-


Loading latest news...

தண்டகாரண்யம் சினிமா விமர்சனம்

 தண்டகாரண்யம் சினிமா விமர்சனம் 


 
நடிகர்கள் :- அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, சபீர் கல்லரக்கல், வின்சு சாம், பால சரவணன், முத்துக்குமார், அருள்தாஸ், யுவன்மயில்சாமி, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் :
கதை – இயக்கம் : அதியன் ஆதிரை
தயாரிப்பு : பா. ரஞ்சித், சாய் தேவானந், சாய் வெங்கடேசுவரன்
தயாரிப்பு நிறுவனங்கள்: நீலம் புரொடக்ஷன்ஸ்; மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
இசை : ஜஸ்டின் பிரபாகரன்
பாடல்கள் : உமாதேவி, அறிவு, தனிகொடி,
ஒளிப்பதிவு : பிரதீப் கலிராஜ்
படத்தொகுப்பு : செல்வா ஆர்கே
மக்கள் தொடர்பு : குணா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுவரப்பட்ட என்ற கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த அண்ணன் தினேஷ், மனைவி ரித்விகா, தம்பி கலையரசன், தாய், தந்தை என்று கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள்;. கலையரசன் பையூர் வனச்சாரகத துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது தன் காதலி வின்சு சாமுடன் வலம் வருகிறார். வனத்துறையில் நிரந்தர பணி கிடைக்கும் என  எதிர்பார்ப்புடன் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்து உழைத்து, ஏழு ஆண்டுகள் செல்கின்றன. ஆனால் அண்ணன் தினேஷால் வனத்துறையில் உயர் அதிகாரி அருள்தாஸ், உதவியுடன் பணபலமும், அரசியல் செல்வாக்கு மிக்க முத்துக்குமார் வனத்துறையில் நடத்தும் கஞ்சா கடத்தலை வெளிப்படுத்தியதால் மற்றும் ஒரு பிரச்சினையின் காரணமாக அவர்களுடன் ஏற்பட்ட மோதலினால் அவரது தம்பியின் தற்காலிக வனக்காவலர் பணி பறிபோகிறது. இந்நிலையில், கலையரசன், ராணுவத்தில் சேரலாம் என்று ஒருவர் கூறுகிறார். தம்பிக்கு ராணுவத்தில் பணி கிடைக்க வேண்டும் என அண்ணன் பாடுபடுகிறார். ராணுவத்தில் பின்கதவு வழியாக சேருவதற்காக இடைத்தரகர்களுக்கு பணம் கொடுக்க, விவசாய நிலத்தை விற்று ஐந்து லட்சம் பணத்தை இந்த நபரிடம் கொடுக்கிறார். கலையரசன், ஜார்கண்ட் மாநிலம் ஜோத்பூர் சென்று ஐஎஸ்ஜிஎஸ் போலீஸ் பயிற்சி மையத்தில் சேர்கிறார். அங்கு அவரை போல பால சரவணனும் மற்றும் பல இளைஞர்களும் இந்த ஐஎஸ்ஜிஎஸ் போலீஸ் பயிற்சி மையத்தில் சேர்கிறார்கள். அங்கே உயர் அதிகாரிகள் தலைமையில் ஒரு குழு இவர்களிடம், ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு விட்டு சரணடைந்த நச்சல் என்று யார் ஒப்புக் கொள்கிறார்கள் அவர்களுக்கு மறுவாழ்வு, ராணுவப் பயிற்சி, வேலைவாய்ப்பு என்று ஆசை வார்த்தை கூறுகிறார்கள். மேலும் அவர்கள் மட்டும் தான் மேலே பயிற்சிக்குச் செல்லலாம் என்று ராணுவ அதிகாரிகள் கூறுகிறார்கள். இப்போது வேறு வழியில்லாமல் அனைவரும் அதற்கு ஒப்புக்கொண்டு, சரணடைந்த நக்சல்கள் என்று உள்நுழைகிறார்கள். சரணடைந்த நக்சல் பாரிகள் பற்றிய செய்தி பத்திரிகையில் வருகிறது. மறுபக்கம், இதைத் தெரிந்து கொண்ட உள்ளூர் போலீஸ்காரர்கள் கலையரசன் குடும்பத்தினரை சித்திரவதை செய்கிறார்கள். வனத்துறை அதிகாரி அருள்தாஸ், மற்றும் முத்துக்குமார் தினேசை பழிவாங்க அவரை கடத்தி துன்புறுத்துகிறார்கள். இவர்களிடம் இருந்து தப்பித்து காட்டில் மறைந்து கொண்டு அவர்களை பழிவாங்குகிறார். ஐஎஸ்ஜிஎஸ் போலீஸ் பயிற்சி மையத்தில் அதிகாரி யுவன் மயில்சாமி கீழ், கடுமையான பயிற்சி ஈடுபட்டு வரும் கலையரசன், வட மாநிலத்தை சேர்ந்த சக தோழன் ஷபீர் கல்லரக்கல் பலவித கஷ்டங்களை அனுபவித்தாலும், பச்சை நிற ராணுவ உடை அணிந்த வேலையோடு தான் ஊர் திரும்ப வேண்டும் என்ற மனநிலையில் அங்கே கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இதற்கிடையே, கலையரசனும், ஷபீர் கல்லரக்கல் ஒரு கட்டத்தில் உயிர் நண்பர்களாக மாறுகிறார்கள். இந்நிலையில் அப்பகுதி மாநில சட்டமன்றத் தேர்தல் வருவதால், வெளியே நக்சல் பாரிகளால் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க சரணடைந்தவர்களை ராணுவ அதிகாரிகள் போலி என்கவுண்டர் செய்து பலிகொடுக்கத் திட்டமிடுகிறார்கள். அதன்படி ஒரு குழுவுக்கு பணி கிடைத்து விட்டது என்று பொய்யான தகவல் கூறி அவர்களை அனுப்புகிறது. இந்தக் குழுவில் ஷபீர் கல்லரக்கல் இடம்பெற்றுள்ளார். வழியில் அவர்கள் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். இந்த செய்தியை பத்திரிகையில் காணும் கலையரசன் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். அந்த இடத்திற்கு வருபவர்கள் உயிரோடு எங்கும் செல்ல முடியாது, என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார். அவர்கள் பிடியில் இருந்து எப்படியாவது எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் முயற்சி செய்கிறார். அடுத்த போலி என்கவுண்டரில் தேர்வாகும் அவர் நிலைமை என்ன? ஊரில் காட்டில் மறைந்து வாழும் அண்ணன் தினேஷ் நிலைமை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.