-


Loading latest news...

oho endhan baby movie review

 oho endhan baby movie review 


தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் தம்பியை ஹீரோவாக்கி அழகு பார்த்துள்ளனர்.


அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் அவருடைய தம்பியை ஓஹோ எந்தன் பேபி படத்தின் மூலம் ஹீரோ ஆக்கியுள்ளார், அவரின் முயற்சி வெற்றி பெற்றதா, பார்ப்போம் . ஹீரோ ருத்ரா ஒரு உதவி இயக்குனராக இருந்து, இயக்குனராக வேண்டும் என நடிகர் விஷ்ணு விஷாலை சந்தித்து கதை சொல்ல வருகிறார், அவர் சொன்ன 2 கதையும் பெரிதாக பிடிக்காமல் ஒரு காதல் கதையை கேட்கிறார் விஷ்ணு.


உடனே ருத்ரா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த காதல் வாழ்க்கையையே ஒரு கதையாக சொல்ல, முதல், இரண்டு என தொடர் காதல் தோல்வியில் முடிய மூன்றாவது காதலாக வரும் மித்திலாவுடன் திருமணம் வரை செல்ல முடிவு செய்கிறார்.  ஆனால், இவர்கள் காதல் ஆரம்பத்தில் நன்றாக சென்றாலும் பிறகு ஏற்படும் மனகசப்பால் இருவருமே பிரிய, அதோடு கதையை நிறுத்துகிறார் ருத்ரா.



இது தான் கிளைமேக்ஸ் என விஷ்ணுவிடம் சொல்ல, விஷ்ணுவோ இது இடைவேளை, இரண்டாம் பாதிக்கு நீ உன் காதலியை கண்டிப்பாக சந்தித்து அங்கு என்ன நடக்கிறது அது தான் இரண்டாம் பாதி என சொல்ல, வேறு வழியில்லாமல் ப்ரேக் அப் ஆன காதலியை ருத்ரா சந்திக்க செல்ல பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.


படத்தை பற்றிய அலசல்

முதலில் நாயகன் ருத்ரா அறிமுக படம் என்றாலும் அது கொஞ்சம் கூட தெரியாமல் நடித்துள்ளார், ஷேவ் செய்தால் ஸ்கூல் பையன், லைட் தாடி விட்டால் காலேஜ் பையன், புல் தாடி வைத்தால் வேலைக்கு போகிற பையன் என முதல் படத்திலேயே கவனம் ஈர்க்கிறார்.  இதை தாண்டி படத்தில் சன் டிவி பார்த்தசாரதி சர்ப்ரைஸ் , இவரும் நடிக்க வந்துட்டாரா என்று தோன்றுகிறது, அவரும் சிறப்பாக நடித்துள்ளார். கஸ்தூரி, கருணாகரன், ருத்ரா நண்பர் என அனைவருமே நன்றாக நடித்துள்ளனர்.  ஆனால், இவர்கள் எல்லோரையும் தாண்டி நம் மனதில் நிற்பது படத்தின் நாயகி மித்திலா தான். சோகம், சந்தோஷம், எமோஷ்னல் அதிலும் தன் மாமாவின் குணம் தன் காதலனுக்கே இருப்பதை அறிந்து அவர் பயந்து வெறுக்கும் இடமெல்லாம் தமிழ் சினிமாவிற்கு நல்ல அறிமுகம்.



மூன்று காதல் அதில் முதல் 2 காதல் காமெடி மட்டும் போதும் என்று நினைத்துவிட்டார் இயக்குனர் கிருஷ்ணா, ஆனால், பள்ளி காதல் என்று ஏதோ பி கிரேட் படம் போல் வரும் அந்த காட்சிகள் ஏன் இப்படி என்றே கேட்க தோன்றுகிறது, இரண்டாவது காதல் சென்சிட்டிவ் ஆன விஷயத்தை காமெடி என்றாலும் அதை கேலியாக காட்டாமல் இருந்தது நன்று. விஷ்ணு விஷால் படத்திலும் ஹீரோவாகவே வருகிறார், அவரிடம் கதை சொல்வதிலேயே படம் தொடங்குவது போல் காட்டியுள்ளனர், இதை விட விஷ்ணு தன் வாழ்க்கையில் செய்த மிஸ்டேக் மற்றும் தான் இழந்த வாய்ப்புக்களுக்கு ஏதோ ஜெஸ்டிபை செய்வது போல் அவருக்கான காட்சியை உருவாக்கினார்களா இல்லை உருவாக்கி கொண்டாரா தெரியவில்லை. படம் நல்ல காதல், மோதல் அதை தேடி செல்வது என இடைவேளை வரை நன்றாக சென்றாலும், அதன் பின்பு எந்த ஒரு காட்சியிலும் பெரிய அழுத்தம் இல்லை, அதிலும் கிளைமேக்ஸ் ஷுட்டிங் வைத்தே இவர்கள் இணைவது போன்று எடுத்த சீன் எல்லாம் இப்போது சிரிக்கவா இல்லை எமோஷ்னல் ஆகவா என்ற குழப்பமே நீடிக்கிறது.


ருத்ரா தன் தவறை உணர்ந்து ரியலைஸ் செய்வது போல் எந்த காட்சியும் இரண்டாம் பாதியில் பெரிய அழுத்தம் இல்லை, மிஷ்கின் சொன்னவுடன் அவர் மனம் மாறுவது அநியாய சினிமாத்தனம். டெக்னிகலாக படம் சூப்பராகவே உள்ளது, ஒளிப்பதிவு, இசை, பாடல்கள் அனைத்தும் சூப்பர் .  

படத்தின் முதல் பதில் செம ஜாலியாக செல்கிறது. மிஷ்கின் வரும் காட்சிகள். நடிகர், நடிகைகள் நடிப்பு. இரண்டாம் பாதி அழுத்தமில்லாத காட்சிகள்.


ஹீரோயினையும் ஏதோ தவறு செய்வது போல் காட்டியது என்ன நியாயம் தெரியவில்லை.


மொத்தத்தில் இந்த ஓஹோ எந்தன் பேபி இது ஜென் சி காதலா இல்லை 90ஸ் காதலா என்ற குழப்பத்துடன் ஒரு ஆவரேஜ் வாட்ச் ஆக முடிகிறது.