-


Loading latest news...

தாத்தாவுக்கு தங்கப்பதக்கம் போல் விக்ரம் பிரபுவுக்கு இந்த ரெய்டு

 தாத்தாவுக்கு தங்கப்பதக்கம் போல் விக்ரம் பிரபுவுக்கு இந்த. ரெய்டு..

விக்ரம் நடிப்பில் வெளிவந்த சாமி . அஜித் நடித்த அமர்க்களம் படத்தையும் இன்னும் சில தமிழ் படங்களையும் சேர்த்து செய்த உணவு தான் இந்த ரெய்டு...                                                                                                    ஆதரவற்றோர் இல்லத் தில் வளர்ந்து படித்து போலீஸ் அதிகாரியான வர் விக்ரம்.பிரபு. நகரில் ரவுடிகளை ஒழித்து  கிளின் சிட்டி ஆக்க முடிவு செய்கிறார். ரிடயர்டு  ரவுடி வேலு பிரபாகரனிடம்   அடியாட்களாக இருந்த ரிஷி, சவுந்தராஜன்  டிரெண்டிங் ரவுடிகளாக  வலம் வருகின்றனர். ஊரில் அட்டூழியம் செய் யும் அவர்களை நய்ய புடைக்கிறார் விக்ரம்பிரபு. இதில் டென்ஷன் ஆகும் ரிஷி, சவுந்தர்ராஜன் விக்ரம் பிரபுவின் காதலி யை சுட்டு வீழ்த்துகின்ற னர். ஆவேசம் அடைந்த விக்ரம்.பிரபு எல்லா ரவுடி களையும் என்கவுன்ட்டர் செய்து பழிக்கு பழி வாங்குகிறார்.

டாணாக்காரன் படத் துக்குப் பிறகு விக்ரம் பிரபுக்கு கைகொடுக்கும் ஆக்ஷன் படமாக வந்திருக். கிறது ரெய்டு.

போலீஸ் அதிகாரியாக விறைப்பாக வரும் விக்ரம் பிரபு கடைசி வரை அதே விறைபோடும் முறைப் போடும் இருக்கிறார்.  ரவுடிகளுடன் சண்டை காட்சிகளில்  பெண்டு நிமிர்த்துகிறார் கிளை மாக்சில் ரிஷியுடன் மோதுவது பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ரீ என்ட்ரி தந்திருக் கிறார் ஶ்ரீ திவ்யா.  பெரி தாக வேலை இல்லா விட்டாலும் கதையின் முக்கிய பாத்திரமாக வரு கிறார். ஆனால் இடை வேளைக்கு பிறகுதான் திரையில் தலையே காட்டு கிறார். அதுவரை அவரது பாத்திரம் சஸ்பென் சாகவே வைக்கப்பட் டுள்ளது.

ரவுடிகளாக வரும் சவுந்தர் ராஜன், ரிஷி இருவரும் பக்கா தோஸ்த்தாக வலம் வருகிறார்கள்.

முன்னாள் போலீஸ் அதிகாரி.யாக செல்வா நடித்திருக்கிறார். படத்தில் ஆக்ஷன்  அதிகம்  இருக் கிறது காமெடிக்கு தான் ஏக பஞ்சம்.

ஶ்ரீ திவ்யாவின் தங்கை யாக வரும் அனந்திகா சுட்டித்தனமாக வட்ட மடித்து கவர்கிறார்.

எஸ்.கே. கனிஷ்க், ஜி.மணி கண்ணன் தயாரித்திருக கின்றனர்

சாம் சி எஸ் இசை காட்சி. யில் விறுவிறுப்பை சேர்த். திருக்கிறது. மெலடி பாடலும் காதில் இனிதாக ஒலிக்கிறது.

முத்தையாவிடம் உதவி இயக்குனராக பணி யாற்றிய கார்த்தி இப்படத்தை ஆக்ஷன் அதிரடி  குறையாமல் இயக்கியிருக்கிறார்.

காட்சிகள் நிறைய ரிபீட் ஆவதுபோல் இருப்பதால்  படம் நீண்ட நேரம் பார்க்கும் டயர்டை  தருகி றது. இன்னமும் சில நிமிடங்களுக்கு கத்தரி போட்டால் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும்.

ரெய்டு.....