மாடன் கொடை விழா 4/5.. கோலாகல கொடை விழா
வசனம் :- நெய்வேலி பாரதி குமார்
எடிட்டர் :- ரவிசந்திரன். ஆர்.
ஸ்டண்ட் :- மாஸ் மோகன்
டான்ஸ் :- ராக் சங்கர்
தயாரிப்பு நிர்வாகம் :-
குட்டி கிருஷ்ணன்
தயாரிப்பு
மேற்பார்வை :- சீனு
மக்கள் தொடர்பு :-
விஜயமுரளி
பாடல்கள்
(1) நெல்லை என்ற சொல்லை ……
இயற்றியவர் :- நெய்வேலி பாரதிகுமார்
பாடியவர் :- கோல்டு தேவராஜ்.
(2) மம்பட்டி நுனி …..
எழுதியவர் :- வே. ராமசாமி பாடியவர்கள்:-
பத்மஜா சீனிவாசன்சிபி சீனிவாசன்
(3) நேரமோ ……
பாடலாசிரியர் :-
கார்த்திக் கிருஷ்ணன்
பாடியவர் :-
சிபி சீனிவாசன்
(4) ஆகாசமும் ……
கவிஞர் :-
தமிழ்மணி
பாடியவர் :-
வைஷ்ணவி கண்ணன் & விபின் ஆர். மாடன் கொடை விழா 4/5.. கோலாகல கொடை விழா தமிழகமெங்கும் திரையரங்குகளில்
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது..
Maadan Kodai Vizha movie review
ஸ்டோரி…
தன் கிராமத்தை விட்டு சென்னையில் சென்று பணிபுரிகிறார் நாயகன் கோகுல்.. இவரது பாட்டிக்கு உடம்பு சரியில்லை என்று ஊருக்கு வர சொல்கிறார்கள்.. வந்த பிறகு தான் தெரிகிறது ஊரில் நின்று போன சுடலை மாடன் கொடை விழாவை நடத்த வேண்டும் என்கின்றனர்.
இவர்கள் குடும்பம் கொடை விழாவை நடத்தி வரும் நிலையில் இவரது தந்தை சூப்பர் குட் சுப்ரமணி கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதால் இனி கோகுல் தான் கொடை விழாவை நடத்த வேண்டும் என கிராமத்து மக்கள் விரும்புகின்றனர்.
இதன் இடையில் தந்தை ஒரு சிகிச்சைக்காக தனது சொந்த நிலத்தை (சுடலைமாடன் இருக்கும்) நிலத்தை வில்லனிடம் அடமானம் வைக்கவே அவரோ அதை தன் பெயரில் எழுதிக் கொள்கிறார். இதனால் நிலத்தை மீட்பதிலும் சிக்கல் வருகிறது.. நிலம் இல்லாமல் சுடலைமாடன் கொடை விழாவை நடத்த முடியாத சூழ்நிலையில் இருதரப்புக்கும் பிரச்சினை வருகிறது.. அப்போது எதிர்பாராத விதமாக வில்லன் அடியாளை கொன்று விடுகிறார் நாயகன் கோகுல் கெளதம்..
அதன் பிறகு என்ன நடந்தது? சுடலைமாடன் கொடை விழா நடந்ததா? ஜெயிலுக்கு சென்ற நாயகன் திரும்பி வந்தாரா? என்பதெல்லாம் மீதிக்கதை.. கேரக்டர்ஸ்…
கோகுல் கவுதம், ஷர்மிஷா, டாக்டர் சூர்ய நாராயணன், சூப்பர் குட் சுப்ரமணியம், ஶ்ரீபிரியா, பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா மற்றும் பலர்
பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள் எதிர்பார்ப்புக்கு உள்ளானதாக இருக்கும் ஆனால் நாம் எதிர்பார்த்த விஷயம் இருக்காது.. ஆனால் ‘மாடன்’ போன்ற படங்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தாலும் அனைத்து கலைஞர்களும் தங்களது பங்களிப்பை மிகச் சரியாக செய்திருக்கின்றனர்.
நாயகன் கோகுல், நாயகி சாருமிஷா சித்தப்பா கேரக்டர், திருநங்கை மாதிரி உள்ளிட்ட பலரும் தங்கள் நடிப்பில் முத்திரை பதித்துள்ளனர்..
நாயகி சாருமிஷா நெல்லை பாஷையில் சபாஷ் பெறுகிறார்.. இவரது துருதுருப்பான கேரக்டர் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்..
திரைக்குப் பின்னால் …… தயாரிப்பு :- கேப்டன் சிவபிரகாசம் உதயசூரியன் .
கதை, திரைக்கதை
இயக்கம்:- இரா. தங்கபாண்டி
( முதல் படம்).
கேமரா :- சின்ராஜ் ராம்
இசை : விபின். ஆர்.
தங்கப்பாண்டி என்பவர் இயக்கி இருக்கிறார்.. கிராமத்து மண் மனம் மாறாமல் மாடனை அழகாக கொடுத்திருக்கிறார்.. சின்ராஜ் ராம் என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் கிராமத்துக் காட்சிகளை அழகாக படம் பிடித்திருக்கிறார்..
இசையமைப்பாளர் விபின் தன் இசையின் மூலம் இந்த மாடனுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.. பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம்.. முக்கியமாக கிளைமாக்ஸ் சுடலைமாடன் லோ பட்ஜெட் காந்தாரா..