in a web of complications. It explores how they navigate the ensuing chaos and struggle to emerge from the crisis.


The entire shoot has been completed, and the film is currently in the post-production stage with background works progressing at a brisk pace.


In a special gesture, music maestro Thenisai Thendral Deva unveiled the film's title and first look poster. The striking poster features Sakshi Agarwal in the foreground against a backdrop of shattered glass, with the faces of Daniel Annie Pope and Vaiyapuri reflected in the broken pieces.


The visual effectively conveys an atmosphere of mystery, investigation, and mind-bending suspense, hinting at a unique narrative that seeks answers to disturbing doubts and questions.With the first look now out, more exciting updates and promotional materials for Theeyor Koodam are expected to follow shortly.