தினசரி விமர்சனம்… : லோன் திண்டாட்டம்
CYNTHIA PRODUCTION தயாரிப்பில் இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க ஸ்ரீகாந்த் – சிந்தியா லூர்டே ஜோடியாக நடித்த படம் ‘தினசரி’.
ஸ்டோரி…
ஒரு பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பாஸ்கர் மீரா மற்றும் அவரது அக்கா வினோதினி வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்..
ஸ்ரீகாந்த் போடும் ஒரே கண்டிஷன் தன்னைவிட தன் மனைவி அதிகமாக சம்பாதிக்க வேண்டும்.. அப்போதுதான் வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என நினைக்கிறார்.
ஒரு நாள் சிந்தியாவை பெண் பார்க்க செல்கின்றனர் அவரது குடும்பத்தார்.. திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்ல மாட்டேன் என கண்டிஷன் போடுகிறார் சிந்தியா.. இந்த கண்டிஷனை மறைத்து ஸ்ரீகாந்துக்கு மணமுடித்து வைக்கின்றனர் அவரது பெற்றோர். ஏற்கனவே பல லோன்களை வாங்கி வட்டி கட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீகாந்த் தன் மனைவி சம்பாதித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என நினைக்கையில் இந்த விஷயம் திருமணத்திற்கு பின்பு அவருக்கு தெரிய வருகிறது.. அதன் பிறகு என்ன நடந்தது? மனைவி வேலைக்கு சென்றாரா? அவரது கடன்கள் என்ன ஆனது?என்பதெல்லாம் மீதிக்கதை. கேரக்டர்ஸ்…
ஐடியில் வேலை செய்யும் எதார்த்த இளைஞராக ஸ்ரீகாந்த்.. பெரிய மெனக்கடல் இல்லாமல் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.. நாயகியாக தயாரிப்பாளர் சிந்தியா.. அழகு பொம்மையாக வந்து செல்கிறார்..
ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாந்தினி தமிழரசன், சாம்ஸ், பிரேம்ஜி, குமார் நடராஜன், சரத், நவ்யா மற்றும் பலர் நடித்துள்ளனர்..
இவர்களின் கேரக்டர்ஸ் கதை ஓட்டத்திற்கு பேருதவி.. கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர்.. டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு நிறுவனம் : சிந்தியா பிரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் : சிந்தியா லூர்டே, எழுத்து & இயக்கம் : சங்கர், போஸ்ட் புரொடக்ஷன் இயக்குனர் : தினேஷ் தீனா, இசை : இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவாளர் : ராஜேஷ் யாதவ், படத்தொகுப்பு : ஸ்ரீகாந்த், ஸ்ட்ன்ட் : ஸ்ட்னர் சாம்
நடனம் : தினேஷ் குமார்,
பத்திரிக்கை தொடர்பு : இரா. குமரேசன்..
இளையராஜா இசையமைத்திருக்கிறார்.. தன்னுடைய இசையில் சூப்பர் ஹிட்டான பாடல்களை அவ்வப்போது ஒலிக்க விட்டு மகிழ்விக்கிறார்.. ஆனால் புதிய பாடல்கள் பெரிதாக கவனம் பெறவில்லை.. பின்னணி இசையில் உணர்வுகளுக்கு உயிரூட்டி இருக்கிறார்..
ராஜேஷ் யாதவ் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் காட்சிகள் கலர்ஃபுல்.. பெரும்பாலும் வீடு ஆபீஸ் என மாறி மாறி காண்பிக்கப்படுகிறது.. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு கண்களுக்கு இதம்.. தான் இளையராஜா இசையில் படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என சிந்தியா நினைத்தாரோ.? அதற்காகவே படத்தை தயாரித்திருக்கிறார்..? ஆனால் நடிப்பிலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. வெறுமனே வந்து செல்லும் நாயகியாக மட்டுமே இருக்கிறார்..
சங்கர் என்பவர் இயக்கியிருக்கிறார்.. பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என நினைக்கும் இளைஞர்களுக்கு பாடம் எடுத்திருக்கிறார் இயக்குனர.. அதே சமயம் எம் எஸ் பாஸ்கர் கேரக்டர் மூலம் வாழ்க்கைக்கு பணம் தேவை.. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதையும் அட்வைசாக சொல்லியிருக்கிறார்.. ஆனால் யூகிக்க முடிந்த காட்சிகள் அடுத்தடுத்து வருவதால் படத்துடன் பெரிதாக ஒன்ற முடியவில்லை.. திருப்புமுனை காட்சிகள் வைத்து சுவாரஸ்யம் ஏற்படுத்தி இருந்தால் இந்த தினசரி படம் பெண்களையும் கவர்ந்திருக்கும்..
வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி தினசரி படம் திரையரங்குகளில் வெளியாகிறது..
