YOLO move Review
படம்: யோலோ
நடிப்பு: தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, வி ஜே நிக்கி, சுபாஷினி
கண்ணன், யுவராஜ் கணேசன், பிரவீன், சுவாதி, திவாகர், கலைக்குமார், நிதி, சுப்பிரமணியன், கோபாலகிருஷ்ணன்,
தயாரிப்பு: மகேஷ் செல்வராஜ்
இசை: சகிசானா சேவியர்
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
இயக்கம்: எஸ். சாம்
பிஆர்ஓ: சதீஷ் (AIM) யூட்யூபில் பிராங்க் வீடியோ வெளியிடுபவர் சிவா (தேவ்), தந்தையின் சொல்லை மீறாமல் அவர் சொல்படியே நடக்கும் மகள் தீக்ஷி (தேவிகா). தீக்ஷிக்கு தந்தை மாப்பிள்ளை பார்க்கிறார். மாப்பிள்ளைக்கு தீக்ஷியை பிடித்திருக்கிறது. ஆனால் அவரது குடும்பத்தினர் தீக்ஷிக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது அவரை எங்கள் குடும்பத்தில் தள்ளப் பார்க்கிறீர்களா என்று அதிர்ச்சியாக ஒரு தகவல் சொல்லி வெளியேறுகிறார்கள். தீட்சிக்கும், தேவுக்கும் அவர்களுக்கே தெரியாமல் திருமணம் நடந்து அது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவர்களது திருமணம் இவர்களுக்கே தெரியாமல் எப்படி நடந்தது, இவர்கள் இருவரும் சந்தித்து எடுத்த முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.
ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாத தேவ், தேவிகா இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற ஒரு குண்டை போட்டு கதையை சஸ்பென்சாக தொடங்குகிறார்கள். இது என்னடா புதுசா இருக்கு என்று ஆர்வத்துடன் அடுத்தடுத்த காட்சிகள் எப்படி செல்லப் போகிறது என்பதற்கு ஆர்வம் எழுகிறது. ஆனால் காட்சிகள் றெக்கை கட்டி பறக்கவில்லை. புதுமுக ஹீரோவாக தேவ் அறிமுகமாகியிருக்கிறார் நடிப்பில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று யார் சொன்னார்களோ தெரியவில்லை சற்று ஸ்லோ ஸ்பீடிலேயே நடிக்கிறார்.
பேய் போல் ட்ரோனில் செட்டிங் செய்து அதைப் பறக்கவிட்டு ஒரு பெண்மணியை அதிர்ச்சியில் மூச்சு திணறடிக்கும் காட்சியில் தேவ் பரபரப்பாக்குகிறார்.
திடீரென்று தேவிகா வந்து, ‘என்னை நீ எப்போது திருமணம் செய்தாய்’ என்று கேட்டு தேவுக்கு அதிர்ச்சி தர, அதைக் கேட்டு ஒன்றும் புரியாமல், ‘ இது எப்படி நடந்தது என்று எனக்கு தெரியாது ‘ என சொல்லி நழுவ முயலும் போதும் இவர்களுக்குள் ஏதோ ஒரு விஷயம் மறைந்திருக்கிறது என்பதை சூசகமாக சொல்கிறார்கள்.
சரி எப்படித்தான் தேவ், தேவிகா திருமணம் நடந்தது என்பது இங்கும் சஸ்பென்ஸ் தான். அதை உடைத்தால் ஸ்பாய்லர் ஆகிவிடும்.
இது ஒரு ஒரு பேய் கதையா என்றால்.. ‘இருக்கு ஆனா இல்ல..’ என்பது போல் டைரக்டர் காட்சிகளை அமைத்து நகர்த்துகிறார்.பொய்யாக திருமணம் செய்த தேவ், தேவிகா உண்மையிலேயே காதலராக மாறுவார்கள் என்பது மட்டும் ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. இவர்களுக்கு திருமணம் நடக்கப்போகிறது என்று எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று இருவரும் விவாகரத்து வாங்கிக் கொண்டு வந்து நிற்பது ட்விஸ்ட்
காமெடி வேஷத்தில் விஜே நிக்கி நடித்துள்ளார். செயற்கையான காமெடி செய்து அசட்டு சிரிப்பு வரவழைக்கிறார்.
மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கிறார்.
மெலடி மெட்டுக்களை சகிசானா சேவியர் அமைத்துள்ளார். ஒரு குத்து பாட்டாவது வரும் என்று பார்த்தால் என்டு கார்டின்போது பாடல் போடுகிறார்கள்.
சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு பளபளக்கிறது.
தேவையில்லாமல் நித்தியானந்தா சாமியாரை வம்புக்கு இழுத்திருக்கிற இயக்குனர் எஸ். சாம். கதையை மேம்போக் காகவே சொல்லி இருப்பதால் லயிக்க முடியவில்லை.
yolo என்றால் you only live.once அதாவது வாழ்க்கை ஒருமுறை தான் என்ற அர்த்தத்தில் டைட்டில் அமைக்கப்பட்டிருக்கிறது
யோலோ – பொழுது போகும் போகாதவர்களுக்கு..