-

Loading latest news...

TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

TN 2026” தங்க நட்சத்திரம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* 



KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. 


இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 


இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட  பிரம்மாண்ட அரங்கில்,  கோலாகலமாக நடைபெற்றது. 


இந்நிகழ்வினில்... 


ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., 

நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை தம்பி ராமையா  சார் தான் முதலில் இந்த படத்துக்கு என்னை கூட்டி வந்தார். அதற்குப் பிறகு தான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன். இந்த படத்தைப் பொறுத்தவரையில், நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம். அதே நேரத்தில், ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்ல அனுபவம். இந்த படத்தில் நடித்த ஹீரோ நட்டி, அவர் ஏற்கனவே ஒரு பெரிய சினிமாடோகிராஃபர். அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன். அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருந்து உதவினார். அனைவருக்கும் நன்றி. 


படத்தொகுப்பாளர் அரள் R தங்கம் பேசியதாவது.., 

இது தான் எனது முதல் மேடை அனுபவம். அதனால் சிறிது பதட்டமாக உள்ளது. முதலில் இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். அதேபோல் தம்பிராமையா சார்,  நட்டி சார்,  எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பாருங்கள். பார்த்த பிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பகிருங்கள். நன்றி. 


நடிகை ஷிரித்தா பேசியதாவது.., 

இன்று இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

அதேபோல், தம்பி ராமையா சார் அவர்கள் முதலில் என்னை தொடர்பு கொண்டு, “நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்த வாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி. இந்தப் படத்தின் மூலம் நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். இந்த படம் ஒரு பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு புதியவராக, பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. குறிப்பாக, உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் மிகவும் உற்சாகமான, மகிழ்ச்சியான நபர். அதனால் ஒரு நாள்கூட வேலை செய்த போது அழுத்தமாக உணரவில்லை. ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது.


இன்றைக்கு நான் ஒரு பெரிய ரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார் தான்.

நீங்கள் டீசரை பார்த்த பிறகு இதை உணர்ந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார். நட்டி சார்.  இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி. 


நடிகர் இளவரசு பேசியதாவது.., 

ஒரு திரைப்படத்தில் நடித்து, அந்த படம் முறையாக வெளியேறி வெற்றி பெறுவது அதை விட பெரிய சந்தோஷம், எங்கள் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை. ஒரு படத்தை உருவாக்குவது முக்கியமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிக முக்கியம். ரவி சார், இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக திட்டமிட்டு, படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி, அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. ஒரு சினிமாக்காரராக, சினிமா எப்போதும் உங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.


இந்த படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ, எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை. ஒரு திரைப்படத்தை எப்படி கையாள வேண்டும், அதன் மேலாண்மை, அதன் வடிவமைப்பு  எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு, மிகப் பொறுப்புடன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் படம் பார்க்கும் போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்கு புரியும்.


புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். இந்த படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர். இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.


நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களை கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றை தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு  இந்த படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்த படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்  இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். நன்றி. 


ஸ்டண்ட் இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது.., 

“TN 2026” படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள். அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப் படத்திற்காக அவர் கதை கூறியபோது, அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பொதுவாக நாயகர்களே சண்டைக் காட்சிகளில் நடிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் நான் நட்டி சார், பாஸ்கர் சார், இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. எங்கள் கதாநாயகன் நட்டி சார் இந்தப் படத்தில் புதிய தோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளிலும் அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இளவரசு சார், பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி. கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக் காட்சியை உருவாக்கினோம். அதன் பலன் திரையில் நிச்சயமாக தெரியும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர், தொகுப்பாளர் மற்றும் முழு குழுவினருக்கும் நன்றி. இந்த வாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி.

நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது.., 

இந்த மேடையில் பேசுவது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. உமாவை நீங்கள் ஒரு இயக்குநராக பார்க்கிறீர்கள். ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக் கலைஞராகத்தான் அறிந்தேன். என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக் கலைஞர்கள். ஆனால் இன்று பல வருடங்களுக்கு பிறகு, அவர்களை ஒரு இயக்குநராகவும், ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


உமா, இந்த வாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பெரிய நடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஒரு பாடல் ஒரு பழைய கால பாணியில் இருக்க வேண்டும் என்று உமா கூறினார். அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்து காட்டி விளக்கினார். அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

ஒளிப்பதிவாளர் சார், என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி. படத்தொகுப்பாளர் சார், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி. இந்த படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன். நன்றி. 


நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது.., 

இந்த படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக  உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்த படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்த படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒரு வரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குனர் உமாபதி அவர்கள் மிக திறமையானவர். அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த படத்தில் முழு குழுவின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. இதில் நல்ல செய்திகளும், பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன. இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்த படம் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும், சுவாரஸ்யமானதும் ஆகும். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன். எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.