-


Loading latest news...

ஆரியன் (பட விமர்சனம்)

 ஆரியன் (பட விமர்சனம்) படம்:


ஆரியன்

நடிப்பு: விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், மானஷா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ்

தயாரிப்பு: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சுபபாரா, ஆரியன் ரமேஷ்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: ஹரிஷ் கண்ணன்

இயக்கம்: பிரவீன் கே.

பி ஆர் ஓ: சதீஷ் (AIM) எழுத்தாளர் செல்வ ராகவன் போலீசுக்கு சவால் விட்டு ஒவ்வொரு கொலையாக செய்கிறார். கொலை நடப்பதற்கு முன்பே அதற்கான க்ளூவை வெளிப்படையாக டிவியில் அறிவிக்கிறார். அந்த கொலையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி விஷ்ணு விஷால் தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறார் அவரால் காப்பாற்ற முடிந்ததா என்பதற்கு விறுவிறுப்பாக பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ராட்சஷன் படத்தில் கொலைகாரன் யார் என்பது கடைசி வரை தெரியாது. ஆனால் ஆரியன் படத்தில் வில்லன் செல்வராகவன்தான் கொலைகாரன் என்பதை முன்கூட்டியே அறிமுகப்படுத்துகிறார்கள். அவர் எப்படி போலீஸ் கண்ணில் மண்ணை தூவி விட்டு கொலைகளை செய்கிறார் என்பதுதான் படத்தில் யூகிக்க முடியாத காட்சிகள் அடுத்து கொல்லப்படப் போவது யாரென்பது தெரிந்தவுடன் விஷ்ணு விஷால் தனது போலீஸ் டீமை முடுக்கிவிட்டு கொலையாகபோகும் நபரை தேடி அலைவது எப்படியாவது அந்த நபரை காப்பாற்றி விட மாட்டாரா என்ற பதற்றம் அரங்கில் தொற்றிக் கொள்கிறது.

செல்வராகவன் யாரை கொலை செய்கிறார் என்ற கேள்விக்கு அதிர்ச்சியான பதில் கிடைக்கிறது. கொல்லப்படும் ஒவ்வொரு நபரின் பின்புலத்தை கேட்டதும் அரங்கே ஷாக் ஆகிறது நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். டிவியில் நேர்காணல் காணும் பத்திரிகையாளராக அவர் நடித்திருக்கிறார். அவரது நேர் காணல் நிகழ்ச்சியில் செல்வராகவன் செய்யும் அந்த அதிர்ச்சி சம்பவமே அதிரடி தொடக்கம். இதற்குமேல் இந்த கதை சொன்னால் சஸ்பென்ஸ் ஓப்பனாகிவிடும்.. அந்த அனுபவத்தை தியேட்டரில் பெறுவது நல்லது.

மேலும் மானஷா சவுத்ரி, கருணாகரன், அவினாஷ் நடித்திருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் சுபபாரா, ஆரியன் ரமேஷ் தயாரித்திருக்கின்றனர்.

ஜிப்ரான் இசை காட்சிகளுக்கு பலம்

ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு டென்ஷனை ஏற்றுகிறது. கவுதம் மேனன் உதவியாளர் பிரவீன் கே. இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். சமூகத்துக்கு ஒரு மெசேஜை உணர்த்துவதற்கு முதல் படத்திலேயே ரிஸ்க் எடுத்திருக்கிறார்.

ஆரியன் –  டைட்டிலிலேயே சஸ்பென்ஸை  ஒளித்து வைத்திருக்கிறார்கள்..