வருணன் விமர்சனம்… WAR FOR WATER But தீராத தாகம்
சென்னை ராயபுரம் பகுதியில் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகின்றனர் ராதாரவி மற்றும் சரண்ராஜ்.. இவர்கள் இருதரப்புக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் ஏரியாவை பிரித்துக் கொண்டு தண்ணீர் கேன் போட்டு வந்தாலும் இவர்களிடத்தில் வேலை செய்யும் ஆட்கள் அடிக்கடி சண்டை போட்டு கொள்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இவர்களின் அமோக வியாபாரத்தை கண்காணிக்கும் காவல்துறை அதிகாரி ஜீவா ரவி தானும் தண்ணீர் வியாபாரத்திற்கு முதலீடு செய்கிறேன் என வருகிறார்.. இதனால் பிரச்சனை மேலும் வலுக்கிறது..
இதன் பிறகு என்ன நடந்தது.? இருதரப்பும் சமாதானம் ஆனார்களா.? போட்டி பொறாமை பகை வளர்ந்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை.. கேரக்டர்ஸ்…
துஷ்யந்த் ஜெயபிரகாஷ், ஹரிப் பிரியா, கேப்ரில்லா, ராதாரவி, சரண்ராஜ், ஜீவா ரவி, மகேஸ்வரி மற்றும் பலர்..
அனுபவமிக்க நடிகர் ராதாரவி வழக்கம்போல யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ஆனால் சரண்ராஜ் திக்குவாயாக பேசி மிகைப்படுத்தப்பட்டு நடிப்பையே கொடுத்திருக்கிறார்.
முதல் ஜோடி : துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் & கேப்ரில்லா.. மற்றொரு ஜோடி பிரியதர்ஷன் & ஹரிபிரியா.. இரண்டு ஜோடிகளும் நல்ல நடிப்பை கொடுத்திருந்தாலும் முதல் ஜோடியை விட ஹரிபிரியா &:பிரியதர்ஷன் ஜோடி கெமிஸ்ட்ரியுடன் ஸ்கோர் செய்கிறது.
டிவி சீரியல்களில் ஹரிப்பிரியா வெளுத்து கட்டி இருப்பார்.. இதில் அடக்கி வாசித்திருக்கிறார்.. காரணம் இந்த படம் 10 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.. வழக்கமான அமைதியான நடிப்பை கொடுக்காமல் மிரட்டான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஜீவா ரவி..
இவர்களுடன்… வில்லனாக சங்கர்நாக் விஜயன், மகேஸ்வரி, அர்ஜுனா கீர்த்திவாசன், ஹைட் கார்த்தி, கெளசிக், கிரண்மயி ஆகியோரும் நடிப்பில் கவனம் ஈர்க்கின்றனர்.. டெக்னீசியன்ஸ்…
யாக்கை பிலிம்ஸ் மற்றும் யான் புரொடக்சன்
இயக்கம் : ஜெயவேல் முருகன்
இசை : போபோ சசி
ஒளிப்பதிவாளர் : ஸ்ரீராம் சந்தோஷ்
வசனம் : என்.ரமணா கோபிநாத்
ஒளிப்பதிவும் இசையும் படத்திற்கு பலம் சேர்த்தாலும் திரைக்கதையில் இன்னும் கூடுதல் மெனக்கடல் வேண்டும் இயக்குனரே..
இந்தப் படம் தொடங்கும்போது சத்யராஜ் வாய்ஸ் ஓவர் வருகிறது… தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்தி இந்த படத்தின் கதைகளம் தொடங்கி இருக்கிறது.. அப்படி என்றால் தண்ணீர் பற்றி ஏதோ மெசேஜ் சொல்ல வருகிறார்கள். என எதிர்பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லை.. தண்ணீர் வாட்டர் கேன் போடும் இளைஞர்கள் மோதல் அத்துடன் காதலையும் கொஞ்சம் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஜெயவேல் முருகன்..