Kombuseevi: கேப்டன் மகனுக்கு ஒரு சூப்பர் ஹிட்!.. கொம்பு சீவி டிவிட்டர் விமதயாரிப்பு : ஸ்டார் சினிமாஸ்
இயக்கம் : பொன்ராம்
நடிப்பு : சண்முகபாண்டியன், சரத்குமார், தார்ணிகா, முனிஸ்காந்த், காளிவெங்கட்
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியெம்
இசை : யுவன்ஷங்கர்ராஜா
வெளியான தேதி : டிசம்பர், 19, 2025
நேரம் : 2 மணிநேரம் 19 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
வைகை அணை கட்டப்பட்டதால் தங்கள் நிலங்களை, வீடுகளை இழந்த சில கிராம மக்கள் வாழ்வாதாரத்துக்கு போராடுகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அந்த ஏரியா பெரிய மனிதரான சரத்குமாரும், அவர் மருமகன் சண்முகபாண்டியனும் கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள். போலீஸ் சும்மா இருக்குமா? பிரச்னை வருகிறது? அது எதில் போய் முடிகிறது என்பது கொம்புசீவி படக்கதை. 1990களில் இந்த கதை நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் இயக்குனர் பொன்ராம் இயக்கி இருக்கிறார். ர்சனம்!
உள்ளூர்
/
சினிமா
/
விமர்சனம்
/
கொம்பு சீவி
கொம்பு சீவி
ADDED : 12 hours ago
Follow Google
கொம்பு சீவி
தயாரிப்பு : ஸ்டார் சினிமாஸ்
இயக்கம் : பொன்ராம்
நடிப்பு : சண்முகபாண்டியன், சரத்குமார், தார்ணிகா, முனிஸ்காந்த், காளிவெங்கட்
ஒளிப்பதிவு : பாலசுப்ரமணியெம்
இசை : யுவன்ஷங்கர்ராஜா
வெளியான தேதி : டிசம்பர், 19, 2025
நேரம் : 2 மணிநேரம் 19 நிமிடம்
ரேட்டிங் : 2 / 5
வைகை அணை கட்டப்பட்டதால் தங்கள் நிலங்களை, வீடுகளை இழந்த சில கிராம மக்கள் வாழ்வாதாரத்துக்கு போராடுகிறார்கள். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, அந்த ஏரியா பெரிய மனிதரான சரத்குமாரும், அவர் மருமகன் சண்முகபாண்டியனும் கஞ்சா வியாபாரம் செய்கிறார்கள். போலீஸ் சும்மா இருக்குமா? பிரச்னை வருகிறது? அது எதில் போய் முடிகிறது என்பது கொம்புசீவி படக்கதை. 1990களில் இந்த கதை நடக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் இயக்குனர் பொன்ராம் இயக்கி இருக்கிறார்.
பொன்ராம் படங்களுக்கே உரிய தென்மாவட்ட கதைக்களம், காமெடி கலந்த திரைக்கதை, தெனாவெட்டாக இருக்கும் கேரக்டர்கள், மண் மணத்துடன் கூடிய இசை, நக்கல், நையாண்டி இதெல்லாம் கொம்புசீவியிலும் இருக்கிறது. ஏகப்பட்ட கிராமத்து மனிதர்கள் வருகிறார்கள். அடாவடி மாமாவாக வரும் சரத்குமார், அட்டகாசம் செய்யும் மருமகன் சண்முக பாண்டியன் சம்பந்தப்பட்ட சீன்கள் தான் படத்தில் அதிகம். அந்த ஊருக்கு போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார் ஹீரோயின் தார்ணிகா (நாட்டாமை டீச்சர் ராணியின் மகள்). அவர் மீது ஹீரோவுக்கு லவ் வருகிறது. ஆனால் போலீஸ் துறையோ மாமா, மருமகனை டார்ச்சர் செய்கிறது. அப்புறம் ஆந்திராவுக்கு கஞ்சா வியாபாரம் என கதை செல்கிறது. கஞ்சா கடத்தல், போலீஸ் விசாரணை, துரத்தல் தான் பெரும்பாலான படத்தை ஆக்கிரமிக்கிறது.
