ராபர்’ – (விமர்சனம்.)
குலை நடுங்க வைக்கும் வழிப்பறிக்
கொள்ளையன் இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்’ மற்றும் ‘மெட்ரோ புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம், ராபர். இதில், சத்யா, ஜெயபிரகாஷ், தீபா, டேனியல் அனி போப், சென்ராயன், ‘ராஜா ராணி’ பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ராபர் திரைப்படத்திற்கு, ‘மெட்ரோ’ திரைப்படத்தினை இயக்கிய, இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதியிருக்க, அறிமுக இயக்குநர் எஸ். எம். பாண்டி, இயக்கியிருக்கிறார் தங்கச் சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களை பற்றியும், பறிபோகும் அப்பாவிகளின் உயிர் குறித்தும் பரபரப்பாக பேசியிருக்கும் படம், ராபர். கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் நாயகன் சத்யா, ஒரு பிபிஓ வில் வேலைக்கு சேருகிறார். சென்னையின், படாடோபமான, வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார். அதற்கான பணத்தை சம்பாதிக்க தங்கச் சங்கிலி பறிக்க முடிவெடுத்து, அதன்படி நடக்கிறார். ஒரு புறம் பிபிஓ வில் வேலை செய்து கொண்டே சங்கிலி பறிக்கும் வேலையிலும் ஈடுபடுகிறார். இதன் தொடர்ச்சியாக, ஒரு நாள் ஜெயப்பிரகாஷின் மகளிடம் சங்கிலி பறிக்க முயலும்போது, அந்தப்பெண் பரிதாபமாக இறந்து போகிறார். ஜெயப்பிரகாஷ், தனது மகளின் பரிதாப சாவிற்கு பழிவாங்க முடிவு செய்கிறார். அதன் படி, போலீஸான ஸ்டில்ஸ் பாண்டியன், அவருக்கு உதவுகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? என்பது தான் ராபர் படத்தின், பரபரப்பான கதை. கதையின் நாயகனாக நடிகர் சத்யா. அப்பாவித்தனமான முகத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும், கொடூர முகத்தினை வெளிக்காட்டி, இருவேறு மாறுபட்ட நடிப்பினை கொடுத்துள்ளார். இவர், தனது கதாபாத்திரத்திகேற்றபடி, நடிப்புத்திறனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
கொள்ளையை, ஒருங்கிணைக்கும் வில்லனாக டேனி. இவரும் தன் பங்கிற்கு சிறப்பு சேர்த்திருக்கிறார். அதே போல் செண்ட்ராயனும் நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், தீபா சங்கர் உள்ளிட்டோரும் கவனம் பெறுகின்றனர்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமாரின் ஒளிப்பதிவில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. ஜோகன் சிவனேஷ் இசையமைப்பில் காட்சிகள் பரபரப்பாக செல்கிறது. படத்தின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்தின் பலம். சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள், திருட்டு நகையை விற்கும் கும்பல், காவல் துறையின் மெத்தனமான போக்கு, என அனைத்தையும் க்ளைமாக்ஸ் வரை, பரபரப்பான திரைக்கதை அமைத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர், எஸ். எம். பாண்டி. இருந்தாலும், ஏற்கனவே வெளியான ‘மெட்ரோ’ படத்தின் சாயல் இருப்பது, ‘ராபர்’ படத்தின் குறை!