-


Loading latest news...

‘ஜென்டில் வுமன்’ விமர்சனம்!

 ‘ஜென்டில் வுமன்’ விமர்சனம்! 


 Komala Hari Picture’s & ‘One Drop Ocean Pictures’ தயாரிப்பில், இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கத்தில், லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா, ஹரி கிருஷ்ணன், ராஜீவ் காந்தி, தாரணி, வைரபாலன், சுரேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பினில் வெளியாகியிருக்கும் படம், ஜென்டில் வுமன்.

செய்தித்தாள்களில் வெளியான ஒரு உண்மை சம்பவமே, ஜென்டில் வுமன்’  திரைப்படமாக கற்பனை கலந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படம், சுமார் 19 நாட்களில், இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  சென்னையில் வசித்து வரும், லிஜோமோல் ஜோஷ் – ஹரி கிருஷ்ணன் இருவரும், புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதியினர். இனிமையாக, சந்தோஷமாக இவர்களது வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. ஹரி கிருஷ்ணன், சர்வ சதா நேரமும் லிஜோமோல் ஜோஷ்சினை கொஞ்சிய படி அவரையே சுற்றி வருகிறார். இந்நிலையில் ஒரு நாள்,  லாஸ்லியாவிற்கும், ஹரி கிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதை அறிந்து கொள்கிறார். அதன் பிறகு, லிஜோமோல் ஜோஷ் ஒரு திடுக்கிட வைக்கும் முடிவினை எடுக்கிறார். அது என்ன? என்பது தான், ‘ஜென்டில் வுமன்’ படத்தின் கதை.   ஹரி கிருஷ்ணனை தவிர்த்து  லிஜோமோல் ஜோஷ், லாஸ்லியா இருவருக்கும் அலுத்தமான கதாபாத்திரம். அதை இருவருமே சிறப்பாக கையாண்டிருந்தாலும், லாஸ்லியா மிகச்சிறப்பாக அவரது கதாபாத்திரத்தினை கையாண்டிருக்கிறார். அன்புக்காக ஏங்குவதாகவும், ஏச்சுப்பேச்சுகலை தாங்கி வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்போதும் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடிப்பினை கொடுத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும், அதில் தனித்துவத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

லிஜோமோல் ஜோஷ், சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தாலும், அவரது கதாபாத்திர வடிவமைப்பு, அந்த நடிப்பினை வீணடித்துள்ளது.  இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன், இவரது கதாபாத்திர வடிவமைப்பினை சரியாக வடிவமைக்காததால், நம்பிக்கைத் தன்மை இழந்து, மொத்த படமும், படம் பார்ப்பவர்களை சென்றடைய வில்லை. என்பது ஆகப்பெரும் சோகம்.  ஹரி கிருஷ்ணனுக்கு, லாஸ்லியாவுடன் தொடர்பு இருப்பதை அறிந்து, லிஜோமோல் ஜோஷ் எடுக்கும் அந்த முடிவு, நம்பும் படி இல்லை. அந்த முடிவினை அவர், இதற்கு முன்னர் பல தடவை எடுத்து மாதிரியாக இருக்கிறது. அவரின் அந்த முடிவு.படத்தினை பாதாளத்திற்குள் விழச்செய்து விடுகிறது. அதற்கு பின் படத்தினை காப்பாற்றுவது, லாஸ்லியாவும் அவரது நடிப்பும் தான்.

ஹரி கிருஷ்ணனுக்கு நடிக்க பெரிதாக காட்சிகள் இல்லை. கிடைத்த காட்சிகளில் ஓகேவாக நடித்திருக்கிறார்.

யுகபாரதியின் வசனங்கள் பளிச்சிடுகின்றன. குறிப்பாக, லாஸ்லியாவை போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் மானபங்கப்படுத்தும் காட்சியில், லாஸ்லியா பேசும் வசனங்கள் சிறப்பு. அதே போல், லிஜோமோ ஜோஷூம், லாஸ்லியாவும் பேசிக்கொள்ளும் காட்சியில் இடம் பெறும் வசனங்களும் சிறப்பாக இருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் இசை, படத்திற்கு மிகப்பெரும் பலம்.  ஒளிப்பதிவாளர் காத்தவராயன், ஒளிப்பதிவினை சிறப்பாகச் செய்துள்ளார்.

நம்பகத்தன்மையை இழந்து நிற்கும் ‘ஜென்டில் வுமன்’, அடுத்த பாகத்திற்காக அடித்தளம் இட்டிருப்பது வேடிக்கை!