கிராமத்து இளைஞனாக முந்தைய படங்களை விட நன்றாகவே நடித்து இருக்கிறார் ஹீரோ சண்முகபாண்டியன். அவரின் காதல் காட்சிகள், ஆக் ஷன் காட்சிகள், பாடல் காட்சிகள் ஓகே. ஆனாலும், இன்னமும் களம் இறங்கி கலக்கியிருக்கலாம். மாமா சரத்குமாருக்கும் அவருக்குமான பாசம், இருவரும் சேர்ந்து செய்கிற அலப்பறை ஓகே என்றாலும், பல இடங்களில் வொர்க் அவுட் ஆகவில்லை. சிரிப்பும் வரவில்லை. டியூட் படத்தில் இதேபோல் மாமா கேரக்டரில் கலக்கியிருந்தார் சரத்குமார். கொம்புசீவியில் அது செட்டாகவில்லை. அவர் நடிப்பில், கெட்அப்பில் அவ்வளவு செயற்கைதனம். அதிலும் அந்த கிளைமாக்ஸ் ஏமாற்றம்.
ஹீரோயினாக வருகிற தார்ணிகா சில சீன்களில், ஒரு பாடல் காட்சிகளில் கவர்கிறார். மற்றபடி, பெரும்பாலான சீன்களில் போலீஸ் உடையில் நிற்கிறார். போலீஸ் எஸ்.பியாக வில்லனாக மிரட்டியிருக்கிறார் மலையாள நடிகர் சுஜித் சங்கர். ஆனாலும், ஒரு எஸ்பி இப்படியெல்லாம் நடந்து கொள்வாரா என்று எழும் கேள்வி, அவர் நடிப்பை பின்னுக்கு தள்ளுகிறது. கடைசியில் சில தெலுங்கு வில்லன்கள் காமெடி, வில்லத்தனம் செய்து கடுப்பேற்றுகிறார்கள். இன்னமும் எத்தனை படத்தில் இப்படி ரெட்டி கேரக்டர்களை காண்பிப்பார்களோ?
ஆனாலும் பழைய பொன்ராம் படங்களில் இருந்த மேஜிக், அந்த அதிரடி காமெடி இதில் மிஸ்சிங். காமெடி பண்ண கல்கி, முனிஸ்காந்த், காளிவெங்கட், ஜார்ஜ் என ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். ஏதேதோ செய்கிறார்கள். ஆனால், சிரிப்புதான் வரவில்லை. இதுதான் படத்தின் பெரிய மைனஸ்.
தேனியை அழகாக காண்பித்துள்ளது பாலசுப்ரமணியம் கேமரா. பாடல் காட்சிகளிலும் அவர் ரசனை தெரிகிறது. யுவன் ஷங்கர் ராஜா நிறைய ஏமாற்றம் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக, பின்னணி இசை ஒட்டவே இல்லை. இளையராஜா பாடல் கூட அழுத்தமாக இல்லை. அந்த கிராமத்து டூயட், கருப்பன் பாடல் பரவாயில்லை ரகம். யுவனுக்கு என்னாச்சு?
பொன்ராம் முந்தைய படங்களை நினைத்து சென்றால், பெரிய ஏமாற்றம் கிடைக்கும். அதிலும் விவசாயம் பண்ண முடியாமல் போனதால் கஞ்சா வியாபாரம் என்ற கருத்தை ஏற்க முடியவில்லை. இது உண்மை கதை வேறயாம். படத்தில் கஞ்சா சம்பந்தப்பட்ட அவ்வளவு சீன்கள். அதில் போதை பொருள் உபயோகிப்பது தவறானது என்ற வாசகம் கூட வரவில்லை. படத்தின் தொடக்கம் பல படங்களில் பார்த்தது. கிளைமாக்ஸ் ரொம்பவே சுமார். புது சீன், பிரஷ் காமெடி இல்லாமல் படத்தை எப்படி நகர்த்துவது என்று தெரியாமல் எங்கேயோ சுற்றி, எதையோ பேசி இழுத்து இருக்கிறார்கள். கொஞ்சம் ஸ்கிரிப்டில் காமெடியில் கவனம் செலுத்தியிருந்தால் சண்முகபாண்டியனுக்கு வெற்றி படமாக இருந்து இருக்கும்.
