-


Loading latest news...

யார் இந்த அர்ஜுன் தாஸ்

 யார் இந்த அர்ஜுன் தாஸ்


 
 அர்ஜுன் தாஸ் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2019-ம் வெளியான "கைதி" திரைப்படத்தில் ஒரு வில்லன் நடிகராக நடித்து தமிழ் திரையுலகில் தனி ஒரு மனிதனாக கால் பதித்து அறிமுகமானவர். இந்த படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்றார். கைதி படத்தில் ஒரு குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், அந்த படத்தில் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் மூலம் தமிழில் பிரபலமாகியுள்ளார். பின்னர் விஜய்யின் "மாஸ்டர்" படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளார் 
தன்னுடைய குரலிலும் மக்களை திரும்பி பார்க்க வைத்தார் கதைதான் ஹீரோவாக இருக்க கதையின் நாயகனாகவும் கதாநாயகனாக நடித்துள்ள படம் தான் BOMB திரைப்படம் படத்துக்காக தன்னை மாறுபட்ட வேடங்களில் தன்னை நிலை நிறுத்து உள்ளார் அர்ஜூன் தாஸ் இவருக்காக தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர் 

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அஜித்தின் குட் பேட் அக்னி படத்தில் இரட்டை வேடத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார்..

தற்போது BOMB பாம் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். இதனை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற படத்தை இயக்கிய விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்..

இதில், அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடிக்க இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்..

இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க இப்படம் வருகிற செப்டம்பர் 12ந் தேதி வெளியாகவுள்ளது..

திரையரங்குகளில் அர்ஜுன் தாஸ் போடும் பாம் படத்தைக் காண ரசிகர்களுடன் ஆவலுடன் காத்திருக்கின்றனர்..வரும் காலங்களில் திரை உலகத்துல ஜொலிப்பார் அர்ஜுன்தாஸ்