-

Loading latest news...

காதல் என்பது பொதுவுடமை விமர்சனம்.. கண்ணியத்துடன் பெண்ணியம் பேசும் காதலிகள்

 காதல் என்பது பொதுவுடமை விமர்சனம்..


காதல் என்பது பொதுவுடமை விமர்சனம். கண்ணியத்துடன் பெண்ணியம் பேசும் காதலிகள் 
FIRST ON NET காதல் என்பது பொதுவுடமை விமர்சனம்.. 4.25/5.. கண்ணியத்துடன் பெண்ணியம் பேசும் காதலிகள்

 

காதல் என்பது தனிமனித உரிமையில்லை.. அது எல்லாருக்கும் பொதுவானது.. யாரும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்ற அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் என்பது பொதுவுடமை’.

ஸ்டோரி…

தன் கணவர் வினீத் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அவரைப் பிரிந்து தன் ஒரே மகள் லிஜோ மோளுடன் வசித்து வருகிறார் You Tuber பெண்ணியவாதி ரோகிணி.. ஒரு கட்டத்தில் லிஜோ தான் அனுஷா என்ற ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அதற்கு அம்மாவின் சம்மதம் கேட்கிறாள்..

இதனால் மனமுடைந்து போகும் ரோகிணி வேறு வழியின்றி கணவர் வினீத்தை அழைத்து தன் மகளுக்கு ஆலோசனை சொல்ல சொல்கிறார்..அதன் பிறகு என்ன நடந்தது.? பிரிந்து சென்ற பெற்றோர் மகளின் திருமணத்தை நடத்தி வைத்தார்களா அல்லது பெண்ணும் பெண்ணும் காதலிக்க கூடாது என அட்வைஸ் செய்தார்களா? இறுதியில் என்ன நடந்தது? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

லிஜோ மோல் ஜோஸ், வினீத், ரோகினி, அனுஷா, காலேஷ், தீபா சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

‘ஜெய் பீம்’ நடிகை லிஜோ மோள் படத்தின் ஆணிவேர்.. ஆரம்ப முதல் கிளைமாக்ஸ் காட்சி வரை கண்ணிமைக்காமல் நம்மை ரசிக்க வைத்து விட்டார்.. அம்மாவிடம் காதலை சொல்ல தயங்குவது முதல் அப்பாவிடம் காதலிக்காக எதிர்த்து பேசுவது என ஒவ்வொரு ஃபிரேமிலும் லிஜோ ஜொலிக்கிறார்..

நந்தினியாக நடித்திருக்கும் அனுஷாவும் அசத்தலான நடிப்பில் கவர்கிறார்.. இவரது பிளாஷ்பேக் சீன் வேற லெவல்..  வினித் பண்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். அடிக்கடி தமிழ் சினிமாவில் நடிங்க சார் என்று சொல்லும் அளவுக்கு வியக்க வைத்திருக்கிறார் வினித்..

ரோகினி தனது மொத்த நடிப்பு வித்தையும் இறக்கிவிட்டு இருக்கிறார்.. தோழியாக பழகினாலும் மகளின் காதலை ஏற்க முடியாமல் இவர் காட்டும் ரியாக்ஷன் செம..

லிஜோ மற்றும் அனுஷாவின் நண்பனாக வரும் காலேஜ் நடிப்பில் கலக்கி இருக்கிறார்.. அடடா இவரையே பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாமே என்று நாம் எண்ணும் அளவுக்கு நல்லவனாக சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

வீட்டு பணிப் பெண்ணாக தீபா சங்கர் நடித்திருக்கிறார்.. இவரது மகளுக்கு மருமகன் கொடுக்கும் டார்ச்சரால் இவர் படும் வேதனைகளால் லிஜோவின் காதலுக்கு ஆதரவளிக்கும் அந்த சீன் சிலிர்க்கும் .. மகள் உண்மையை மறைக்க ரோகினி பணம் கொடுப்பதும் அதை கௌரவ குறைச்சலாக நினைத்து திருப்பி கொடுக்கும் காட்சியில் தீப்பொறி தீபா..

டெக்னீசியன்ஸ்…  கண்ணன் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.. பாடல்களும் பின்னணி இசையும் உணர்வூட்டி ரசிக்க வைக்கிறது..

ஸ்ரீ சரவணன் என்பவர் ஒளிப்பதிவு செய்ய தேனி சார்லஸ் எடிட்டிங் செய்துள்ளார்.. படத்தின் முழு கதையும் லிஜோ வீட்டில் நகர்ந்தாலும் அதை ஆங்கிளில் அழகாக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீ சரவணன்.. கேமரா கண்களில் கவிதையாக காட்சிகளை வடிவமைத்து இருக்கிறார்..

மொத்த படமே 110 நிமிடங்களுக்குள் முடிவடைகிறது.. படம் தொடங்கி 45 நிமிடங்களுக்குள் இடைவேளையும் வருகிறது.. எனவே நிச்சயம் எடிட்டரை பாராட்டாதவர்களே இருக்க முடியாது..

96, கார்கி, வதந்தி உள்ளிட்ட படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைன் செய்த சுபா இந்த படத்திற்கும் காஸ்ட்யூம் வடிவமைத்திருக்கிறார்.. இவரின் பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.. கதையின் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை எதார்த்தமாக வடிவமைப்பதில் கில்லாடி.  இப்படத்தை மேன்கைன்ட் சினிமாஸ், சிமெட்ரி சினிமாஸ், நித்ஸ் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. பிரபல மலையாள இயக்குநரான ஜியோ பேபி தயாரித்துள்ளார்.

2024 கடந்த ஆண்டு கோவா திரைப்பட விழாவில் பங்கேற்று பாராட்டுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்சார் குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது..

ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.. இவர் ஏற்கனவே லென்ஸ் மற்றும் தலைக்கூத்தல் என்ற படங்களை இயக்கியவர்..

படத்தின் பல வசனங்கள் சபாஷ் ரகம்.. ஆணாதிக்கம் பேசும் ஆண்களை கூட பெண்ணியத்திற்காக கைதட்ட வைக்கும்..

படத்தின் முதல் காட்சியிலே கதையை தொடங்கி விட்டார் இயக்குனர்.. சர்ச்சைக்குரிய கருத்துக்களை எடுத்தாலும் அதை சாந்தமாக சொல்லி சபாஷ் பெறுகிறார் ஜெயபிரகாஷ்..

லிஜோ, அனுஷா, வினித், ரோகினி, காலேஷ், தீபா உள்ளிட்ட 6 கேரக்டர்களை வைத்து அருமையான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்..  பெண் & பெண் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது என பலர் சொன்னாலும் படத்திலும் வினித் & ரோகிணி கேரக்டர்களை கொடுத்து அவர்கள் மூலமே கேள்விகளை கேட்டு அதற்கு சரியான பதிலடியும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

(லிஜோவுக்கு சாதகமாக பெற்றோர் பிரிவு, அனுஷாவின் ஃப்ளாஷ் பேக் உள்ளிட்டவை திணிக்கப்பட்டவை.?)

மலையாள திரைப்படங்களைப் போல தமிழில் வருவதில்லை என ஏங்கும் ரசிகர்களுக்காக முழு முயற்சி கொடுத்து இருக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

இப்படி பெண்களும் பெண்களும் காதலித்தால் ஆண்கள் என்ன செய்வது? திருமண வாழ்க்கை என்னாவது என எண்ணும் ஆண்களின் சார்பாக இந்த விமர்சனத்தை முடிக்கிறேன்