-


Loading latest news...

ட்ராமா ( பட விமர்சனம்)


 

ட்ராமா ( பட விமர்சனம்) 

 
ஆட்டோ ஓட்டும் மாரிமுத்து மகள் ஒருவனை காதலிக்கிறார். அவன் அவளை கர்ப்பமாகி விட்டு மாயமாகி விடுகிறான். மகள் நிலையை அறிந்து மாரிமுத்து குடும்பம் நொந்து போகிறது. அதேபோல் விவேக் பிரசன்னா மனைவி சாந்தினியின் ஆபாச வீடியோ ஒன்றை ரவுடி எடுத்து வைத்துக் கொண்டு 50 லட்சம் கேட்டு மிரட்டுகிறான். அந்த பணத்தை கொண்டு வரும்போது எதிர்பாராத சம்பவம் நடக்கிறது. அது விவேக் பிரசன்னா உள்ளிட்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அப்படி என்ன நடந்தது. இதற்கு பின்னணியில் இருப்பது யார் என்ற கேள்விகளுக்கு ட்ராமா படம் பதில் அளிக்கிறது.

ட்ராமா என்பதற்கு பாதிப்பு என்று அர்த்தம்.. படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்படும் பாதிப்பை கதை விளக்குகிறது.

மூன்று குடும்பங்களின் கதையாக இதை இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கி இறுதியில் ஒரு புள்ளியில் அந்த குடும்பங்கள் எப்படி இணைகிறது என்பதை சொல்லும் கதையாக வடிவமைத்திருக்கிறார்.    கிட்டத்தட்ட ஒரு ஆந்தாலஜி பாணியிலான கதை என்று கூட சொல்லலாம்.

படத்தில் விவேக் பிரசன்னா ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இவர்
பல படங்களில் வில்லன் மற்றும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கதையின் நாயகன் என்றாலும் சினிமா ஹீரோவுக்கான எந்த ஒரு பில்டப்பும் கிடையாது. தன்னால் மனைவிக்கு ஒரு குழந்தையை தர முடியாத ஆண்மை இல்லாத கணவராக நடித்திருக்கிறார். அந்த உண்மையை மனைவியிடம் சொல்லாமல் மறைத்ததற்காக எண்ணி எண்ணி வருந்துகிறார். ஆண்மை இல்லாத விவேக் பிரசன்னவின் மனைவி சாந்தினி திடீர் கர்ப்பமாகிறார் அது எப்படி என்பது ஒரு டூரிஸ்ட் ஆக படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து மறைந்த பிறகு இப்படம்
திரைக்கு வந்திருக்கிறது. டப்பிங் கூட அவருக்காக வேறு யாரோ குரல் கொடுத்திருக்கிறார்கள் ஆனாலும் அவர் தனது எதார்த்தமான நடிப்பை வழக்கம்போல் நினைவில் நிற்கும்படி செய்திருக்கிறார்.   நல்லவன் போல் நடித்து மோசடி செய்யும் கதாபாத்திரத்தில் பிரதோஷ், ஆனந்த நாக் நடித்திருக்கிறார்கள்.

இயக்குனர் பாக்யராஜின் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான சாந்தினி கடைசியாக விவேக் பிரசன்னாவின் ஜோடியாக நடிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார். பாக்யராஜின் கைபட்ட ஊர்வசி, அம்பிகா போல் இவரால் ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது ஏன் என்றுதான் தெரியவில்லை. துடிப்பான நடிப்பையோ, வெடுக்கென பேசி அடடா போட வைககும் ஒரு கதாபாத்திரத்தையோ சாந்தினி தேர்வு செய்து நடித்தால்தான் நிலைக்க முடியும்.

கதைக்கு எண்டு கார்டு போடும் வகையில் இன்ஸ்பெக்டர் ஆக வருகிறார் சஞ்சீவ். வழக்கம்போல் கடைசி கட்டத்தில் என்ட்ரி கொடுத்து கதையை முடித்து வைக்கிறார்.   எஸ் உமா மகேஸ்வரி தயாரித்திருக்கிறார்

ஆர். எஸ். ராஜ் பிரதாப் இசையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்ன குயில் சித்ரா பாடி இருக்கும் தாலாட்டு பாட்டு இனிமையாக காதில் ஒலிக்கிறது.

கதைக்கான ஒரு சூழலை காட்சிப்படுத்தி கவனத்தை ஈர்க்க முயன்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசன்

ஆபாச வீடியோவால் சீரழியும் பெண்களின் வாழ்க்கை பற்றி நிறைய கதைகள் வந்திருந் தாலும் விழிப்புணர் மட்டும் ஏற்பட்டதாக தெரியவில்லை இப்போது கூட அது போன்ற செய்திகளை அடிக்கடி காண முடிகிறது. இயக்குனர் தம்பிதுரை மாரியப்பன் இயக்கி உள்ள படமும் அது போன்ற ஒரு கதை என்றாலும் இது சொல்லப்பட வேண்டிய கதை தான்.

ட்ராமா – இளம் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை..   நடிப்பு: விவேக் பிரசன்னா, சாந்தினி, சஞ்சீவ், ஆனந்த நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, ஈஸ்வர், நிழல்கள், ரவி, வையாபுரி

தயாரிப்பு: எஸ் உமா மகேஸ்வரி

இசை: ஆர் எஸ் ராஜ் பிரதாப்

ஒளிப்பதிவு: அஜித் ஸ்ரீனிவாசன்

இயக்கம்: தம்பிதுரை மாரியப்பன்

பிஆர்ஓ: நிகில் முருகன்